Archive For ஏப்ரல் 21, 2020

ராமோஜியம் நாவலில் இருந்து – விலாசினி அளித்த விளக்கம் – தசாபதி 1942

By |

காபி எடுத்து வந்தபோது ”உடனே கிளம்பு, பார்க் போகலாம்” என்றேன். போகலாமே என்றாள் ரத்னா, முகம் மலர்ந்து. அவள் காலையில் நான் நடந்து கொண்டதை மறந்து எப்போதும் போல் ஆகியிருந்தாள். ”இந்த டைப் இன்ஸ்டிட்யூட் பத்தி எதிர்வீட்டு விலு என்ன சொன்னா தெரியுமா?” விலுவாமே. ஜாக்கிரதையா இருக்கணும். இவ சொல்றாளேன்னு நானும் விலுன்னு சொன்னா, நேர்லே போய் கொஞ்சுங்க என்று படாரென்று முகத்தில் அறைந்தது போல் சொல்லி விட்டுப் போயே போய் விடுவாள். ”என்ன சொன்னாங்க அந்த…




Read more »

ராமோஜியம் நாவலில் இருந்து – The quick brown fox jumps over the lazy dog

By |

ரத்னாவிடம், ஏதோ சாதனை செய்த மாதிரி, கையில் பிடித்திருந்த காகிதத்தை நீட்டினேன். “இது எதுக்கு எனக்கு டைப் அடித்த காகிதம்? தெலக்ஸ் புவனாவை வச்சுக்க என் சம்மதம் கேக்கறீங்களா?” என்று கேட்கவில்லை. என் சிரிப்பைப் பார்த்து அவளும் சிரித்தாள். ”தெருவிலே கிடக்கிற காகிதத்தை எல்லாம் ஏ ஆர் பி வார்டன் பொறுக்கி எடுக்கணுமா என்ன?” என்றாள். ”சாப்பிட என்ன பண்ணியிருக்கே அன்பே, வயிறு இரையுது” என முறையிட்டேன். உப்புமா குழக்கட்டையும் புளிச் சட்டினியுமாம். அவள் சொல்லி முடிக்கும்…




Read more »

என் அடுத்த நாவல் ‘ராமோஜியம்’ – தெலக்ஸ் புவனா 1942

By |

”சார், புவனா உங்க அத்தங்கா காருவா?” ”பின்னே இல்லியா?” ”சார், கண்ணே பட்டுடும்.. அதான் முன்னாடி சொல்லல்லே.. புவனாவை பார்க்க இன்னும் நூறு தடவை தசாபதி பார்ப்பேன்..” நான் புவனா தாசனாக நெக்குருகி நின்றேன். பந்துலு சந்தோஷமடைந்து பெருந்தெய்வத்தின் ஆராதகனான சிறு தெய்வமாக வாய் மலர்ந்தார் – ”உம்மை ஒரு தடவை அத்தங்கா வீட்டுக்குக் கூட்டிப் போறேன்..” நான் கன்னத்தில் போட்டுக்கொண்டு அவரைத் தொழவோ புவனாவை அவரில் கண்டு முத்தமிட்டு அணைக்கவோ செய்யாமல் நன்றி சொல்லி ஆபீஸ்…




Read more »

ராமோஜியம் -தெலக்ஸ் புவனா 1942 – சில பகுதிகள்

By |

நாலு மணிக்கு வீட்டுக்குப் போகிறேனா என்று பார்க்க சூப்பரிண்டெண்ட் பந்துலு சார் சீட்டுக்கு வந்துவிட்டார். இதோ போறேன் சார் என்று அவசரம் காட்டி சாப்பாட்டுப் பையில் ஸ்பூனைத் தேடி எடுத்து மறுபடி உள்ளே போட்டேன். நெய் வாசனை அடிக்க இன்னும் ரெண்டு கரண்டி அவல் கேசரி, ரத்னா கை கிண்டிய அமிர்தம் உள்ளே பாக்கி இருந்ததை போகிற வழிக்குப் புண்ணியமாகத் தின்றபடி கிளம்ப உத்தேசம். “நானும் இன்னிக்கு சீக்கிரமே கிளம்பறேன்.. இன்னிக்கு எங்க அத்தங்கா வீட்டுக்குப் போகவேண்டியிருக்கு”…




Read more »

ராமோஜியம் : வீரையா ஞானமருளிய இன்னொரு 1942 அத்தியாயத்திலிருந்து சில பகுதிகள்

By |

வீரையாவின் லீலைகள் எந்த நிலையிலே இருக்கு? ஆபீஸ் நேரத்தில் வம்பு பேசமாட்டேன். அதுவும் இந்துநேசன் தனமானவை. இப்போது கதைக்கச் சொல்கிறது மனம். அதை ஏன் கேக்கறீங்க என்றபடி உற்சாகமாக என் மேஜைக்கு முன் வந்து நின்றான் அவன். யாருமே வரக்கூடிய சாத்தியம் இல்லை என்றால் அங்கே உட்காரவும் தயங்க மாட்டான் அவன். ’தோஸ்த் சார் ஹம் தோனோ’ என்று ஹிந்தியில் எல்லாம் பெருந்தன்மை காட்டியிருக்கிறான் வீரையா. அவன் சற்று விந்தி விந்தி நடந்து கொண்டிருந்தான். ”என்ன கால்லே…




Read more »

ராமோஜியம் – பிட்மேன் ஷார்ட் ஹாண்ட்டும் தசாபதியும் 1942

By |

அட்டெண்டென்ஸில் கையெழுத்துப் போட்டு உள்ளே போகும்போது சூப்பரிண்டெண்ட் பந்துலு சார் கூப்பிட்டார் – ராமோஜி இது என்ன உங்க கையெழுத்து போடாம லக்ஸ்னு என்னமோ எழுதியிருக்கீர்.. அது லக்ஸம்பர்க் ஸ்ட்ரோக் ஆச்சே… ஷார்ட் ஹேண்ட் படிக்க ஆரம்பிச்சிருக்கீரா?” சுதாரித்துக் கொண்டேன். “பிட்மென் ஷார்ட்ஹாண்ட் புக் செகண்ட் ஹேண்ட் காப்பி மூர்மார்க்கெட்டுலே கிடைச்சது.. நானே பழக ஆரம்பிச்சிருக்கேன் சார்” என்றேன். ”இந்த ஷார்ட் ஹாண்டே இப்படித்தான் … பழக ஆரம்பிச்சா மனசுலே ஷார்ட்டா ஆக எல்லாத்தையும் குறுக்கி அதை…




Read more »