Archive For ஆகஸ்ட் 21, 2016

சங்கரன் விழித்துக் கொண்டபோது குழந்தை வீரிட்டுக் கொண்டிருந்தது. இன்னொரு குளிர்கால தினம் தில்லியில் விடிகிறது. ஞாயிற்றுக்கிழமைக்கே ஏற்பட்ட சோம்பலும் குளிரோடு இறுகக் கட்டியணைத்துக் கவிந்திருக்க, ஊரே சூரியனை அலட்சியப்படுத்திக் கவிழ்ந்து படுத்து உறங்கும் பொழுது அது. குழந்தை மூத்திரம் போய் உடம்பெல்லாம், மெத்தையெல்லாம் நனைந்து இருந்தது. அது அனுபவிக்கும் மூன்றாவது குளிர்காலம். மாறி வரும் பருவங்கள் பழக இன்னும் நாலைந்து வருடமாவது பிடிக்கலாம். சின்னஞ்சிறு சிசு. உடுப்பு நனைந்து விழித்துக் கொண்டு அழுதால், பெற்றோர் தவிர வேறே…

(பகவதியின் நாட்குறிப்பில் இருந்து) 2 ஏப்ரல் 1901 – பங்குனி 20 செவ்வாய்க்கிழமை யாரோடயும் விரோதம் பாராட்டாமல், பிரியத்தோடு எல்லாரையும் அரவணைச்சு இனி இருக்கப் போகிற காலம் எல்லாம் கழியட்டும். பத்து நாளாக நான் டயரி எழுதலே. பேனாவைப் பிடிக்க கை நடுங்கறது. பத்து நாள் கழிச்சு இன்னிக்குத்தான் சாதாரணமா சாப்பிட்டேன். கொஞ்சமா பேசினேன். எழுதறேன். தேர்த் திருவிழா நடக்கப் போகிற நேரம் இது. பேசாம, யாருக்கோ எங்கேயோ ஏதோ நடக்கறதுன்னு நான் ஓரமாப் போய் உட்காரலாமா?…

விஸ்வரூபம் நாவல் குறித்து சிங்கப்பூர் வாசகர் ஹேமா எழுதியிருக்கிறார் – உங்கள் கதையை நான் சிங்கப்பூர் வாசகர் வட்டம் அமைப்பின் படித்ததில் பிடித்தது அங்கத்திற்காக வாசித்தேன். அங்கே நான் பேசியது இது தான். பொதுவாய் நான் படிக்கும் கதைகளை இரண்டு வகைகளாய் பிரிக்கலாம். 1. நான் வாசிக்கும் கதைகள் 2. என்னை வாசிக்க வைக்கும் கதைகள். இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்த கதைகள் ஒரு பொதுவான அம்சத்தைக் கொண்டிருக்கும். வழக்கமான வாழ்க்கைச் சூழலிலிருந்து என்னைக் கடத்திச் சென்று…

மூணு மாசமா ஆர்ட்டிஸ்ட் பென்ஷன் வரலே சாப். லாவணிக் கலைஞர்கள் பெரியப்பாவை சூழ்ந்து கொண்டு முறையிட்டார்கள். ஷாலினி தாயை விட முதியவளான ஒரு பழைய ஆட்டக்காரி தன் வயதையும் இருப்பையும் பொருட்படுத்தாது மினிஸ்டர் பெரியப்பா காலில் விழுந்து நமஸ்காரம் செய்தாள். அவர் அதிர்ச்சியோடு விலகி செக்யூரிட்டி ஆட்களைப் பார்த்த பார்வையில் என்ன புடுங்கிட்டு இருக்கீங்க என்ற கேள்வி தெரிந்தது. சோபானத்துக்கு, அகல் விளக்கும் பூவுமாகப் புது மணப்பெண்ணைத் தோழிகள் அழைத்துப் போகும் தருணத்தில் பாடுகிற, மங்கலமானதும், குறும்பு…

மலா பாக ருபயீ த்யா, மோதா பாவு. அப்பன் காஹீ தூபா கரீதீ கரூ. ஐந்து நிமிஷம் முன் டோம்பிவிலி ஃபாஸ்ட் லோக்கல் ரயிலில் வந்து சேர்ந்தவன், ரிடர்ன் டிக்கட்டை சிகரெட் பாக்கெட்டுக்குள் பத்திரப்படுத்தியபடி திலீப்பிடம் சொன்னான். ஐந்து ரூபாய் வேணுமாம். போய் நெய் வாங்கி வருவானாம். நாலு மூங்கில் கழிகளும் தென்னங் கிடுகுமாக சைக்கிளில் வந்த இன்னொருத்தன் வண்டி பிரேக் பிடிக்காமலோ, இல்லை விளையாட்டாகவோ கட்டிடச் சுவரில், சினிமா கதாநாயகி நடிகை நூதன் படம் ஒட்டிய…

What the stars foretell and the sub-text of it I just glanced through the astrological forecast for the week for my star sign, that was published in an internet magazine. The 300 word weekly prediction written in a tech-savvy lingo nudges me to stir out of my castle without losing further time and acquire a…