Archive For The “பொது” Category

பதிப்பிக்கப்பட இருக்கும் என் அல்புனைவு நூல் இதுவும் அதுவும் உதுவும்-இல் இருந்து ———————————————————————— — — தொண்ணூறுகளின் மத்தியில் கி.கஸ்தூரிரங்கன் கணையாழி ஆசிரியர் பொறுப்பில் இருந்து விடுபட்டு ஒரு வருடம் ராம்ஜி கணையாழி ஆசிரியராக இருந்தபோது பின்னணியில் நானும் தீவிரமாகச் செயல்பட நேர்ந்தது. ராம்ஜி என் நெருங்கிய குடும்ப நண்பர். நானும் அவரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலமை அலுவலகத்தில் அதிகாரிகளாக இருந்தோம். பாரதி மேல் தீவிர ஈடுபாடு கொண்டவர். (நான்கு ஆண்டுகளுக்கு முன் இயற்கை எய்தினார்.)….

‘ஏதோ ஒரு ’. என் அல்-புனைவு கட்டுரைகளின் தொகுப்பு. என் மற்ற அல்-புனைவுகளோடு இதுவும் நூலாகிறது. புத்தகத்திலிருந்து ஒரு பகுதி இங்கே – ————————————————————————————————— ஏதோ ஒரு பக்கம் இரா.முருகன் (சீரங்கத்துச் சிக்கலார் பாரி நாயனத்தை ஊதி முடித்துக் கிளம்பிப் போய்விட்டார். அந்த மேடை வெறுமையாகவே இருக்கும். ஜில்ஜில் ரமாமணி ஓரமாக ஆடலாம்) . பயண இலக்கியம் எழுத சென்ஸ் ஆப் ஹ்யூமர், கொஞ்சம் பேங்க் பாலன்ஸ், விக்ஸ் இன்ஹேலர், எலாஸ்டிக் போகாத ஜட்டி, எழுதியதை பிரசுரம்…

”பூப்பந்து (பாட்மிண்டன்) போட்டி நடத்த தில்லியில் சூழல் உகந்ததாக இல்லை. புகைமூட்டம் கவிந்த மைதானத்தில் பறவைகள் எச்சமிடுகின்றன.” – டென்மார்க் நாட்டு பூப்பந்து வீராங்கனை மியா ப்ளிச்பெல்ட் நான் தில்லியில் முப்பது வருடம் முன் வசித்தபோது குளிர் காலத்தை வருடாவருடம் ஆவலோடு எதிர்பார்த்திருந்தோம். கிட்டத்தட்ட சுத்தமான காற்றும், பின்கழுத்திலும் செவிமடலிலும் இதமாகப் படிந்து குறுகுறுக்க வைத்து சதா கூட வரும் மெல்லிய மூடுபனியுமாக தில்லி சுவர்க்கமாகத் தெரிந்தது அப்போது. புகைமூட்டம் இல்லாத சூழல் அது. Smog பெரும்…

முப்பட்டைக் கண்ணாடியின் உலகம் – இரா.முருகனின் புனைவுகள் அண்மையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் பெருவிழாவில் வெளியிடப்பட்டநூல் இது. என் படைப்புகளைக் குறித்து மிக விரிவாக என் சக எழுத்தாள நண்பர்ப்களும்,, தேர்ந்த வாசகர்களும், விமர்சகர்களும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. என்றும் கிளரொளி இளமை மின்னும் மூத்த ஆளுமைகளோடு talent to watch புத்திளைஞர்களும் பங்குபெறும் இலக்கிய ஆவணம். ஒவ்வொரு கட்டுரையாக வாசிக்க வாசிக்க உள்ளம் நெகிழ்ந்து போகிறது. நுண்மான் நுழைபுலம் கொண்டு என் நாவல்களை விமர்சனத்துக்கு…

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவல் – சிறு பகுதி அதிலிருந்து இன்னும் கொஞ்சம் உறங்கினால் என்ன? எட்டு மணி தானே ஆகிறது? ஒரு டோஸ் காப்பி. கூடவே கிளாஸ்கோ பிஸ்கட்டும் தோய்த்துச் சாப்பிட. தெரசாவோடு கிடந்த போது ப்ளாஸ்கில் இருந்து காப்பியும் அதில் கிளாஸ்கோ பிஸ்கட்டைத் தோய்த்து அவள் வாயிலிட்டு, எச்சில் கூழாக்கிப் பகிர்ந்ததும் நினைவு வர, தலையைக் குனிந்து கொண்டான். அது எல்லாம் எதுக்கு? அது வேறே நாள். வேறே…

வாழ்ந்து போதீரே (அரசூர் வம்சம் நாவல் தொகுதியில் நான்காவது நூல்) நாவலில் இருந்து – இவளை ஏமாற்றியாகி விட்டது. இந்தக் குழந்தையையும் தான். சங்கரனுக்குத் தோன்றியது. ஒரு நல்ல புருஷனாக, ஒரு தங்கமான அப்பாவாக, இதுதான், இவர்கள் ரெண்டு பேரும் தான் எனக்கு எல்லாம் என்று தாங்கி முன் நடத்திப் போகிறது தானே சங்கரனுக்கு விதிக்கப்பட்டது? இதில் கொச்சு தெரிசா எங்கே வந்தாள்? அவளோடு எப்படி சுகித்திருக்கப் போனது? ஒரு வாரப் பழக்கத்தில் உடம்பு கலக்கிற…