Archive For அக்டோபர் 8, 2013

எழுதிக் கொண்டிருக்கும் ‘சுஜாதா சிறுகதைகள் தொகுப்புரை’ யில் இருந்து. இறுதிப்பிரதியில் இது இருக்கலாம், உதிர்ந்திருக்கலாம். இந்த நிமிடத்து ஸ்னாப்ஷாட் – சுஜாதா மொழிநடை அவருக்கு அடுத்த தலைமுறையை வெகுவாக பாதித்த ஒன்று. அவர் கதையில் ஒரு இடத்திலாவது எழுவாய் இல்லாமல் சட்டென்று ஒரு சொற்றொடர் தொடங்கும் – ’காப்பி குடித்துக் கொண்டிருந்தார்கள்’ என்பது போல். யார் காப்பி குடித்துக் கொண்டிருந்தார்கள், எங்கே எப்போது என்பதெல்லாம் சாவகாசமாக வரும். வராமலும் போகலாம். இன்னொரு சுஜாதா பிரயோகம் ‘விரோதமாக’. ஜீவராசிகளுக்கு…
அமெரிக்க விஜயம் முடித்து வந்த பிரதமர் நாளைக் காலை ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசுவாராம். அவசரச் சட்டம் பற்றி ஜனாதிபதி கருத்துச் சொல்லியிருப்பதால் இது முக்கியமான சந்திப்பாக இருக்கும் என்று தெரிகிறது. நாளைக் காலையை விட்டால் இந்த சந்திப்பு இப்போதைக்கு நடக்க முடியாதாம். ஏனென்றால் நாளை மதியம் ஐந்து நாள் நல்லெண்ண சுற்றுப் பயணமாக துருக்கி, பெல்ஜியம் போறாராம் ஜனாதிபதி. ஒண்ணு மட்டும் புரியலை. சாப்ட்வேர் கம்பெனிகள்லே தான் க்ளையண்ட் மீட்டிங், ப்ரபோசல் டிபென்ஸ், தீயணைப்பு நடவடிக்கை இப்படிஅதிகாரிகள்…