Archive For ஏப்ரல் 19, 2020
புவனா இன்னும் என் மனதிலும் அவள் மனதிலும் நிழலாடிக்கொண்டிருப்பது தெளிவாகப் புரிந்தது. என்றாலும், நான் புவனா மீது பித்தாகிப் போனது என்னமோ நிமிஷத்துக்கு நிமிஷம் கூடிக்கொண்டு இருக்கிறதே தவிர குறையவில்லை. படுக்கையில் சுமுகமான இரண்டு விலங்குகளாக ரத்னாவும் நானும் காதல் பரிமாறிக்கொண்டோம். எல்லாம் முடிந்து உறக்கத்தில் நழுவும்போது தெலக்ஸ் புவனாவின் சிரிப்பு என்னைச் சுற்றிச் சுழன்றது. கொடிமின்னல் வெட்டிப் பளிச்சிடும் ஒளியோடு அலையும் ஓர் அழகான பிசாசாக புவனா என் விழிகளுக்குள் மின்னி வர நான் எப்போது…
விலாசினி என்னை விட்டுவிட்டு ரத்னாவிடம் படம் எப்படி இருந்துதுன்னு கேட்டாள். அது எனக்குமான கேள்விதானென்று தெரியும். ரத்னா என்ன பதில் சொல்கிறாள் என்று ஒரு வினாடி ஒன்றும் பேசாமல் அவளைப் பார்த்தேன். ”படம் நல்லா இருக்கு தான். ஆனா ஹீரோயின் தான் சகிக்கலே. ஒட்டடைக்குச்சிக்கு புடவை சுத்திவிட்ட மாதிரி ஒரு உடம்பு.. அதுலே என்னதான் கண்டாங்களோ ஆம்பளைங்க எல்லாம்”. ரத்னா சொன்னாள். ”எல்லோரும் இல்லே.. எனக்கு ஸ்கூல் வாத்தியாரா வரும் சக்ரபாணியை ரொம்ப பிடிச்சிருந்தது”. கேளப்பன் படு…
அடுத்த நிமிஷம் பிரிட்டீஷ் யுத்தப் பிரச்சாரப் படம். அப்புறம் சிக்கனம் பேணுவோம் என்று ஒரு சர்க்கார் விளம்பரப்படம். எல்லாம் முடிந்து தசாபதி. படம் என்னை குப்புற விழுத்தாட்டியது. நான் தசாபதியை நாடகமாக ஒற்றைவாடை டிராமா கொட்டகையில் சின்ன வயசில் அப்பாஜி கையைப் பிடித்துக் கொண்டு போய்ப் பார்த்திருக்கிறேன். எல்லோரும் ஹோஹோவென்று சிரிக்க எனக்கு ஒன்றும் அர்த்தமாகவில்லை என்றாலும் அப்பா அவ்வப்போது பெரிய பையன்கள் கழுத்தில் மாட்டிய தகரத் தட்டில் வைத்து நொறுக்குத்தீனி, கடலை உருண்டை, பிஸ்கட் என்று…
ராத்திரி எட்டு மணிக்கு அரை நிஜாரும், ஏ ஆர் பி ஹெல்மெட்டுமாக டியூட்டிக்குக் கிளம்பியபோது ரத்னா நானும் வரட்டுமா என்று கேட்டாள். வேணாம், ஜப்பான் காரன் குண்டு போடலாம் என்று சொல்ல நினைத்துக் கைவிட்டேன். வேறே வினையே வேண்டாம். ஜப்பான்காரன் தாக்கினால் வீட்டில் நான் தனியாக உட்கார்ந்து என்ன பண்ணப் போகிறேன் என்று கூடவே தொத்துக்குட்டியாகக் கிளம்பி விடுவாள் என் அப்சரஸ். நான் தெருக்கோடிக்குப் போனபோது கடைசி ட்ராம் நடுவழியில் நின்று கொண்டிருந்தது. புரசைவாக்கத்திலிருந்து வால்டாக்ஸ் ரோடுக்குப்…
எனக்கென்னமோ லண்டனை ஒரு மாறுதலுக்காக விட்டுவிட்டு, ஜெர்மன் விமானங்கள் இவ்வளவு தொலைவு பறந்து வந்து, மெட்றாஸில் பிளிட்ஸ்கிர்க் என்ற அதிரடித் தாக்குதல் நடத்தத் திட்டம் போட்டு, அது வெளியே கசிந்து விட்டதோ என்று தோன்றியது. ஆனால் ஜனங்கள் இப்போது கொஞ்சம் போல் துணிச்சல் உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஏப்ரலில் ஜப்பான் விமானம் மதறாஸை நொறுக்கித் தூசாக்கப் போகிறது என்று பட்டணத்தைக் காலி செய்து கொண்டு ஓடியது அநாவசியம் என்று இப்போது தெரிகிறது. இனி ஜெர்மனியோ ஜப்பானோ வாசலில் வந்து…
ராமோஜியான நான் செயிண்ட் ஜியார்ஜ் கோட்டையில் அமைந்த என் ஆபீஸில், எனக்கான உத்தியோகபூர்வமான நாற்காலியில் இருந்து பென்ஷன் கணக்குகளைப் பார்த்தபடி பென்சிலை வாயில் கடித்துக் கொண்டிருந்தபோது சூப்பரிண்டெண்ட் பந்துலு என் கீகடமான இருப்பிடத்திலிட்ட மேஜைப் பக்கம் வந்து விட்டார். ”ஏமி ஐயா ராமோஜி, இதென்ன பென்சில் கடிக்கற பழக்கம்? என் பிள்ளை சத்யா இருக்கானே, தேர்ட் ஃபாரம் படிக்கறவன் .. சீமந்த புத்ரன் .. அவன் வச்சு எழுதின பென்சிலை விட பல்லாலே துருவித் துருவித் தின்னது…