Archive For The “The Wagon Magazine” Category
ஓர் இலக்கிய அல்லது கலைப் படைப்பை ஒரு வடிவத்திலிருந்து மற்றதற்கு மாற்றும்போது எழும் சவால்கள் சுவாரசியமானவை. நாவலை நாடகமாக்குவது குறித்து இது. என் ’தியூப்ளே வீதி’ நாவலில் ஒரு அத்தியாயத்தில் வரும் முக்கியமான பத்தி : // சுவர்க்கோழிகள் கூக்குரல் எழுப்பி ஊரைக் கூட்ட முற்பட, அமேலி என்னைத் தழுவினாள். அவள் முகத்தில் எதையோ வெற்றி கொண்ட சந்தோஷம் படிந்து பரிசுத்தத்தின் நிரந்தரச் சாயலை அழிக்க முற்பட்டுக் கொண்டிருந்தது. துடிக்கும் அவள் உதட்டில், என்னைச் சிறையெடுத்த அழகான…
“I cannot be the referee and play at the same time but there are times I wish I could.” Neymar ஆடவும் வேண்டுமந்த ஆட்ட நடுவராய் ஓடவும் வேண்டுமே ஓர்பந்து – கூடவர அய்யா வழிகண்டால் மெய்ஞான போதமது நெய்மாரும் சித்தரே காண் Neymar Finally Speaks After Brazil’s 2018 World Cup Loss கீழ்ப்படி ஊழியர்க்குக் கிட்டுகின்ற சம்பளத்தில் ஏழரை நூறுசதம் எம்.டிக்காம் – வாழ்ந்திடுக நட்டமென்றால்…

வரும் ஜூலை 21, சனிக்கிழமை மாலை என் குறுநாவல்கள் – ‘இரா.முருகன் குறுநாவல்கள்’ தொகுப்பு பற்றிய ஒரு கலந்துரையாடலை வாசகசாலை அமைப்பு நடத்த ஒழுங்கு செய்துள்ளனர். சென்னை எழும்பூர் கன்னிமாரா பொது நூலகத்தின் மூன்றாம் தளம் – பாட நூல் பிரிவில் – மாலை 5:30-7:15 வரை நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சியில் திரு.கணபதி சங்கர், செல்வி மித்ரா ஆகிய நண்பர்கள் இந்தப் படைப்புகள் பற்றிய வாசகர் பார்வையை முன்வைத்து உரையாடலை முன்னெடுத்துச் செல்வார்கள். நிகழ்ச்சியை நிறைவு செய்ய…

FIFA2018 Finals – France Vs Croatia – France Wins World Cup (Fra 4 : Cro 2) ஓர்கோல் எதிராளி மாண்ட்ச்கிக் தலைதானம் வார்-அளித்த பென்னால்டி க்ரீஸ்மேனும் சேரிரண்டு தெம்பாக பாக்பா இடங்காலால் மூன்றாக்க எம்பாப் உதைத்தோர்நான் கு இரா.முருகன் 1/3 குரோஷ்யா கொடுத்த கொடைக்கேது ஈடு பரோபகாரி மாண்ட்ச்கிக் தலைதந்தார் ஓராமல். கோல்போஸ்டில் கூட்டமின்றி க்ரோஷியா கோல்போட லாரிஸ்தீர் நன்றிக் கடன் இரா.முருகன் 2/3 வந்ததுமே கைகொண்டு வாகாய் எறியாமல் பந்தைத்…
வரவிருக்கும் என் நாவல் ‘1975’-இல் இருந்து சிந்துபாத் வெளியாகி சுமாரான வரவேற்பைப் பெற்றது. பத்திரிகையில் தீபாவளி, பொங்கல், சாவு, பிறப்பு என்று சகலமானதுக்கும் பாட்டு எழுதும் கவிஞர்கள் இருபதம்சத் திட்டத்தையும், இந்திரா, சஞ்சய், பக்ருதீன் அகமதை, வினோபா பாவேயை, இன்னும் எமர்ஜென்சி ஆதரவாளர்களையும் குளிரக் குளிர வாழ்த்தியிருந்தார்கள். ஆளும் கட்சித் தலைவர் தேவகாந்த் பரூவாவைக்கூட ஒரு கவிஞர் செல்லமாக பரூவா நல்ல படூவா என்று பாராட்டியிருந்தார். பரவலாகப் படிக்கப்படும் புதுக் கவிதைகள் இனியவளே, மனக் குமைச்சல், உன்…
நாவல் : 1975 ஆசிரியர் இரா.முருகன் பதிப்பாளர் : கிழக்கு பதிப்பகம் நாவலின் ஓர் அத்தியாயம் இது அத்தியாயம் 18 டிசம்பர் 1976 சவுந்தரம்மா ரெயில் கம்பார்ட்மெண்டை விட்டு இறங்கியது மற்றவர்கள் எல்லோரும் வெளியே வந்ததற்கு அப்புறம் தான். மொத்தம் பத்து பேர். நடக்க ஆரம்பித்த சிறு குழந்தையும், துறுதுறுவென்று ஓடிக் கொண்டே இருக்கிற ஐந்து வயதுச் சிறுவனும் அதில் உண்டு. நான் சவுந்தரம்மா இறங்கக் கைகொடுத்து பத்திரமாகத் தரையில் சேர்ப்பித்து, கம்பார்ட்மெண்டுக்குள் மறுபடி நுழைந்து ஏதாவது…