Archive For ஆகஸ்ட் 30, 2024

வழி மாறித் திரும்பி நீண்டு தேய்ந்து மறையும் பாவமன்னிப்பு

By |

வழி மாறித் திரும்பி நீண்டு தேய்ந்து மறையும் பாவமன்னிப்பு

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுப்பில் நான்காவது நாவல் இது. நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி கீழே தொடர்கிறது- மூன்றில் ஒருத்தர் பிரஞ்சுக் காரர் இல்லையோ? மிகச் சரிதான். பிரஞ்சுக் காரர்களுக்கும் காலம் காலமாக இங்கிலாந்து பேரரசு இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்து, இங்கிலீஷ் பண்பாட்டைப் போதித்து வருகிறது. சதா பெண்களோடு சிருங்காரம் பாராட்டுவதிலும், கெட்டுப் போன ஒயினும், முந்தாநாள் சாப்பிட்ட மீனும் உலர்ந்து துர்வாடை அடிக்கும் அவர்களின் வாய்க்குள் நாவு நுழைத்து முத்தம்…




Read more »

ஆல்பர்ட் கோமகன் நடு இரவில் அருளி நடந்தது-வைதிகர்கள் வாழ்த்தப்படட்டும்

By |

ஆல்பர்ட் கோமகன் நடு இரவில் அருளி நடந்தது-வைதிகர்கள் வாழ்த்தப்படட்டும்

வாழ்ந்து போதீரே – அரசூர் வரிசையில் நான்காம் நாவல். அதிலிருந்து அடுத்த சிறு பகுதி இதோ- கூடத்தில் சரவிளக்கு பாதிக்கு மட்டும் வெளிச்சம் வர எரிந்து கொண்டிருந்தது. ஆல்பர்ட் பிரபு தினசரி மிடுக்காக நடந்து வலது புறம் திரும்பும் இடத்தில் போட்டு வைத்த பெரிய மர மேஜையைச் சுற்றி மூன்று வேலைப்பாடமைந்த நாற்காலிகள்.   மேஜையும் நாற்காலிகளும் ஆல்பர்ட் பிரபு காலத்து மரவேலைப் பொருட்கள் போல் தோன்றவில்லை அவருக்கு. அவருடைய சந்ததியினர் வாங்கி வைத்திருக்கலாம்.   குடியும்,…




Read more »

ஆல்பர்ட் பிரபு இருநூறு வயது சிநேகிதிகளின் பட்டியல் இடும் நேரம்

By |

ஆல்பர்ட் பிரபு இருநூறு வயது சிநேகிதிகளின் பட்டியல் இடும் நேரம்

வாழ்ந்து போதீரே – அரசூர் வம்சம் நான்கு நாவல் வரிசையில் நான்காவது நாவல். அதிலிருந்து அடுத்த சிறு பகுதி இங்கே- இப்படி யார் யாரையோ வீட்டுக்குக் கூப்பிட்டு அரிசி வடித்துக் கொட்டித் தின்ன வைத்து ராத்திரி முழுக்க விளக்கைப் போட்டுக் கொண்டு கூட்டாலோசனை செய்து கொண்டிருக்கிறவன் தான் காரணம்.   இந்த வீட்டுக்குள் அவன் வந்தது முதலே ஆல்பர்ட் பிரபுவை மதிக்கிறதுமில்லை. கண்டு கொள்வதும் இல்லை.  வீட்டுச் சொந்தக்காரர், நானூறு வருஷம் முன் மகா பிசகாக ஏதோ…




Read more »

கென்சிங்டன் – ஏர்ள்’ஸ் கோர்ட் மாளிகையில் ஆல்பர்ட் பிரபுவின் ஆவி எழுந்து உலவும் நள்ளிரவு நேரம்

By |

கென்சிங்டன் – ஏர்ள்’ஸ் கோர்ட் மாளிகையில் ஆல்பர்ட் பிரபுவின் ஆவி எழுந்து உலவும் நள்ளிரவு நேரம்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது. அதிலிருந்து அடுத்த சிறு பகுதி வாழ்ந்து போதீரே        அத்தியாயம்   முப்பத்தைந்து                ஆல்பர்ட் மிடிங்டன் ரிச்சர்ட்சன் பிரபு நடுராத்திரிக்கு வழக்கம்போல் எழுந்து கொண்டார். அவர் உலவப் புறப்பட வேண்டிய நேரம் அது.   எழுந்ததும் தான் தெரிந்தது, அவர் கூடுதலாகவே உறங்கி விட்டிருந்தார் என்று. பொழுது புலர்ந்து கொண்டிருந்தது.   சலவை செய்த உடைகள் மர பீரோவில் இருப்பதை அவர் உறுதி செய்து கொள்ள…




Read more »

தடாகங்களையும் வாய்க்கால்களையும் எதிர்பார்த்து லீட்ஸ் வழி லண்டன்

By |

தடாகங்களையும் வாய்க்கால்களையும் எதிர்பார்த்து லீட்ஸ் வழி லண்டன்

பரிசோதகர் டிக்கட்டைப் பரிசோதிக்காமலே இறங்கி விட்டதில் அவருக்கு மகா ஏமாற்றம். ஒரு குளிர் பானமும் ஒரு தகரக் குவளை லாகர் பியரும் என்று முசாபர் கேட்டு வாங்கிக் கொண்டிருக்க, அமேயர் பாதிரியார் கழிப்பறைக்கு நடந்தார்.   அங்கே தாழ்ப்பாள் போட்டிருக்கக் கூடாது. உள்ளே எப்படி இருந்தாலும் சரிதான். பாதிரியார் உடுப்பு நனையாமல் ஜாக்கிரதையாக நிற்க வேண்டும்.   அவர் வேண்டுதல் எல்லாம் செவிசாய்க்கப்பட, வெளியே வந்தபோது அவரை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்த முசாபர் குளிர் பானத்தை அவரிடம் நீட்டினான்….




Read more »

ஹதீம் தாய் போன்ற கேவா கலர் சினிமா பாணியில் பழங்கதை சொல்லத் தொடங்கியபோது

By |

ஹதீம் தாய் போன்ற கேவா கலர் சினிமா பாணியில் பழங்கதை சொல்லத் தொடங்கியபோது

வாழ்ந்து போதீரே -அரசூர் வம்சம் நாவல் வரிசையில் நான்காவது- அந்தப் புதினத்தில் இருந்து அடுத்த சிறிய பகுதி இங்கே இதோ- அழகான உச்சரிப்பில் பிபிசி செய்தி வாசிக்கிற அல்லது அரசியல்வாதியைக் கழுத்தில் வார்த்தைக் கத்தி வைத்து நேர்காணல் நடத்தும் ஒளிபரப்பாளன் போன்ற வசீகரமான தோரணைகளோடு முசாபர் கேட்க, அமேயர் பாதிரியார் யோசிக்காமல், அவனிடம் சொன்னார் – சொல்லு.   அவருக்கு ஏதாவது பேச வேண்டும். அல்லது கேட்க வேண்டும். அல்லது அந்த புராட்டஸ்டண்ட் கிறிஸ்துவப் பெண்மணி இறங்கிப்…




Read more »