Archive For ஜனவரி 16, 2022

அடுத்த ஒரு மணி நேரம் காளீஸ்வரன் சார் அல்ஜீப்ரா எடுக்க வந்து விடுவார். உலகத்திலேயே சிரிக்கத் தெரிந்த ஒரே கணக்கு வாத்தியார் காளீஸ்வரனாகத்தான் இருக்கும். ஒரு மிரட்டல், உருட்டல், அடிதடி இல்லாமல், ராஜா இல்லையா, தங்கம் இல்லையா, படிடா தம்பி என்று செல்லமாகத் தட்டிக் கொடுத்தே கணக்கு விளக்கெண்ணெயை லிட்டர் கணக்கில் புகட்டி புத்திக்கு வலிமை தந்தவர் அவரே. என் ‘நெம்பர் 40, ரெட்டைத் தெரு; பயோபிக்ஷன் நூலில் திரு காளீஸ்வரன் பற்றி நான் எழுதியது ஒரு…
An excerpt from my forthcoming novel MILAGU கேலடி — நடு இரவு. வெங்கட லட்சுமணன் கேலடியில் இருந்து புறப்படும்போது படையினர் முன்னூறு பேர் அவன் தலைமையில் அணிவகுந்து வருகிறார்கள். அவர்களிடம் லட்சு என்ற வெங்கட லட்சுமணன் எங்கே போகிறார்கள் என்று சொல்லவில்லை. யுத்தம் நடக்கிறது என்று அவர்களுக்குத் தெரியும். தாயாரின் ஜெருஸுப்பா அரசுக்கு நெருக்கடி உண்டாக்கி மகன் படையெடுத்துப் போய் போர் நடத்தும் யுத்தம். வீட்டுக்குள் அடித்துக் கொள்ளாமல் வெளிநபர்கள் தூண்டி விட்டு நடக்கும்…
‘மிளகு’ நாவலை இன்று எழுதி நிறைவு செய்தேன். 88 அத்தியாயங்களும் 900+ பக்கங்களுமாக நாவல் விரிந்திருக்கிறது. முதல் எடிட் நாளை தைப்பொங்கல் அன்று மங்கலமாகத் தொடங்கியது. நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பான பொங்கல் வாழ்த்துகள் பொங்கும் மங்கலம் எங்கும் தங்கட்டும்.
An excerpt from my forthcoming novel MILAGU என்னப்பா வெளிக்கு போய்ட்டு வரதுக்குள்ளே அடிச்சுக்கிறீங்க என்றபடி தொந்தியைத் தடவியபடி உள்ளே வந்தார் வெங்கடப்ப நாயக்கர். அவர் சொல்லி அனுப்ப குதிரை வீரன் ஒருவன் மிர்ஜான் கோட்டையை நோக்கிப் போய் கோட்டைக்காவலரிடம் ஏதோ சொன்னான். அடுத்த பத்தாவது நிமிடம் நேமிநாதன் குற்றுயிரும் குலையுயிருமாக மிர்ஜான் கோட்டைக்குள் எடுத்துச் செல்லப்பட்டான். நடுப்பகல். மிர்ஜான் கோட்டை நேமிநாதனின் அரச குடும்ப மாளிகை கருத்த துணியைக் கழியில் பறக்க விட்டுப் பிடித்தபடி…
An extract from my forthcoming novel MILAGU யுத்தம் முடிஞ்சு போச்சு. சென்னபைராதேவி தோல்வி கண்டு துவண்டு கிடக்காள் கோட்டைக்குள்ளே. இருக்க விடலாமா மாமனாரே என்று ஊடுருவினார் பிலகி அரசர் திம்மராஜு. கேட்டுட்டு சொல்லு மாப்ளே என்று அவரை நிறுத்தச் சொன்னார் வெங்கடபதி. மிர்ஜான் கோட்டை லட்டு மாதிரி ஒரு செங்கல் கூட உடையாமல் நம்ம கைக்கு வரணும். வரும். நம்ம படை மிர்ஜானுக்குள்ளேயும் வேண்டாம். ஹொன்னாவர் உள்ளேயும் வேண்டாம். இன்னிக்கு முழுக்க இங்கேயே கோட்டைக்கு…

A longish extract from my forthcoming novel MILAGU மிளகு அத்தியாயம் எழுபத்தொன்பது 1606 மிர்ஜான் கோட்டை விடியற்காலையில் ஜெருஸூப்பாவின் சென்னபைராதேவி மிளகு ராணியின் படை எதிரணியான நேமிநாதனின் படைகளிடம் தோல்வி அடைந்ததை அறிவித்தது. மிர்ஜான் கோட்டை உள்ளே இருந்து வெள்ளைக் குதிரை மேல் வெள்ளைக்கொடி பிடித்து மூன்று அரசு தரப்பு படையினர் எதிரணியின் தாவளத்துக்குப் போனபோது அந்த அணியின் வீரர்கள் ஒரே குரலில் ஜெய்ஹோ என்று முழங்கினார்கள். போர் முடிந்தது என்று தோல்வியை சென்னபைரதேவி…