Archive For மார்ச் 7, 2020

ஆபீசில் வேறு யாரும் வந்திருக்கவில்லை. இன்றைய கார் சவாரி பற்றிய கிண்டலும், கேலியும், பாராட்டும், அடுத்து என்ன ஆகும் என்ற ஆருடமும், வரப்போகும் புது வருஷ புரமோஷன்கள் பற்றி ஊகங்களும் என்று எல்லாமே கலந்து கட்டியாக மதியச் சாப்பாட்டு நேரத்தில் கேண்டீன் வாசலிலும், பின்னால் நின்று டெனார் சிகரெட் குடிப்பவர்கள் குழுவிலும், வெற்றிலைக்கு சுண்ணாம்பு தடவுகிறவர்களின் பெருங்கோஷ்டியிலும் பரிமாறப்பட்டு விவாதிக்கப்படும். நான் இல்லாதபோது என்னைப் பற்றி என்ன விமர்சித்தார்கள் என்பதை வேறு யாரோ பற்றி என் காதில்…

நான் ரத்னாவிடம் சொன்னேன் – ஆறுமுக ஆசாரியார் பிறந்தபோது நல்லா சத்தமா பேச வரணும்னு அவங்க வீட்டுலே ஒரு பலம் கோரோஜனையை பால்லே கரைச்சு கொடுத்தாங்களாம். அது போதாம சுமார் சைஸிலே ஒரு கடப்பாரையும் முழுங்கிட்டாராம். வால்யூம் கண்ட்ரோல் அவுட். அவராலே சத்தத்தை குறைக்கவே முடியாது. அவர் கார் ஸ்டீரிங்கில் இருந்து கையை எடுத்து ரத்னாவை நமஸ்கரித்தபடி சொன்னது இது – எல்லாம் சரிதான். பெயரை ராங்கா சொல்லிட்டார் சார். நான் ஆறுமுக ஆசாரி இல்லே. ஆறுமுகத்தா…

நான் குளித்துக் கொண்டிருந்தபோது வாசலில் பூம் பூம் என்று கார் ஹாரன் சத்தம் காதில் விழ, சாடி நொடியில் குற்றாலத் துண்டை இடுப்பில் சுற்றிக் கொண்டு, வந்தாச்சு என்று குரல் கொடுத்தபடி சொட்டச் சொட்ட நனைந்து ஓடி வந்தேன். ரத்னா, இதேது கோமாளித்தனம் என்று கையில் எடுத்த கீரை கடையும் மத்தோடு ஸ்தம்பித்து நின்று, பக்கவாட்டுத் தோற்றத்தில் அழகாக ஆச்சரியப்பட்டாள். ஆறுமுக ஆசாரியாரே, வந்தாச்சு. நீர் ஒன்பது மணிக்கு அப்புறமல்லவோ வருவதாகச் சொன்னீர் என்று கூறியபடி நான்…

இன்று நியூஸ்பேப்பர் வரவில்லை. இந்தியா முழுக்க ஒரு பத்திரிகையும் நேற்று அச்சாகவில்லை. காலைச் சுற்றின சனி தானே ஒழிந்து போனதாக, பேப்பர் வராத இன்றைய தினம் வெகு அமைதியாக இருந்தது. நான் எசகு பிசகாகப் பிடித்திருந்த ஷேவிங் ரேசரைக் கைதவறித் தரையில் போட்ட சத்தத்தில் பிராணசகி ரத்னாபாயை விழித்தெழ வைத்த சைலன்ஸ் அது. விடா. பிளேடு பெயரைப் பார்த்தாலே பற்றிக்கொண்டு வருகிறது. சர்ஜிக்கல் எஃகு வைத்து செஞ்சது என்று பத்திரிகை விளம்பரம் சொல்லும். என்னமோ சத்ரசிகிச்சை –…

புரசைவாக்கம் போகும் ட்ராம் ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. ஏறி உட்கார்ந்து முக்கால் மணி நேரத்தில் வீட்டுக்கு வந்தாகி விட்டது. அதுவரை இருப்புக் கொள்ளவில்லை. சைக்கிள் எடுத்து வந்திருந்தால் இன்னும் சீக்கிரமாகப் போயிருக்கலாம். பரவாயில்லை. போய்ச் சேர்ந்தால் சரி. வீடு பூட்டி இருந்தது. என்ன ஆச்சு? புருஷன் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று என்னை திராட்டில் விட்டு அவள் மட்டும் பட்டணத்திலிருந்து வெளியேற முடிவு செய்து, இச்சல்கரஞ்சியில் அம்மா வீட்டுக்குக் கிளம்பியிருப்பாளோ. சே, என்ன மட்டமான நினைப்பு. அவளுக்குச்…

ட்ராமில் போவதா, சைக்கிள் மிதித்து ஆபீஸ் போவதா என்று யோசித்து, ட்ராமே சரிப்படும் என்று முடிவு செய்தேன். ராத்தூக்கம் சீராக இல்லாமல், தலை கிறுகிறுத்து, உடம்பு சமநிலை தவறி ஒரு பக்கமாகக் கொண்டுபோய்த் தள்ளுகிற அயர்ச்சி அவ்வப்போது தலைகாட்டிக் கொண்டிருந்தது. அதோடு நீளநெடுக சைக்கிள் மிதித்து ஆபீஸ் போய்த் திரும்ப சிரமமாக இருக்கும். ட்ராம் என்னதான் மெல்ல ஊர்ந்தாலும் ஒன்பதரை மணிக்கு கோட்டைக்குள் நான் நுழையும்படியாக சேர்ப்பித்து விட்டது. ஒரு சிறிய கூட்டம் எதிர்பார்ப்போடு எனக்காகக் காத்திருந்தது….