Archive For ஜனவரி 10, 2013

திருப்பாவை – 27 கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னை பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்; நாடு புகழும் பரிசினால் நன்றாக, சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்; ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவார கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். 27 திருப்பள்ளி எழுச்சி – 7 அது, பழச் சுவை என, அமுது என; அறிதற்கு அரிது என, எளிது என; அமரரும்அறியார். இது அவன் திருஉரு;…
திருப்பாவை – 26 மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை யெல்லாம் நடுங்குமுரல்வன பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே, சாலப்பெரும் பறையே, பல்லாண் டிசைப்பாரே, கோல விளக்கே, கொடியே, விதானமே, ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய். 26 திருப்பள்ளி எழுச்சி – 6 பப்பு அற வீட்டு இருந்து உணரும் நின் அடியார், பந்தனை வந்து அறுத்தார்; அவர்பலரும், மைப்பு உறு கண்ணியர், மானிடத்து இயல்பின் வணங்குகின்றார். அணங்கின்…
நேற்று மாலை திரு.ஜெகத் காஸ்பரின் சங்கம் – 4 அமைப்பு நடத்தும் விழாவில் பி.ஏ.கே அண்ணா (Ananthakrishnan Pakshirajan) ‘அக்ரஹாரத்தில் பெரியார்’ பற்றி அருமையாகப் பேசினார். அச்சிலும் இணையத்திலும் வந்து இன்னும் நிறைய அன்பர்களால் படிக்க, பேசப்பட வேண்டிய உரை அது. விழாவில் குத்துவிளக்கு ஏற்ற நானும் அழைக்கப்பட்டேன். என்னமோ, ஷூ போட்டுக் கொண்டு தீபம் கொளுத்த மனம் வரவில்லை. வராது. ப்ஞ்சமுக விளக்கை ஆளுக்கு ஒரு முகமாக ஏற்றி விட்டு இறங்கும்போது, மேடைக்குக் கீழே என்…
திருப்பாவை – 23, 24 மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து, வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி, மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப், போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா! உன் கோயில்நின்றும் இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய சீரியசிங் காசனத்திருந்து யாம்வந்த காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய். 23 அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி, சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி, பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி, கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி, குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி, வென்று…
திருப்பாவை – 20 முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்; செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்; செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்; உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய். 20 திருவெம்பாவை -20 போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றிஎல் லாஉயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றிஎல் லாஉயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றிஎல்…
விஸ்வரூபம் நாவல் முதல் பிரதியோடு ஒரு மணி நேரம் முன் ஆழ்வார்பேட்டை போயிருந்தேன். நம்பர் 4, ஆழ்வார்பேட்டை கல்யாண வீடு போல கலகலப்பாக இருக்கிறது. மாடிக்கும் கீழுமாக எல்லா மொழியிலும் தொலைபேசியபடி ஓடிக் கொண்டிருக்கிறார் விஸ்வரூப நாயகன். உற்சாகமும் மன நிறைவும் குரலிலும் முகத்திலும் நிறைந்திருக்கிறது. பேசிக் கொண்டிருந்த அழைப்பை முடித்து, என் கையில் இருந்து புத்தகத்தை வாங்கி அட்டையை ரசிக்கிறார். ‘நீங்க அனுப்பியிருந்தீங்களே’. ஆமாம், அட்டை லே அவுட் ஆனதும் அனுப்பியிருந்தேன். புத்தகத்தின் பின் அட்டையில்…