Archive For ஆகஸ்ட் 23, 2021

ஸாமுரின் இடுப்பில் அவசரமாக உடுத்தியதுபோல் ஒரு பட்டுத் துணியை இறுக்கக் கட்டி இருக்கிறார். அதற்கு மேல் உடை ஏதும் இல்லை. பரந்த மார்பும் கரளை கரளையாகக் கையும் காலும் வாய்த்து இரு பக்க கை அமரும் இடங்களிலும் சிங்க உருவங்கள் வடித்து நிறுத்திய அரியணையில் அமர்ந்திருக்கிறார் ஸாமுரின். மேலுடம்பில் துணி போர்த்தாததைக் குறையாக்காமல் கழுத்திலிருந்து இடுப்பு வரை நீளமான, குறைந்த நீளத்தில், மத்திய நீளமாக முத்துமுத்தாகப் பதித்த மாலைகளும் காசுமாலைகளும் அழகான ஆபரணங்களாக அவர் நெஞ்சில் தவழ்கின்றன….

மிளகு நாவலில் இருந்து கோரன் போனபோது மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருந்தது என்றார் பரமேஸ்வரன். “பின்னே இல்லையா? ரெபல்லியஸ் லெஃப்டிஸ்ட் அப்படித்தான் கவிதைப் புத்தகத்து அட்டையிலே போட்டிருக்கார். காண்பிக்கறேன் பாருங்கோ”. அவர் காஃபி டேபிள் கீழ் வரிசையாக வைத்திருந்த புத்தகங்களை குவியலாக அள்ளி எடுத்து உரக்கப் பெயர் குறிப்பிட்டார். “எதுக்கு திலீப்? நான் மலையாளம் படிக்கலே. தமிழும் இங்க்லீஷும் மராத்தியும் கொஞ்சம் இந்தியும் தெரியும். அவ்வளவுதான்”. புத்தகத்தைத் தேடி எடுத்து தூசி தட்டி ஓரமாக ஜன்னல்…

ஆகஸ்ட் 22 1639 மதராஸ் என்ற சென்னை அமைக்கப்பட்ட தினம். இன்றைக்கு அந்தப் பெரும் நிகழ்வின் ஆண்டு நிறைவு. சென்னைக்கு என் வாழ்த்துகள். என் படைப்புகளில் நான் விரிவாகச் சிறப்பித்து எழுதிக் கொண்டாடும் என் பிரியத்துக்கு உரிய பெருநிலப் பரப்பு மதறாஸ். முக்கியமாக நாவல்களில் கதாபாத்திரமே ஆகியிருப்பது வெவ்வேறு காலகட்டத்தில் சென்னை மாநகர். அரசூர் வம்சம் 1850-களின் சென்னை விஸ்வரூபம் நாவலில் – 1915 முதல் 1945 வரையான சென்னை அச்சுதம் கேசவம் 1960-களின் சென்னை வாழ்ந்து…

வேகமாக வளர்ந்து வரும் மிளகு நாவலில் இருந்து – பதவி உயர்வு கிடைத்ததும் பெத்ரோ ஜெரஸோப்பா நகரில் ஒரு அலுவலகம் திறந்தார். ஹொன்னாவர் ரதவீதி மாளிகை பார்க்க வருகிறவர்களால் நிரம்பி வழியத் தொடங்கியது அதற்கு முக்கியக் காரணம். ஒரு மாதம் முன் அவுத் என்ற லக்னோ, கல்கத்தா, திருச்சிராப்பள்ளி, திருவனந்தபுரம் நகர போர்த்துகீசிய பிரதிநிதிகள் ஒரே நாளில் வந்து சிரமமாகி விட்டது. பகலில் ஆளுக்கு ஒரு குரிச்சி, கூட வந்தவர்களுக்கு வாசலில் பாய் விரித்து இடம் என்று…

Madras Week Aug 22 2021 சென்னை நகரவாசிகள் உலக மகா யுத்த நேரத்தில் காலி செய்து போன சென்னை (1942) ) (ராமோஜியம் நாவலில் இருந்து) ராமோஜி நகர் நீங்காத 1942 மதறாஸ் கொட்டக் கொட்ட முழித்துக்கொண்டு எங்கள் வீட்டில் நானும் ரத்னா பாயும். தெருவில் முதல் வீட்டிலும், கடைசி வீட்டிலும் சேர்த்து நாலைந்து பேர்வழிகள் உண்டு. மற்ற வீடெல்லாம் கதவடைத்துப் பூட்டி திண்டுக்கல் பூட்டு தொங்கிக் கொண்டிருக்கிறது. பேட்டை முழுக்க ஆள் நடமாட்டம் உள்ள…

From the novel being written by me – MILAGU நாற்பது நாழிகை. பிற்பகல் நான்கு மணி. ஹொன்னாவர் வெண்மாளிகை வீதியில் கணிகையர் வீடுகளில் அழகான பெண்கள் எழுந்து பசியாறுகிறார்கள். வாடிக்கையாளர்களோடு இரவு முழுக்கக் கூடியிருந்து விடிகாலையில் பசியாறி உறங்கப்போன அந்தப் பெண்கள் இன்றிரவு அணிய வேண்டிய, அணிந்து களைய வேண்டிய உடைகள் சீராக மடித்து நறுமணமூட்டி வைக்கப்படுகின்றன. அவர்கள் கூட்டமாக நீராட மாளிகைக் குளங்களுக்குப் போகிறார்கள். நீராடித் தற்காலிகமாகப் புத்துணர்ச்சி பெற்று மாளிகையில் கிழக்கு…