Archive For The “இது புதுசு” Category

(அசோக்நகரில் வசித்த போது எழுதியது) திருச்செந்தூரார் சாப்பாட்டுக்கடையை முன்வைத்து – 1 மறதி குறித்த மனக் குமைச்சலோடு வார இறுதிக் காலை விடிந்தது. வெண்பாப் போட்டியில் வென்றாருக்கு வாக்குத் தத்தம் செய்தபடி ரெவ்வெண்டு போத்தல் கேரளப் படைப்பு புளியிஞ்சி வாங்கி அனுப்பினேனிலன் இஞ்சியோடு கண்ணாடிச் சில்லும் ஊறுகாயாவதாய் படித்ததாலஃது. சொல்ல மறந்தேன் சேதி எவர்க்கும். பாண்டி பஜார் பாலாஜி பவனத்தில் ஊரே ருசிக்கும் காப்பி அருந்த அழைப்பு விடுத்தேன் நண்பர் கவிஞர்க்கு அழைப்பை மறந்து அசோகநகர் குடிபெயர்ந்தேன்….

From my book readied for Publication மன்னர் அரங்கில் மாபெரும் கூட்டம் வந்து சிறப்பிக்க வரவேற்கிறோம் நாளைக்கு மாலை ஏழு மணிக்கு தலைவர் பேசுவார் தவறாமல் வாருங்கள். எந்தக் கட்சி என்றாலும் கூட்டத்துக்கு வரச் சொல்லி அழைப்பது ஒருத்தர் மாதவன் என்ற மீட்டிங்காரன். மாணவன் போல வருடாவருடம் நூறு பக்கம் கோடுகள் போட்ட நோட்புக் சுப்பன் கடையில் வாங்கிக் கையில் சுமந்து திரிவான் மாதவன். எந்தக் கட்சிக் கூட்டம் என்றாலும் முதலில் சொல்வார் மாதவனைக் கூப்பிடு…

விடியப் போகிறது எமர்ஜென்ஸி ராத்திரி நாலு பேட்டரி டிரான்சிஸ்டர் ரேடியோ நம்பிக்கையோடு இருட்டில் பாடும்; உச்ச ஸ்தாயியில் ஒற்றைக் குரலில் சேர்த்து இசைத்த சீனிவாசனை, இலக்கியம் இசையில் ஆர்வலர் இளைஞரை நெருக்கடி நிலைமை நல்லதுதானென நம்ப வைத்தவர் யாரோ எவரோ. எமர்ஜென்சி சொல்லாட்சியில் எமர்ஜென்சி என்பது நெருக்கடி நிலைமை இருபது என்பது பிரதமர் இந்திரா இங்கறிவித்த இருபது அம்சத் திட்டம் கொசுறாய் ஐந்து – எந்தப் பதவியும் இல்லாத சஞ்சய் காந்தி பிரகடனம் செய்த பரபரப்பான ஐந்தம்ச…

பாலா சொல்வார் சேவல் பண்ணை மேன்ஷன் பார்த்தால் அதுதான் நினைவில். பாலா என்பது பாலகுமாரனை. மாடிமாடியாய் வண்ணத்தில் வெளுப்பில் சட்டை, கால்சராய், அரைக்கால் டிரவுசர் அங்கங்கே லுங்கிகள் கொடிகளில் காய மேன்ஷன் எதிர்ப்படும் மாம்பலம் தெருவில். வளாகம் உள்ளே வரிசையாய் ஸ்கூட்டர் மோட்டார் பைக்கும் ஒன்றிரண்டு சைக்கிளுமுண்டு மேன்ஷன்காரர்கள் சைக்கிள் வாங்கினால் உடல் பயிற்சிக்கு அன்றி வேறில்லை கார் வைத்திருக்கும் மான்ஷன்காரரைத் தேடிக் கொண்டிருக்கிறேன் கிடைத்தால் சொல்வேன். ஹாஸ்டல் வேறு மேன்ஷன் வேறு ஹாஸ்டல் என்றால் எதிர்ப்படும்…
> நூறு வருடப் புத்தகம் அடுக்கி நீளநெடுக மர அலமாரிகள்; இருந்து படிக்கக் கால்கள் உடைந்த இருக்கைகளோடு நூலகம் கிடக்கும். சின்னப் பையன்கள் வருவது பார்த்து அரபு இரவுகள் ஆயிரமும் அவசரமாய் மேல்தட்டேறி ஒளிந்து கொள்ளும் ஏற முடியாத கடைசி ஒண்ணு பொலபொலவென்று பேப்பராய் உதிரும். அநுத்தமாவும் ராஜம் கிருஷ்ணனும் லஷ்மியும் குகப்ரியையும் கிருத்திகாவும் கு.ப.சேது அம்மாளும் குமுதினியும் சூடாமணியும் வைத்த அலமாரியில் வல்லிக்கண்ணனும். அடிக்கடி தரையில் விழுந்திட நூலகர் வல்லிக்கண்ணனை வாசல் அலமாரிக்கு மாற்றி வைத்தார்….

1970- களில் பதின்ம வயதிலிருந்தபோது எங்களூர் அமுதா டூரிங்க் டாக்கீஸில் விட்டலாசார்யா படம் பார்த்த நினைவுகளில்… —————————————————————– உள்நாடு வெளிநாடு ஒவ்வொரு பயணம் போய்த் திரும்பிப் பார்க்கும் போதெல்லாம் டூரிங் தியேட்டர் ஊரில்தான் இருந்தது நாம்தான் டூரிங் அது இல்லையாம். வைகைக் கரைமண் எந்தக் காலத்திலோ பரத்தி வைத்த மணல்வெளி பீடி சிகரெட் தீக்குச்சி சிக்கெடுத்த தலைமுடி கலந்து தரை டிக்கெட் ஆச்சு. தண்ணீர்த் தொட்டியில் இட்டால் மிதக்கும் இருபதுபைசா நாணயம் ஒன்றும் பத்துக் காசும் சேர்த்துக்…