Archive For ஆகஸ்ட் 14, 2021

விடுமுறை தரும் வாவுநாள் – மிளகு நாவலில் இருந்து

By |

விடுமுறை தரும் வாவுநாள் – மிளகு நாவலில் இருந்து

சிறுவன் மஞ்சுநாத் அப்பாவோடு விளையாட இரு வாரத்துக்கு ஒரு நாள் கிடைக்கிறது என்று பேர். பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்கள் அவை. அந்த வாவு தினங்களில் ஜெருஸோப்பாவிலும் ஹொன்னாவரிலும் எல்லா வர்த்தக நிறுவனங்களும் கடை அடைத்து வியாபாரத்தை அடுத்த நாளுக்குத் தள்ளிப்போட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்று விஜயநகர விதிமுறைகளைப் பின்பற்றி விடுமுறை அறிவிக்கப்பட்டு ஐந்து வருடமாகி விட்டது. வேலைக்கு விடுப்பு வந்த தினம் என்று நிறைவேற்றிக் கதவு சார்த்திப் பூட்டுப் போட யாருக்கும் கஷ்டமில்லை. இன்று அப்படி…




Read more »

நவாப் பழக்கம் – ஜிலேபியும் ஜாங்கிரியும் (நாவல் மிளகு)

By |

நவாப் பழக்கம் – ஜிலேபியும் ஜாங்கிரியும் (நாவல் மிளகு)

நாவல் மிளகு-வில் இருந்து ஒரு ஜாங்கிரி எழுந்ததும் அப்பக்கா கடைப்பிடிக்கும் ஒரு சுல்தான் – நவாப் பழக்கம் உண்டு. ஒரு பெரிய கோப்பை நிறையக் காய்ச்சிய சூடான பால். அதில் சர்க்கரை மறந்துகூடப் போடக்கூடாது. தட்டின் நடுவில் அந்த உயரக் கோப்பை. இரண்டு பக்கமும் இரண்டு பெரிய ஜிலேபிகள். ஜாங்கிரி இல்லை ஜிலேபி என்பதில் அப்பக்கா உறுதியாக இருக்கிறாள். ஜாங்கிரி தென்னிந்திய இனிப்பு என்பாள் அப்பக்கா. நெய் மணக்க, கோதுமைச் சாறு காய்ச்சித் திரண்ட பூங்கொத்து போன்றது…




Read more »

ஹொன்னாவரில் ஒரு கிறிஸ்துமஸ்

By |

ஹொன்னாவரில் ஒரு கிறிஸ்துமஸ்

மிளகு நாவலில் இருந்து நாளைக்குத்தான் கிறிஸ்துமஸ் நாம வியாபார ஸ்தலமா இருக்கறதாலே இன்னிக்கே கொண்டாடறோம். கேக் செய்து கொடுத்தவர் கஸாண்ட்ரா. அவங்களுக்கு உதவி ரோகிணி. முட்டைகளைச் சேர்த்துத்தான் கேக்குகள் செய்யப்படும் என்பதால், இனிப்பு அங்காடியில் அவற்றை உருவாக்க முடியாது. இங்கே முட்டைக்காரர் கிருஷ்ணப்பா படியேறலாம். அவர் விற்கும் முட்டை உள்ளே வர முடியாது. ஆகவே பெத்ரோ துரை வீட்டிலே, அவர் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு கோழிக்கோடு பயணம் வைக்க முன்பு அனுமதி வாங்கி அவர் வீட்டு குசினியில் இவற்றைச்…




Read more »

மிளகு நாவலுக்குள் வந்த வண்ணத்திப் பூச்சி

By |

மிளகு நாவலுக்குள் வந்த வண்ணத்திப் பூச்சி

சாரட் ஜன்னலில் ஒரு வண்ணத்திப் பூச்சி வந்து அமர்கிறது. டிட்லி என்கிறான் கடிபோலி மொழியில். பட்டாம் பூச்சி என்கிறான் தமிழில். சித்ர சலபம் என்கிறான் மலையாளத்தில். சிட்டே என்கிறான் கன்னடத்தில். போர்பொலேடா என்கிறான் போர்த்துகீஸில். பரமன் மலைத்துப் போய் உட்கார்ந்திருந்தார். மூன்று வயதில் இத்தனை மொழி கொஞ்சம் போலவாவது எப்படி கற்றுக் கொண்டான்? அவனையே கேட்கிறார். தும்பைப் பூ மாதிரி முகம் மலர்ந்து பிரகாசிக்கச் சொல்கிறான் – என் சிநேகிதங்க வேறே வேறே பாஷை பேசுவாங்க. எல்லோருக்கும்…




Read more »

400 வருடம் பின் நோக்கிப் போனவரின் மறுவரவு – மிளகு நாவலில் இருந்து

By |

மிளகு நாவலில் இருந்து – ———————————– சாரட்டில் மனமே இல்லாமல் ஏறிக்கொண்டார் பரமன். குழந்தை மஞ்சுநாத் மட்டும் பிடிவாதம் பிடிக்கவில்லை என்றால் அவர் எல்லாவற்றையும் எல்லோரையும் உதறிவிட்டுப் போயிருப்பார். எங்கே? ஜெரஸோப்பாவில் கோவில்கள் நிறைந்த ராஜவீதிக்கு. அங்கே இருக்கவும் உண்ணவும் வண்டிக்காரன் சத்திரம் உண்டே, அங்கே வண்டிக்கார நண்பர்களும் உண்டே சீன மந்திரவாதியால் என்ன செய்ய முடியும் என்று பரமன் காத்திருக்க வேண்டும்? யோசித்துப் பார்த்தார். புரியவில்லை. மாசேதுங்கின் சிவப்புப் புத்தகத்தை மராட்டியின் கிளைமொழியில் மொழிபெயர்த்த இடதுசாரி…




Read more »

பீமன் திரௌபதிக்கு நறுமண மலர் கொடுத்த ராமாயணம்

By |

பீமன் திரௌபதிக்கு நறுமண மலர் கொடுத்த ராமாயணம்

”மிளகு’ நாவலில் இருந்து = காலை ஐந்து மணிக்கு கோவிலில் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்திருந்தாள் தெரிசா. நாலரை மணிக்குக் குளித்து விட்டு கோவில் போகும்போது பாதுகாப்பாக சங்கரனைக் கூட்டிப் போவதுபோல் அவர் நடுவில் நடக்க இரண்டு பக்கமும் இரண்டு துணைவியரும் கூட வந்தார்கள். திலீப் ராவ்ஜியும் விடிகாலை கோவிலில் தொழும் இனிய அனுபவத்துக்காக சங்கரன், வசந்தியோடு சேர்ந்து கொண்டார். வீட்டிலிருந்து பதினைந்து நிமிடம் நடை தூரத்தில் ஸ்ரீகிருஷ்ணன் கோவில் என்பதால் வாகனம் இன்றி நடந்து போய் அந்த…




Read more »