Archive For The “இது புதுசு” Category

1970- களில் பதின்ம வயதிலிருந்தபோது எங்களூர் அமுதா டூரிங்க் டாக்கீஸில் விட்டலாசார்யா படம் பார்த்த நினைவுகளில்… —————————————————————– உள்நாடு வெளிநாடு ஒவ்வொரு பயணம் போய்த் திரும்பிப் பார்க்கும் போதெல்லாம் டூரிங் தியேட்டர் ஊரில்தான் இருந்தது நாம்தான் டூரிங் அது இல்லையாம். வைகைக் கரைமண் எந்தக் காலத்திலோ பரத்தி வைத்த மணல்வெளி பீடி சிகரெட் தீக்குச்சி சிக்கெடுத்த தலைமுடி கலந்து தரை டிக்கெட் ஆச்சு. தண்ணீர்த் தொட்டியில் இட்டால் மிதக்கும் இருபதுபைசா நாணயம் ஒன்றும் பத்துக் காசும் சேர்த்துக்…

சின்னச் சின்ன சந்தோஷங்களில் இதுவும் உண்டெனக்கு – பழைய தீபாவளி மலர்களை பக்கம் பக்கமாய்ப் புரட்டுவது காகிதப் புத்தகம் கிடைப்பது அரிது டிஜிட்டல் இதழ்களே நமக்கு விதித்தது, நாற்பதுகளின் புத்தகம் கிட்டினால் காலயந்திரம் கிடைத்த மகிழ்ச்சி; நானில்லா பழையதோர் ஆண்டுக்கு ஓசையின்றி சென்று வரலாம். எல்லா தெய்வமும் வந்திருந்து பஞ்சவர்ணமும் தேசலாய்ப் பூசி நிற்பர் சாய்ந்து முன்னட்டையில் இன்னும் யாரும் அமரவில்லை. பாகவதர் ஹரிதாஸ் வருதென்றும் சின்னப்பா ஜெகதலப்ரதாபன் ரிலீஸென்றும் தீபாவளி வாழ்த்தோடு விளம்பரங்கள்; திண்தோள் மான்கண்ணி…

அனுமன் திருக்கோவில் முக்கால்வாசி மூடிய வாசல்முன் பத்திருபது பக்தர்கள் காத்திருப்பர்; குளிக்காத, ஷார்ட்ஸ் அணிந்த கான்வாஸ் ஷூ கழற்றாத இன்னும் பலர் என்போல வெளிவாசல் நின்று உள்நோக்கிக் காத்திருப்போம்; திருத்துழாயும் உலர்ந்த திராட்சை தட்டுமாக கோயிலர்கள் மணியடிக்கக் காத்திருப்பர்; மடைப்பள்ளி நைவேத்யம் வெண்பொங்கல் பொங்கிவர அனுமன் காத்திருப்பார் இன்றைய காத்திருப்பு இத்துடன் முடிய மின்சார முரசு முழங்குது கேள்.

பதிப்பிக்கப்பட இருக்கும் என் அல்புனைவு நூல் இதுவும் அதுவும் உதுவும்-இல் இருந்து ———————————————————————— — — தொண்ணூறுகளின் மத்தியில் கி.கஸ்தூரிரங்கன் கணையாழி ஆசிரியர் பொறுப்பில் இருந்து விடுபட்டு ஒரு வருடம் ராம்ஜி கணையாழி ஆசிரியராக இருந்தபோது பின்னணியில் நானும் தீவிரமாகச் செயல்பட நேர்ந்தது. ராம்ஜி என் நெருங்கிய குடும்ப நண்பர். நானும் அவரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலமை அலுவலகத்தில் அதிகாரிகளாக இருந்தோம். பாரதி மேல் தீவிர ஈடுபாடு கொண்டவர். (நான்கு ஆண்டுகளுக்கு முன் இயற்கை எய்தினார்.)….

என் அல்புனைவுக் கட்டுரைத் தொகுதிகள், ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் ஏழு புத்தகங்களாக வெளியிடப்பட்டு வருகின்றன். அவற்றில் ஒன்று ‘இதுவும் அதுவும் உதுவும்’. நூலில் இருந்து கொஞ்சம்போல் இங்கே தருகிறேன். இது ஆபீசுவரி இல்லை. நாளது தேதிவரை மொத்தமே ரெண்டு ஆபிசுவரி தான் எழுதியிருக்கிறேன். முதலாவது, தோழர் ஈ.கே.நாயனாருக்கு. கண்ணூர் பய்யாம்பலம் மாயானத்திலிருந்து பெங்களூர் வந்து இறங்கியதும் மிச்சக் கண்ணீர் பார்வையை மறைக்க மாத்ருபூமி ஸ்டைல் இரங்கல் நடையில் எழுதியது. திண்ணைக்கு அனுப்பும் முன்பு ஒரு தடவை…

‘ஏதோ ஒரு ’. என் அல்-புனைவு கட்டுரைகளின் தொகுப்பு. என் மற்ற அல்-புனைவுகளோடு இதுவும் நூலாகிறது. புத்தகத்திலிருந்து ஒரு பகுதி இங்கே – ————————————————————————————————— ஏதோ ஒரு பக்கம் இரா.முருகன் (சீரங்கத்துச் சிக்கலார் பாரி நாயனத்தை ஊதி முடித்துக் கிளம்பிப் போய்விட்டார். அந்த மேடை வெறுமையாகவே இருக்கும். ஜில்ஜில் ரமாமணி ஓரமாக ஆடலாம்) . பயண இலக்கியம் எழுத சென்ஸ் ஆப் ஹ்யூமர், கொஞ்சம் பேங்க் பாலன்ஸ், விக்ஸ் இன்ஹேலர், எலாஸ்டிக் போகாத ஜட்டி, எழுதியதை பிரசுரம்…