Archive For ஜனவரி 23, 2022
An extract from my forthcoming novel MILAGU வீராயி ஓரமாகக் கிடந்த பிடவையை உடுத்திக் கொண்டு பரமனிடம், போகலாம் என்றாள். யாரும் இல்லே எல்லாரும் போய்ட்டாங்க என்று இன்னொரு தடவை சொன்னார் காரியகர்த்தா. பரமன் வெளியே கிளம்பியபோது வீராயியும் அவரோடு நடந்தாள். மனதே இல்லாமல் அவள் கூட வரச் சம்மதித்தார் பரமன். எல்லோரும் வந்தாங்க யாரும் இல்லே இப்போ என்றார் காரியகர்த்தா கடைசியாக. வேட்டி வேணாமா என்று பரமனிடம் கேட்டாள் வீராயி. ஒன்றும் பதில் சொல்லவில்லை…
An extract from my forthcoming novel MILAGU வயதான சத்திரக் காரியகர்த்தா மட்டும் வாசல் படியில் உட்கார்ந்திருந்ததைக் கண்டு சந்தோஷம் ஏற்பட்டது பரமனுக்கு. மகாதேவரே, தனியாக என்ன செய்யறீங்க இங்கே? பரமன் கேட்டபடி கிழவரின் சிலீர் எனக் குளிர்ந்த விரைத்த கையைப் பற்ற அவர் பதற்றத்தோடு தன் கரத்தை உதறி யாரும் இல்லே போங்க போங்க என்று திருப்பித் திருப்பிச் சொல்கிறார். உள்ளே சோறு இருக்கா, நேத்து வடிச்சதுன்னாலும் சரிதான். பரமன் கேட்க, காரியகர்த்தா மறுபடியும்…
An excerpt from my forthcoming novel MILAGU ஜெருஸூப்பா பிற்பகல் மஞ்சுநாத். மஞ்சுநாத் ஓடி விளையாடிய தெருதான் இது. சதா பாட்டுச் சத்தமும் பேச்சொலியும் கேட்டுக் கொண்டிருக்கும் பெரிய வீடுகளும், அங்கங்கே ஜவுளித் துணியும், சந்தனமும் அத்தரும், மாமிசமும், பழங்களும் விற்கும் கடைகளும் அம்மாவின் இனிப்பு மிட்டாய்க்கடையும் இருக்கும் ராஜவீதி இது. பழக்கமான இடத்துக்கு வந்து சேர்ந்ததில் மஞ்சுநாத்துக்கு ஒரு சின்ன உற்சாகம் ஏற்பட்டது. இதோ வெற்றிலைக்கடை. அதற்கு அடுத்து மிட்டாய்க்கடை. மிட்டாய்க்கடை படி ஏறும்போது…
An excerpt from my forthcoming novel MILAGU ஆளுக்கு ஒரு கடப்பாரையோடு கேலடி படை அந்த வீட்டுக்குள் ஹோவென்று கத்திக்கொண்டு நுழைகிறது. வாசல் முழுக்க காரைக்கட்டிகளுக்கு நடுவே சுவர் பாதி கிடக்க, முன் கதவு பாதி அறுந்து கிடக்கிறது. ஜாக்கிரதையாகக் கால் வைத்து வீட்டுக்குள் நுழைகிறவர்கள் அடுத்த வினாடி காலில் யாரோ எதுவோ இறுகக் கட்டி மேலே ஊர்வது முதுகுத் தண்டில் சிலிர்ப்பை ஏற்படுத்த பாம்பு பாம்பு பாம்பு என்று அங்கங்கே குரல் எழுகிறது. அவசரமாக…

An excerpt from my forthcoming novel MILAGU ரோகிணி, நல்லா இருக்கீங்களா? சொத்தைப் பல் தளபதி தான். இவ்வளவு அதிகாலையில் இவன் எங்கே வந்து தொலைந்தான்? அம்மா அம்மா மஞ்சுநாத் குரல் மறுபடி. படுக்கையை நனைத்திருப்பான். வந்தாச்சு மஞ்சு. ரோகிணி சொல்லியபடி என்ன விஷயம் என்று தளபதியைப் பார்த்துத் தலையாட்டுகிறாள். உனக்கு ஒண்ணுமில்லே, வேலையப் பாரு என்று கையை அசைத்து விட்டு அவசரமாக உள்ளே போகிறான் ரோகிணியை முந்திக் கொண்டு. உள்ளிருந்து கதவை அவசரமாகத் தாழ்…
An excerpt from my forthcoming novel MILAGU உங்களை நாற்பது கல் கொத்தடிமைகளாக நடக்க வைக்க லச்சுவுக்கு எப்படி மனம் வரும் மக்களே. சாரட்டுக்கு ஐந்து பேராக ஏறிக் கொள்ளுங்கள். குரலில் அன்பும் வாத்சல்யமும் நிறைந்து வழிய உடனே இளவரசர் ஜயவிஜயிபவ என்று வாழ்த்தும் ஒலி மைதானத்தில் எதிரொலித்தது. செல்வோம் ஜெருஸூப்பா என்று லட்சுமணன் அடியெடுத்து வைக்க, செல்வோம் ஜெருஸூப்பா என்று இருநூறு குரல்கள் ஆதரித்து முழங்கின. ஜெருஸூப்பா போய் என்ன செய்வீர்கள்? அடுத்த கேள்வியைக்…