Archive For ஜூன் 2, 2022
அற்ப விஷயம்-29 ஆண்கள் மற்றும் சம்சாரிகள் இரண்டு தலைமுறை முன்னால் கேள்விப் பட்டிருக்க முடியாத விஷயங்களைப் பட்டியல் போடு என்று ரொம்ப அக்கறையாக யாராவது வீட்டுக் கதவைத் தட்டி விசாரித்தால், இண்டர்நெட், டெலிவிஷன் மெகா சீரியல், மினரல் வாட்டர், பிட்சா என்று விரலை மடக்கலாம். அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பார்த்துவிட்டு இந்த லிஸ்டில் ஆணுறையையும் சேர்க்கலாமா? மகா மகா தப்பு. அதை எடுத்து விடவும். 1937-ம் வருடத்துப் பத்திரிகை ஒன்றை மேய்ந்து…

நேர்கண்டவர் எழுத்தாளர் காளிப்ரசாத் புரவி மிளகு நாவலின் அடிப்படை பற்றி… இரா.முருகன் 54 வருடம் சென்னபைரதேவி அரசாட்சி செய்தாலும் சரித்திரத்தின் அடிக்குறிப்புகளில் கூட மிகச் சில மொழிதல்கள் உள்ளதேயன்றி அவரைச் சுற்றிப் போகும் வரலாற்றெழுத்து ஏதும் இல்லை என்பது ஆச்சரியமான விஷயம். கிட்டத்தட்ட சமகாலத்தவரான உள்ளால் பிரதேச மகாராணி அப்பக்கா தேவி பற்றிக்கூட குறிப்புகள் உண்டு – அப்பக்கா என்று மூன்று தலைமுறையாக பாட்டி, அம்மா, மகள் மூன்று பேருக்கும் குழப்பமாக ஒரே பெயர் இருந்தாலும்! கெருஸொப்பா…