Archive For ஏப்ரல் 13, 2025

படிக்கத் தொடங்கிய புத்தகம் நண்பர் கே.ஹரிஹரன் எழுதிய ‘Kamal Hassan -A Cinematic Journey’ (கமல்ஹாசன் – ஒரு திரைவெளிப் பயணம்.). ஹரிஹரன் தேசீய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் மற்றும் மேநாள் திரைப்படக் கல்லூரி முதல்வர். ஒரு பத்து வருடம் போல் இந்தப் புத்தகத்துக்காக உழைத்திருக்கிறார் ஹரிஹரன் என்பதை அறிவேன். கமல் என்ற Shape Shifter பன்முக ஆளுமை குறித்து எழுதும்போது தொடர்ந்து இற்றைப்படுத்திக் கொள்ள (update) வேண்டியது அவசியம். ஹரிஹரன் அதை சீராகக் கடைப்பிடித்திருக்கிறார்.விதந்தோதுதலோ…

என் ஒன்பதாவது கட்டுரைத் தொகுதியாக வெளியாக இருக்கும் ’யாதும் ஊரே’ நூலிலிருந்து – ————————————————————————– Feb 27, 2009 வெள்ளி . நாரதகான சபா மூத்திர வாடை வழக்கப்படுத்திக் கொண்ட சமாசாரம். அதுவும் முதல் நாலைந்து வரிசை வி.ஐ.பி வரிசைகளில் உட்கார்ந்தால், கதவு திறக்கும் போது, மூடும் போது ‘கழிவறை உலகம் செய்தீர்’ என்று ஞானக்கூத்தனோடு சேர்ந்து மணம் கமழச் சொல்லலாம். சங்கீத சீசனில் சபா கேண்டீனில் கீரை வடை மேற்படி வாடையோடு சாப்பிட்டு சாப்பிட்டு கல்யாணி,…

எட்டாவது கட்டுரைத் தொகுப்பு ‘வேம்பநாட்டுக் காயல்’ நூலில் இடம் பெறும் சிறு கட்டுரை – ’விடுபட்டவை’ (அக்டோபர் 2009-இல் எழுதியது) – விடுபட்டவை லேப்டாப் உபயோகிக்க ஆரம்பித்தவுடன் (ஆச்சு, அதுவும் நாலு வருஷமாக) வீட்டுக் கணினி எப்போதாவது பிரிண்ட் அவுட் எடுக்க, ஸ்கேன் செய்ய மட்டும் பயன்பட்டு வந்தது. இன்றைக்கு என்னமோ தோன்றியது. அந்தக் கணினியில் பழைய .pst கோப்பை அவுட்லுக்கில் திறந்து பார்ர்க, திறக்காமலே போன ஒரு கடிதம். சுஜாதா சார் எழுதிய இதை எப்படி…

ic இதுவரை வெளிவந்த 7 கட்டுரைத் தொகுப்புகளோடு இன்னும் ஒன்று சேர்கிறது – வேம்பநாட்டுக் காயல். நூலில் இருந்து கொஞ்சம் – ராத்திரி அலுத்துக் களைத்து வந்து படுக்கையில் விழுந்து நிம்மதியாகத் தூங்கும் முன்னால் படித்தோம் ரசித்தோம் மூடிவைத்தோம் என்று பெயர் பண்ண ஒரு அரைமணி நேரம் கையில் எடுப்பது என்னவாக இருந்தாலும், வாழ்க்கை வரலாறாக இருக்கலாகாது. ஆனாலும் இப்படியான லேசான வாசிப்புக்கான கனமான புத்தகமாகத் தற்போது எனக்குக் கிட்டியது கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்கமின் ‘மை…

இன்னும் சில வெண்பாக்கள் நண்பர் பா.ராகவன் ஆசிரியராக இருந்த குமுதம் ஜங்க்ஷனில் வெளியானவை சுவரொட்டி அய்யா பிறந்தவிழா அம்மா பொதுக்குழு பைய்யா மலையாளப் போஸ்டரே *கய்யிலெடு; சேசுதாஸ் கச்சேரி வேகம் பசைதடவு. ஏசு அழைக்கிறார் பார். *கையிலெடு என்று பாடம் – பையன் ராத்திரிப் பள்ளிக் கூடத்துக்குச் சரியாகப் போக முடியாததால் படிக்கவில்லை… சீட்டு நாலேகால் லட்சம் உமக்கா எனக்குந்தான். காலே அரைக்கால் கிடைக்குமா ? மேலேதம் வீட்டு நிலையெண்ணிக் கூட்டமாய் நிற்கிறார் சீட்டு நிறுவனத்தில் பூட்டு….

i இந்த வாரம் வெளியான என் அல்புனைவு கட்டுரைத் தொகுதி ‘எடின்பரோ குறிப்புகள்’ நூலில் இருந்து ஆண்ட்ரூ லாய்ட் வெப்பரும் ஓபராவும் இசையமைப்பாளர் ஆண்ட்ரூ லாய்ட் வெப்பரின் இசை முயற்சிகள் எல்லாமே பெரிய தோதில் இசையமைப்பும், பிரம்மாண்டமான கட்டமைப்பும் கூடியவை. ஏ.ஆர். ரெஹ்மானின் கூட்டுறவில் அவர் உருவாக்கி இரண்டு வருடம் முன்னால் சக்கைப்போடு போட்ட ‘பாம்பே ட்ரீம்ஸ்’ இசை நாட்டிய நாடக நிகழ்ச்சியைக் காணச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பாலிவுட் திரைப்படப் பாதிப்பில் உருவான ம்யூசிக்கல் ஆன மும்பைக்…