Archive For ஜூன் 14, 2022

அழகியல் (aesthetics) வகைப்படுத்தும் சிருங்காரம், கருணை, நகைச்சுவை போன்ற நவரசங்களில் பீபஸ்தம் (வெறுப்பு – அருவருப்பு) இலக்கிய ஆக்கத்தில் குறைவாகவே கையாளப் படுகிறது. நான் அரசூர் நான்கு நாவல் தொகுதியின் இரண்டாம் நாவலான விஸ்வரூபம் நூலில் சித்தரிக்கும் பீபஸ்தம் இது. ———————————– 1927 மார்ச் 13 அக்ஷய மாசி 29 ஞாயிற்றுக்கிழமை சட்டென்று பக்கத்து முடுக்குச் சந்துக்கு நேராக மட்ட மல்லாக்காகத் திறந்து வச்சிருந்த மரக் கதவு கண்ணில் பட்டது. அதுக்கு அண்டக் கொடுத்துத்தான் என்…

Era Murukan’s foreword to G.B Chathurbhujan’s (Baskar S Iyer) short story anthology ‘A lesson in love’ Ray Bradbury, the noted Science Fiction writer quipped when once asked how to write a good short story, ‘write one short story weekly; you can’t write 52 bad stories one after another and there is going to be a…
அச்சுதம் கேசவம் நாவலில் இருந்து- கணபத் மோதக் வாசல் கதவைப் பூட்ட பூட்டையும் சாவியையும் எடுத்துக் கொண்டான். விராரில் உள்ளொடுங்கி இருக்கப்பட்ட கட்டடத்தின் வெகு பின்னால் கதவு வைத்து இணைத்த மற்றொரு தொடுப்புக் கட்டடத்தில் நீள வாக்கில் பம்மிப் பதுங்கிய இடத்தில் பிளைவுட் சுவர் வைத்துத் தடுத்த பாதி அறை அது. வாசகசாலை. ரெண்டு பெஞ்ச், தலைவர் படம். பெரியதாக சத்ரபதி சிவாஜி மகராஜ் படம். கட்சி அலுவலகத்தில் திலீப்பும் கண்பத்தும் கையெழுத்துப் போட்டு வாங்கி வந்தது….

புத்தக வாடை சமீபத்தில், 1921-ம் வருட டயரி ஒன்று கிடைத்தது. பரண் உபயம்தான். வக்žல் குமாஸ்தாவாக இருந்த இரண்டு தலைமுறைக்கு முந்திய உறவுக்காரருடையது அது. இண்டு இடுக்கு விடாமல் வாய்தா, வக்காலத்து நாமா , சிரஸ்ததார் பெண் கல்யாணத்துக்குப் போனது, முன்சீப் கோர்ட் கிளார்க் அம்மா சிவலோக பதவி அடைந்தது என்று கலந்து கட்டியாகப் பதிவு செய்து வைத்திருந்த டைரியில் அந்தக் கால தஞ்சாவூர் அத்தர்க்கடை விளம்பரமும் கண்ணில் பட்டது. “நானாவித பரிமள கந்தங்களும், இங்கிலீஷ் தேச…

அற்ப விஷயம்-8 கல்யாணம் கச்சேரி உல்லாசம் எல்லாமே ‘இந்தத் தேதியில் கல்யாணம். ரிசப்ஷன். வந்து வாழ்த்தவும்.’ ஆடி பிறந்து ஆத்தா கோவில்களில் ஒலிபெருக்கி கட்டி எல்.ஆர்.ஈஸ்வரி பாட்டு போட ஆரம்பிக்கும்வரை தொடர்வது திருமண அழைப்புகளின் படையெடுப்பு. மனசு நிறைய அன்பும், வாழ்த்த வாயில் வார்த்தையும் இருக்குது தான். ஆனாலும் ஒரு கல்யாணப் பந்தல் விடாமல் ஏறி இறங்கினால் ஆபீசில் லீவும் பர்ஸில் பணமும் கரைந்து போகும். செருப்பு அடிக்கடி காணாமல் போகும். டிவிடி மாதிரி…

அற்ப விஷயம் -17 குங்குமம் பத்திரிகை பத்தித் தொகுப்பில் இருந்து ‘திரு.அ இறந்துவிட்டார்’. மொபைல் தொலைபேசியில் எஸ்.எம்.எஸ் தகவல். இந்த மாதிரியான செய்திகள் பெரும்பாலும் தூங்கப் போன பிற்பாடு வந்து படுக்கைக்குப் பக்கத்தில் பொறுமையாகக் காத்திருக்கும். விடிந்ததும் படிக்கக் கிடைத்து அன்றைய தினத்தையே தடம் புரட்டிப் போட்டுவிடலாம். யார் காலமானார், அனுப்பியவருக்கு என்ன உறவு அதைவிட முக்கியமாக நமக்கு யார் என்பதைப் பொறுத்த பாதிப்பு இது. முதல் எதிர்வினை…