Archive For The “The Wagon Magazine” Category

அந்திமழை ஜூன் 2018 இதழில் பிரசுரமானது மாது என்றொரு மானுடன் இரா.முருகன் நடுராத்திரி கழிந்து ராத்திரியா காலையா என்று தீர்மானிக்க முடியாத மூன்றே கால் மணிக்கு மாது வந்து சேர்ந்தான். எங்கள் அடுக்கு மாடிக் குடியிருப்பில் இருக்கும் எல்லாக் குடித்தனங்களும் மட்டுமில்லாமல், அயல் குடித்தனங்கள், எதிரே ஆவி எழுப்பும் ஜெபக் கூடத்தில் சகோதரர் புன்னோஸ் வடக்கன், எலிசபெத் டெய்லர் தையல்கடைக்குள் தூங்கும் காஜா போடுகிற பையன் சமஷ்டி, தெருக்கோடி சைக்கிள்கடை சுந்தரேசக் குருக்கள் என்று எல்லோரையும் எழுப்பும்…

நாசி குறைந்தவர் நாடி அணிந்திட்டு வாசிக்கக் கீழே நழுவுமே யோசியாது ஆப்டிக்ஸில் வாங்கியணி அல்டிமேட் கண்ணாடி சேஃப்டிபின் மூக்கில் நுழைத்து இரா.முருகன் https://t.co/cxnUMDc3xV சைனாவின் ஸ்பெக்ஸை சரிபார்க் கபோட்டயென் நைனாவின் நாசிஎகிப்து நாசர்போல்- ஒய்நாட்(WHY NOT)யென்(று) ஆயா கொடுத்த அரணா கயிறுபின்(PIN)னால் சாயாது(கண்ணாடி) வாசம் சகித்து’’….கிரேசி மோகன்….! ஏழுபெண் வீட்டிலே ஏதோ பரபரப்பு பாழும்பேன் நீள்கூந்தல் பற்றியுள் வாழுதாம் சோப்பிட் டொழிக்கலாம் வாரிச் சிடுக்கெடுக்க சீப்பெங்கே போனது சொல் இரா.முருகன் https://t.co/qPpFp7bihc அஞ்சுபெண் பெத்தவர் ஆண்டியாம் ,ஆதலால்…

ஆனை விளையாட்டுக்கு அழைத்தாள் பேத்தி. ஆனை வரணும் ஆனை வரணும் அடுத்த குடித்தனப் பாப்பா சொன்னது. துணி உலர்த்தக் கொடியில் பிணைக்கும் க்ளிப் இரண்டை முடியில் சூடித் தவழ்ந்து வந்து தலை உயர்த்தி ஆடலாம் என்றது ஆனை. ஆனை தின்னப் பொரி கொடுத்தாள், ”ஆனை, எனக்கு பிஸ்கட் தா” அம்மா கவனம் தவிர்த்து பிஸ்கட் ஆனை கொடுக்கப் பேத்தி மென்றாள். ”அவளுக்கும் ஆனை பிஸ்கட் தரணும்” அடுத்த வீட்டுப் பாப்பாவைக் காட்டினாள். ஆனை எழுந்து பிஸ்கட் கொடுக்க…

மனிதச் சதுரங்கம் – 1905 ரஷ்யா மதகுருக்கள் சக்கர வர்த்தினிமா மன்னர் உதவுபரி கால்படை வேழம் பதவிதந்து கோட்டையிலும் மாளிகை குச்சினிலும் தான்நிறுத்தி ஆட்டிவைத்துப் பார்ப்பான் அவன். இரா.முருகன் https://t.co/IbpJ3KfyJL ’’மதிலரங்கக் கோயில், மனதுக்குள் வாழும் புதிர்ரங்க ராஜா பதிலை -எதிர்வந்து அம்மணக்(மகா நிர்வாணம்) கண்ணாவுன் ஆட்சிபொம்ம லாட்டத்தில் எம்மனத்துள் நானார்(நான் யார்) (தலை) எழுத்து!’’….கிரேசி மோகன்….! *************************************************************************************** பி.பி.சி பிரிட்டீஷ் இளவரசர் ஹாரி திருமணம் மே 19-இல் நடைபெறுவதை நேரடி ஒளிபரப்பு செய்தது. அதைக் காணத்…

இரா.முருகன் : இன்னும் ஒரு கதை. இதுவும் பெருவாரியான கவனத்தைப் பெற்றது. இந்திரா காந்தி மரணத்தை அடிப்படையாகக் கொண்ட ‘வன்மரங்கள் வீழும்போள்’ (பெரிய மரங்கள் விழும்பொழுது). என்.எஸ்.மாதவன் அந்தக் காலகட்டத்தில் – 1984 – நான் தில்லியில் பணியில் இருந்தேன். நான் இருந்த நகர்ப் பகுதியில் இந்திரா மரணத்தைத் தொடர்ந்து எழுந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையும் கலவரங்களும் உச்சத்தில் இருந்தன. போக்குவரத்து முடங்கி இருந்த நேரத்தில் அந்தப் பகுதியில் இருந்த சீக்கிய சகோதர சகோதரிகளுக்கும் அன்னையர், தந்தையருக்கும்…

அந்திமழை மே 2018 இதழில் பிரசுரமானது வாடகை வீடு இரா.முருகன் ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பரோவில், குரோவ் ஸ்ட்ரீட் என்ற தோப்புத் தெருவுக்கு டாக்ஸி பிடித்துப் போய்ச் சேர்ந்தேன். ஒரு பனிக்கால சனிக்கிழமை காலை நேரம் அது. நான் குடக்கூலிக்குப் பிடித்த வசிப்பிடம் தெருக்கோடியில் கருமை பூசிய சுவர்களோடு நின்று கொண்டிருந்தது. தோப்புத் தெரு, ஏன் எடின்பரோவே கருத்த கல் கட்டிடங்களின் ஊர். நூறாண்டு முற்பட்ட என் இருப்பிடத்துக்கு அடுத்து ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் முதல்முதலாக நடித்த சர்…