Archive For மே 22, 2020

ராமோஜியம் – என் அடுத்த நாவல் : காரைக்கால் புவனி 1698 அத்தியாயத்தில் இருந்து

By |

காரைக்கால் புவனியின் அற்புத சரித்திரம் 1698 புவனி என்னும் காரைக்கால் பட்டணத்துத் தாசிப்பெண் நான். நிகழும் தமிழ் வெகுதானிய வருடம், ஆவணி எட்டாம் தேதி, கிறிஸ்துநாதர் வருஷமான 1698-இல் எனக்கு பதினெட்டு வயதாகிறது. நான் மூன்று வருடம் முன், பவ வருடம் தை மாதம் மூன்றாம் நாள் வயதுக்கு வந்தேன். அப்போது, கணிகைத் தொழிலில் ஈடுபட நான் தயார் என்று அறிவிக்க என் தாயார் தாசி ரஞ்சிதம்மாள் எனக்குக் காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பொட்டுக் கட்டுதல் என்ற…




Read more »

ராமோஜியம் – ராமோஜி ஆங்கரே 1698 – தமிழ்ப் பெயரோடு ஒரு கப்பல் – வண்ண மயில்

By |

ராமோஜியின் பத்து வருடம் கடற்படை வாழ்க்கையில் தமிழில் பெயர் வைத்த கப்பலை இப்போதுதான் முதல் தடவையாகப் பார்க்கிறான். அந்த மொழியைப் பேசுகிற மற்ற பிரதேசங்கள் கடல் கடந்து இருக்கும் என்று படித்ததெல்லாம் உண்மைதான் போல. வண்ண மயிலுக்கு கிடைமட்டமாக அகலவாட்டில் விஜயசந்திரிகா நெருங்கியது. ஓ என்று ஆரவாரம் கேட்டது. ராமோஜியின் கப்பல்கள் அமைதியாக கடல் பரப்பில் அசைந்து நின்றன. வண்ண மயில் கப்பல் மேல் தளத்தில் நீள கால்சராயும், அரபு கம்மீஸும் அணிந்த உருவங்கள் அவசரமாக நூலேணி…




Read more »

என் அடுத்து வரும் புதினம் ‘ராமோஜியம்’ – ஆண்டு 1698 சுவர்ணதுர்க்கம் -வண்ண மயில் என்ற தமிழ்க் கப்பல்

By |

எழுதி நிறைவு செய்து கொண்டிருக்கும் என் அடுத்த நாவல் ராமோஜியம். அதிலிருந்து ஒரு சிறு பகுதி பிரச்சனைன்னு எப்படி தெரியும்? விட்டோபா விசாரித்தார். அது படையில் சேர்ந்த புதியவர்கள் அறிந்து கொள்வதற்காக. “அமிட் நிறம் சமிக்ஞையிலே தொடர்ச்சியா இல்லே.. திடீர்னு சிவப்பு, பச்சை, நீலம்னு வரிசை தவறி வருது.. கவனிக்கலியா? அனுபவம் இல்லாத யாரோ சமிக்ஞை கொடுத்திட்டு இருக்காங்கன்னு தோணுது”. வாஸ்தவம் தான் என்றார் விட்டோபா. ”அங்கே போய்ப் பார்க்கலாமா?” விட்டோபா இடுப்பிலிருந்து குறுவாளை எடுத்து விரலில்…




Read more »

வர இருக்கும் என் அடுத்த புதினம் – ராமோஜியம் – சுவர்ணதுர்க்கம் 1698 -ராமோஜி ஆங்கரேயும் விட்டோபா கோலியும்

By |

முதலில் விட்டோபா நூலேணியில் கால் வைத்து கீழே கடலில் மிதந்து கொண்டிருந்த படகில் லாகவமாக வந்து சேர்ந்து எல்லாம் சரியாக இருக்கிறது என்று வலது கையைத் தூக்கித் தலைக்கு மேல்காட்டினார். அடுத்து ராமோஜி பக்கம் நூலேணி கடியார ஊசல் போல் அசைந்து வந்தது. அதைத் தொட்டுப் பிடிப்பதற்குள் கை பற்றும் எல்லையைக் கடந்து திரும்பி விட்டது ஏணி. “ஏய் நல்ல பிள்ளை இல்லே நீ.. வா வா “ என்று ராமோஜி அதை அழைக்க அடுத்த முறை…




Read more »

ராமோஜி ஆங்கரே 1698 சுவர்ணதுர்க்கம் – என் அடுத்த புதினம் ராமோஜியம்

By |

எலி பிடித்ததோடு தொடங்கி, பத்து கடல் கொள்ளைக்காரக் கப்பல்களை அடுத்தடுத்து வென்ற கோலியில்லா கோலியிவன் (செம்படவ இனத்தில் பிறக்காத சிறந்த மீனவன் இவன்), கனனோஜி நண்பன் இவன் என்று ராமோஜியின் பராக்கிரமம் சொல்வதாக அந்தப் பாடல் நீளும். வார்த்தைகள் இன்றி தாளம் மட்டும் கொட்டி சொற்கட்டு உதிர்த்து அலைகள் அதிர முடியும். தனனான தன்னான தானா தனனான தனனான தானா அந்தத் தத்தகார மெட்டை முணுமுணுத்தபடி கப்பல் மேல்தளத்தில் மெல்ல உலவினான் ராமோஜி ஆங்கரே. பலமான ஒரு…




Read more »

ராமோஜி ஆங்கரே வருடம் 1698 – ராமோஜியம் நாவலில் இருந்து ஒரு பகுதி

By |

“ராமோஜிக்கு அடுத்து?” கனோஜி ஆங்கரேயின் கேள்வி புரியவே நேரம் எடுத்தது ராமோஜிக்கு. ”துணைப் பெயர் பத்மநாபராவ்ஜி என்று கேட்க சாதாரணமாக இருக்கு” என்றார் கனோஜி. குறை காண்பதாக இல்லை அது. ”ஆங்கர்வாடி என்னும் புராதன செம்படவ கிராமத்துப் பெயரில் இருந்து, ஆங்கரே என்ற துணைப்பெயரை, எனக்கு கடல் கற்பித்த கோலி இனத்துக்கு நான் செய்யும் மரியாதையாக வைத்துக் கொண்டேன்” என்றார் அவர். “நானும் ஆங்கரே ஆகட்டுமா?” கனோஜி புன்சிரிப்போடு தலையசைக்க, அடுத்த நிமிஷம் ராமோஜி ஆங்கரே ஆனான்…




Read more »