Archive For மே 19, 2020

ராமோஜி ஆங்கரே 1698 அத்தியாயத்திலிருந்து : புதினம் ராமோஜியம் (வெளிவர இருக்கிறது)

By |

ராமோஜியை தஞ்சாவூரிலோ, டபோலிலோ, சுவர்ணதுர்க்கத்திலோ யாரும் பெயர் சொல்லிக் கூப்பிடுவதில்லை. முன்பெல்லாம் எலிப்பொறி ராமோஜி என்று கூப்பிடுவார்கள். அப்புறம் அவனை ராமோஜி ஆங்கரே என்று அழைப்பவர்களின் எண்ணிக்கை பெருகியது. அது ராமோஜி கடற்படையில் சேர்ந்த பிறகு. சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் புதல்வர் ராஜாராம் போன்ஸ்லே நாடாளும் இந்தக் காலத்தில் மராட்டி கடற்படை சகல வலிமையோடும் முன்னேறத் தொடங்கியுள்ளது. அவரைத் தெரியாதவர்கள் கூட அபூர்வமாக அங்கங்கே இருக்கலாம். ஆனால் மராட்டி கடற்படைத் தலைவர் கனோஜி ஆங்கரேயைத் தெரியாதவர்கள் இந்துஸ்தானத்தில்…




Read more »

ராமோஜி ஆங்கரே – சுவர்ணதுர்க்கம் 1698 : ராமோஜியம் நாவலில் இருந்து

By |

15.ராமோஜி ஆங்கரே 1698 சுவர்ணதுர்க்கம் – பகுதி 1 கடல் அமைதியாக இருந்தது. பிற்பகல் நேரக் கடல் இது. வேளைக்கொரு குணம் இதற்கு உண்டு. மகிழ்ச்சியோ, துக்கமோ கொண்டிருக்கும்போது இது ராமோஜியோடு பேசும். அவனை அதிகாரம் செய்யும். உற்ற தோழனாக, செவி மடலைச் சிலிர்க்க வைக்கும் உப்புக் காற்றோடு ரகசியம் சொல்லும். கடல் கோபித்திருந்தால் ஓவென்று இரைந்து யாரை என்றில்லாமல் வைது திட்டும். அல்லது அழும். உறங்கப் போகும் நேரத்தில் கடல் தனக்குத்தானே தாலாட்டுப் பாடிக் கொள்வதையும்…




Read more »

ராமோஜியம் – தோபிகாட் ஒரு காலை 1946

By |

காம்பவுண்டுக்கு வெளியே கழுதை சாஜு நின்று கொண்டிருந்தார். எம்விஎம் ஸ்டூடியோவில் உத்தியோகம் பார்க்கத் தொடங்கியிருந்தால் அவர் சாயந்திரம் ஆறு மணிக்கு வீட்டில் எப்படி இருக்க முடியும்? அவரைத் திண்ணையில் இருத்தினேன். விலாசினி எதிர் வீட்டில் இருந்து எட்டிப் பார்த்துவிட்டு இரண்டு சிறிய டம்ளர்களில் சாயாவோடு வந்தபோது இனிமையான மாலை என்று முகமன் கூற மனம் நச்சரித்தது. சொன்னேன். ”இன்னிக்கும் வீடு சுத்தம் பண்ண முடியலே. நாளைக்கு ரத்தி வந்து எல்லாம் செஞ்சுப்பா.. நீங்க அப்படியே விட்டுடுங்க.. என்ன…




Read more »

சகலநேசனும் 1946 மதறாஸும் – எழுதி நிறைவு பெறும் ராமோஜியம் புதினத்தில் இருந்து

By |

”எப்படி ஆடறோம்?” பத்திரிகையை என் முகத்துக்கு நேர்பிடித்தாள். எனக்கு எல்லாம் பழகிவிட்டிருந்தது. சகல நேசனின் உடும்புத் தைலமும், அறுபத்து நாலு கரணமும் நிஜமாகவும் கிட்டத்தட்ட அதே நிலைக்குக் கொண்டு போய் விட்டதைப் போல் அம்மணமாக ஆடுவது கிளர்ச்சியூட்டவில்லை தான். எழுதட்டும். இனி இது பற்றி எழுத ஒன்றுமில்லை என்று நிறுத்தி விடுவார்கள். நாலு பேர் அடுத்த வீட்டு காம்பவுண்டில் இருந்து பார்த்தால் பிரபலமானேன் என்று அர்த்தம். தலையைக் கண்டதும் டிரைவரும், தோட்டக்காரனும், சமையல்காரியும் குசுகுசுவென்று பேசினால் மேல்தட்டு…




Read more »

என் வரவிருக்கும் நாவல் ராமோஜியம் – 1946 சென்னை – சகலநேசன்

By |

அவரையும் கூட்டிக்கொண்டு அடுத்த தெரு பாலாஜி பவனில் காப்பி குடித்து வரும்போது கேட்டேன் – “உமக்கு தோபிகானா தெரியுமா?” “தெரியுமாவாவது.. நான் அங்கே எம்முட்டு துணி தூக்கிப் போயிருக்கேன்..” ”நாயுடு, குழப்பறீர்” என்று புகார் சொல்லாமல் இருக்க முடியவில்லை. “அதில்லே சார், எங்க வீட்டுக்கு சலவைக்காரர் அங்கே தான் இருந்தார்.. நானும் சேத்துப்பட்டுக்காரன் சாமி… வளர்ந்ததெல்லாம் தோபிகானாவிலேதான்”. மறுபடி குழப்பற்றிங்க நாயுடு .. அங்கே துணி வெளுக்கத்தான் இடம் இருக்கு, நாயுடு போன்ற முரட்டுப் பிள்ளைகளை எப்படி,…




Read more »

புதினம் ‘ராமோஜியம்’ – ஒரு சிறு பகுதி – சகலநேசன் 1946 ஜனவரி

By |

உடம்பு கொஞ்சம் ஓய்வெடு என்று முரண்டு பிடித்தது. சூபரின்டெண்டெண்ட் பதவி இல்லாதிருந்தால் ஆபீசுக்கு ஒரு நாள் லீவு சொல்லியிருப்பேன். எல்லா அக்கப்போரும் சகித்து, நீள நீளமாகக் கையெழுத்து போட்டு, நிறைய ஃபைல் நோட்டிங்குக்கு ரிடர்ன் என்று சிவப்பு மையில் எழுதித் திருப்பி அனுப்பி, ஓர் ஆபீஸ் நாள் கடந்து போனது. சாயந்திரம் ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது சாஜுவை வீட்டு வாசலில் பார்த்தேன். முகம் மலர்ந்திருந்தார். காலையில் எம்விஎம் செட்டியார் ஆளனுப்பிக் கூட்டிவரச் சொல்லியிருக்கிறாராம். அடுத்த…




Read more »