Archive For ஏப்ரல் 3, 2015

அச்சுதம் கேசவம் நாவலுக்கான தகவல் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது ஹரித்துவார் நகர அந்தணர்கள் – பாண்டா அல்லது பாண்டேக்கள்- பற்றி அறிந்து கொண்டேன். பாரதத்தின் பல இந்துக் குடும்பங்களின் வம்சாவளிச் செய்திகள் இந்தப் புரோகிதர்களின் பரம்பரையினரால் இன்னும் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றனவாம். ஒவ்வொரு பாண்டே (பண்டிதர்-) குடும்பத்துக்கும் தேசத்தில் இந்த இந்தப் பிரதேசம் பற்றிய தகவல் காப்பாளார் என்று பொறுப்பு உண்டாம். ஹரித்துவார், ரிஷிகேஷ் தீர்த்த யாத்திரை போகிறவர்கள் முன்னோரை வழிபட்டு பித்ரு கடனையாற்ற அவரவருக்கு என்று விதிக்கப்பட்ட பாண்டே…

ஒரு ஊர்லே ஒரு பணக்காரர் இருந்தாராம். அவருக்கு ஒரே மகன். மகனுக்குப் பக்கத்து ஊர்லே நல்ல சம்பந்தம் கிடைச்சதாம். அங்கே போய்க் கல்யாணம் செஞ்சு மாப்பிள்ளை – பொண்ணை வீட்டுக்குக் கூட்டி வந்துட்டிருந்தாங்களாம். அப்போ மதிய நேரம். எல்லோருக்கும் நல்ல பசி. ஒரு பெரிய ஆல மரம் வழியிலே இருந்துச்சாம். அதுங் கீழே உட்கார்ந்து கட்டுச் சோத்து மூட்டையை அவுத்துச் சாப்பிட்டு வீட்டுக்குப் போய்ச் சேரலாம்னு அப்பாக்காரர் சொல்ல எல்லோரும் அப்படியே செய்யலாம்னு சாப்பிட உக்கார்ந்தாங்களாம். கல்யாணச்…

மீரட்டுலே நயம் கத்தரிக்கோல் கிடைக்குமாமே? வசந்தி எந்த நிமிஷத்திலும் வெடிக்கக் கூடிய சிரிப்பை உதட்டில் சுமந்தவளாக, கண்ணை இடுக்கிச் சின்னச் சங்கரனைக் கேட்டாள். யார் சொல்றா? உங்க மனுஷா. எதுக்குக் காலங் கார்த்தாலே கத்திரிக்கோலும் கத்தி கபடாவும்? சங்கரன் அவள் பக்கமாக நகர்ந்தபடி கேட்க, அவன் இன்னும் நெருங்காமல் பிடித்துத் தள்ளினாள். உங்க ஊர்ப் பொம்மனாட்டிகள் எல்லாம் மீரட்லே இருந்து சன்னமான கத்தரிக்கோல் வாங்கிண்டு வரச் சொல்லியிருக்காளாம். எதுக்கு? எதுக்கு கத்திரிக்கோல் தேடுவா? மயிர் வெட்டிக்கத்தான். தலைமயிரா?…