Archive For The “The Wagon Magazine” Category

புதிது: மலையாள எழுத்தாளர் என்.எஸ்.மாதவன் நேர்காணல் – 1

By |

புதிது: மலையாள எழுத்தாளர் என்.எஸ்.மாதவன் நேர்காணல் – 1

மலையாள எழுத்தாளர் என்.எஸ்மாதவன் மலையாளப் புனைகதை இலக்கியத்தைப் புதுப்பித்தவர்களில் முக்கியமானவர், இலக்கியப் போக்கை நவீனத்துவத்துக்கு மடை மாற்றியவர் என்ற பெருமை அவருக்கு உரியது. என்.எஸ்.மாதவனோடு என் நட்புக்கு இரண்டு மார்கழி வயது. அவருடைய எழுத்தோடு என் நட்பு இருபது மார்கழி கடந்த ஒன்று. இரண்டு வகை நட்பும், நான் மாதவனின் இலக்கியப் படைப்பை அண்மையில் தமிழுக்கு மொழிபெயர்த்தபோது வலிமை பெற்றது. போன மார்கழிக்கும் இந்த மார்கழிக்கும் நடுவில் நான் அவருடைய நாவலான ‘லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள்’ நூலைத்…




Read more »

New: எழுதி வரும் நாவலில் இருந்து..

By |

New: எழுதி வரும் நாவலில் இருந்து..

Draft awaiting editing மேன்செஸ்டர், விமானம் விண்ணேறிப் பறக்கும் அழகான வெளியும், குளிர் சற்றே பூசிய நவம்பர் மாதக் காற்றும், இதமாகக் காயும் வெய்யிலுமாக வரவேற்றது. பதினைந்தே நிமிடத்தில் எமிக்ரேஷன் சோதனைகள் உடனடியாக முடிந்து, பேக்கேஜ் கன்வேயர் பெல்ட்டில் வந்து சேர்ந்து, விமானம் இறங்கிய பதினைந்தாம் நிமிடம் ஏர்போட்டின் வெளியே இருந்தான் சிவா. ஒரே ஒரு டாக்சிதான் வெளியே இருந்தது. யாரும் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. நாற்பது பேர் விமானம் விட்டு இறங்கியதில் சிவா தவிர வேறு எல்லாருக்கும்…




Read more »

ரெட்டை நாயனம் வெண்பாக்கள்

By |

ரெட்டை நாயனம் வெண்பாக்கள்

ரெட்டை நாயனம் வெண்பாக்கள் : உயரம் ——————————————————————- காலுயர்த்தி வைத்திருக்கக் கம்பூட்ஸ் அணியாமல் மேலேறிப் பெட்டியிட்டு நிற்காமல் போலியின்றி வள்ளுவர் வாசுகியை வார்த்தையில் தீட்டினால் கொள்ளுமடி ரெண்டு குறள் இரா.முருகன் அண்ணலவர் நோக்க, அடுத்தவீட்டு ஜன்னலில் பெண்ணவள் பார்த்துப் புதிர்போட -வெண்நிலவில், சார்லெஸ் டயானாவை சந்தித்தார் ஸ்டாம்புக்காய் ஸார்லெஸ்இஞ்ச்(SIR LESS INCH) ஆகநின்றார் பெஞ்ச்(BENCH)….கிரேசி மோகன்….! அன்பு இராமு சார் கீழே தந்த ‘’குறும் பாவை’’ வெண்பாவாய் ஆக்கினேன்…..! அண்ணலவன் நோக்க எதிர்வீட்டு ஜன்னலவள் நோக்க, புதிர்…




Read more »

New: புது நாவல் : மேன்செஸ்டர், குளிர் பூசிய நவம்பர் மாதக் காற்றும், இதமாகக் காயும் வெய்யிலுமாக வரவேற்றது

By |

(First cut – awaiting editing) வெளிச்சம் மங்கிக்கொண்டு வந்ததாகத் தோன்றியது. சற்றே புழுக்கம் தொடங்கியிருந்தது. ஆஸ்ட்ரிக்ஸை மூடி வைத்துவிட்டு விமானத்தின் அந்தக் கோடிக்கு மெல்ல நடந்தான் சிவா. முன்னால் இடத்தை அடைத்துக்கொண்டு ஒபீலிக்ஸ் நடப்பதாகக் கற்பனை செய்யச் சிரிப்பு வந்தது. சின்னவயதில் இருந்து ஈடுபாட்டோடு படித்த காமிக்ஸ் ஆஸ்ட்ரிக்ஸ். அதன் நுண்ணரசியலையும், நளினமான நகைச்சுவையையும் அவன் புரிந்துகொண்டபோது பிள்ளைப் பருவம் கழிந்து எத்தனையோ வருடமாகி இருந்தது. ஆஸ்ட்ரிக்ஸ், ஒபிலீக்ஸ், கெடாபிக்ஸ், காகஃபோனிக்ஸ்.. உங்கள் உலகம் ரம்மியமானது….




Read more »

புது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி

By |

எழுதத் தொடங்கியிருக்கும் நாவலிலிருந்து ஒரு சிறு பகுதி (எடிட்டிங் செய்யப்பட வேண்டியது) லாரி. ரொம்பப் பழையது. ஏகத்துக்கு இரைகிறது. பென்ஸ் லாரியின் கியர் நடுவில் இசகுபிசகாகச் சிக்கி விடுவிக்கப்படும் ஓசை வேறே நாராசமாகக் காதில் விழுகிறது. சின்னச் சின்னப் புரைகளாக மரச் சட்டங்களை வரிசையாக நிறுத்தியிருக்கிறது. லாரி கடந்து போக, காற்றில் பலமான ஒச்சை வாடை. அது உயிரின் வாடை கூட. விரைவில் இல்லாது போகும் அது. வாடைபூசிய ஐம்பது நூறு கோழிகள் மரச்சட்டங்களில் அடைத்து வைக்கப்பட்டுப்…




Read more »

புதிது : எழுதத் தொடங்கியிருக்கும் அடுத்த நாவல் : ‘சிலிக்கன் சங்கப் பலகை’

By |

புதிது : எழுதத் தொடங்கியிருக்கும் அடுத்த நாவல் : ‘சிலிக்கன் சங்கப் பலகை’

நண்பர்களுக்கு அன்பான வாழ்த்துகள். ‘1975’ நாவல் மென்பிரதியாக, என் பதிப்பாளர்களான கிழக்கு பதிப்பகத்துக்கு அளிக்கப் பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன். நூல் அடுத்த சில மாதங்களில் வெளியாகும். மலையாள நாவல் ‘லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள்’ – என் தமிழ் மொழியாக்கமான ‘பீரங்கிப் பாடல்கள்’ அடுத்த மாதம் (மே 2018) வெளியாகிறது என்பதையும் சந்தோஷத்தோடு அறிவிக்கிறேன். அடுத்து? “Pepper Chronicles’ ஆங்கில நாவல் பதினோரு அத்தியாயங்களில் நிற்கிறது. கொங்கண்-மலபார் கடற்கரைப் பிரதேசத்திலிருந்து தொடங்கிச் சென்னையையும் தொட்டுப் பார்க்கும்…




Read more »