Archive For ஆகஸ்ட் 17, 2024

Running a Fish and Chips retail outlet on behalf of Kochu Teresa

By |

Running a Fish and Chips retail outlet on behalf of Kochu Teresa

இவன் மட்டும் கத்தோலிக்கனாக இருந்தால் குரிசுப் பள்ளியில் அவனுடைய நல்ல குணங்களை, வயிறு சரியாக இயங்கிய ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று நிகழ்த்தும் பிரசங்கத்தில் எடுத்துச் சொல்லி அவனுக்காகப் பிரார்த்தித்து இருப்பார்.   இப்போதும் அவனுக்காக மன்றாட என்ன தடை? எதுக்கு மன்றாட? அவன் மனைவியைப் பிரிந்து கிடக்கிற வாதனைக்காக. இல்லறத்தில் இருக்கிறவர்களுக்குப் பெரிய துயரமில்லையா அது? அவர் அங்கி உடுத்தி வந்தாலும் அவருக்கும் இதயம் இருக்கிறதே, அந்தத் துக்கம் விளங்காதா என்ன?   நீ இப்படி கொச்சு தெரிசா…




Read more »

மரப்பலகை ஆசன ரயிலில் ப்ராட்ஃபோர்டிலிருந்து லண்டனுக்கு ஒரு பயணம்

By |

மரப்பலகை ஆசன ரயிலில் ப்ராட்ஃபோர்டிலிருந்து லண்டனுக்கு ஒரு பயணம்

ஹதிம் தாய்னா என்ன அச்சன்?   முசாபர் கேட்டபடியே எதிர் இருக்கையில் உட்கார்ந்து, மேலே போட்டிருந்த ஓவர்கோட்டைக் கழற்றி அடுத்த இருக்கையில் வீசினான்.   சின்ன வயசிலே நான் பார்த்த சினிமா.   இதை மட்டும் சொல்லி விஷயத்தைக் கடந்து போவதில் அவசரம் காட்டினார் அமேயர் பாதிரியார்.  பேச்சை மாற்றவோ என்னமோ, முசாபர் கால்டர்டேல் தாண்டி இந்த ரயிலில், அதுவும் அவர் இருக்கும் ரயில் பெட்டியில் ஏறி நொடியில் தலை காட்டிய மாய வினோதத்தைப் பற்றி ஆர்வத்தோடு…




Read more »

அமேயர் அச்சன் சிறு பிராயத்தில் பார்த்த ஹதிம் தாய் திரைப்படமும் அற்ப சங்கையும்

By |

அமேயர் அச்சன் சிறு பிராயத்தில் பார்த்த ஹதிம் தாய் திரைப்படமும் அற்ப சங்கையும்

வாழ்ந்து போதீரே        அத்தியாயம்   முப்பத்திநாலு                கால்டர்டேலில் இருந்து லீட்ஸ் ஒரு மணி நேரப் பயணம். அங்கே இருந்து லண்டன். அது இன்னொரு மூணு மணி நேரம்.  ரெண்டும் ரெண்டு கம்பெனி ரயில்களில்.   கால்டர்டேலில் ஏறி உட்காரும் ரயில் ரொம்பப் பழையது. பிரிட்டீஷ் சாம்ராஜ்யம் போன நூற்றாண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தி அறுபது வருடம் அங்கே சகலமான பிரஜைகளும் நெருங்கி அடித்து உட்கார்ந்து மரப் பலகை ஆசனங்களைத் தேய்த்து, அப்புறம் திரும்ப இங்கிலாந்துக்கு மறு ஏற்றுமதி…




Read more »

கரும்புத் தோட்டத்திலே சிசுவுக்குப் பாலூட்ட விடாமல் அடிக்கும் கங்காணி

By |

கரும்புத் தோட்டத்திலே சிசுவுக்குப் பாலூட்ட விடாமல் அடிக்கும் கங்காணி

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுப்பில் நான்காவது நாவல் -அடுத்த சிறு பகுதி நந்தினி அவன் தோளை ஆதரவாகத் தழுவி அவனையும் கட்டிலுக்கு இழுத்தாள். டெலிபோன் டைரக்டரியில் கடைசியாகப் படித்த பெயரை நினைவுக்குக் கொண்டு வர முயன்றபடி வைத்தாஸ் அவளோடு சரிந்தான்.   எமிலி நாலு நாளாக பழைய காலத்தைக் கனவாகக் காண்கின்றாளாம். அவள் இருந்திராத காலம். அவளுக்கு ஏற்பட்டிருக்காத அனுபவங்கள் அதெல்லாம்.   அவன் அணைப்பில் இருந்தபடி நந்தினி சொன்னாள். அணைக்காத ஒற்றை…




Read more »

விழுந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத திரையை யார் கிழித்து வீச வேணுமெனத் தெரியாத பொழுதுகள்

By |

விழுந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத திரையை யார் கிழித்து வீச வேணுமெனத் தெரியாத பொழுதுகள்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுப்பில் நான்காவது நாவல். அதிலிருந்து அடுத்த சிறு பகுதி —————————————————————————————————————————————— பக்கத்தில் அடிக்கடி கதவு திறந்து மூட மேலும் கீழும் போய்வர இயங்கும் லிப்டின் கதவுகள் மூடிய நுழைவு வாசல் இருந்தாலும், எந்த லிப்டும் நந்தினி இருக்கும் தளத்துக்கு வராததால் இங்கே இவர்களைத் தவிர யாரும் இல்லை.   நட்பு நாட்டு அதிபருக்கும் தூதுவருக்கும் இந்த நாட்டரசு அளிக்கும் அதிக பட்ச மரியாதையும் பாதுகாப்பும் அழுத்தமாகத் தெரியும் சூழல்….




Read more »

நந்தினி மகிழ்வோடு சொன்னாள் – என் மகள் பூப்படைந்திருக்கிறாள்

By |

நந்தினி மகிழ்வோடு சொன்னாள் – என் மகள் பூப்படைந்திருக்கிறாள்

வாழ்ந்து போதீரே – அரசூர் வம்சம் நாவல் வரிசையில் நான்காம் நாவல் இது. அடுத்த சிறு பகுதி இங்கே பதிப்பாகிறது இதோ – வைத்தாஸ் சிரித்தபடியே நந்தினியின் மார்பில் கையளைந்த படி கேட்டான். அந்தக் கரங்களை அவள் விலக்கவில்லை. ஆனாலும் அடுத்த தொலைபேசி அழைப்பு வந்து கொண்டிருப்பதாகச் சொல்லி நகர்ந்தவள் படுக்கையில் அமர்ந்து இன்னும் பேசிக் கொண்டிருக்கிறாள்.   எமிலி பேசணுமா? என்ன இருக்கு அந்தக் குட்டிப் பொண்ணுக்கு என்கிட்டே பேச?   கேட்டு விட்டு இந்த…




Read more »