Archive For பிப்ரவரி 2, 2025
சின்னச் சின்ன சந்தோஷங்களில் இதுவும் உண்டெனக்கு – பழைய தீபாவளி மலர்களை பக்கம் பக்கமாய்ப் புரட்டுவது காகிதப் புத்தகம் கிடைப்பது அரிது டிஜிட்டல் இதழ்களே நமக்கு விதித்தது, நாற்பதுகளின் புத்தகம் கிட்டினால் காலயந்திரம் கிடைத்த மகிழ்ச்சி; நானில்லா பழையதோர் ஆண்டுக்கு ஓசையின்றி சென்று வரலாம். எல்லா தெய்வமும் வந்திருந்து பஞ்சவர்ணமும் தேசலாய்ப் பூசி நிற்பர் சாய்ந்து முன்னட்டையில் இன்னும் யாரும் அமரவில்லை. பாகவதர் ஹரிதாஸ் வருதென்றும் சின்னப்பா ஜெகதலப்ரதாபன் ரிலீஸென்றும் தீபாவளி வாழ்த்தோடு விளம்பரங்கள்; திண்தோள் மான்கண்ணி…
அனுமன் திருக்கோவில் முக்கால்வாசி மூடிய வாசல்முன் பத்திருபது பக்தர்கள் காத்திருப்பர்; குளிக்காத, ஷார்ட்ஸ் அணிந்த கான்வாஸ் ஷூ கழற்றாத இன்னும் பலர் என்போல வெளிவாசல் நின்று உள்நோக்கிக் காத்திருப்போம்; திருத்துழாயும் உலர்ந்த திராட்சை தட்டுமாக கோயிலர்கள் மணியடிக்கக் காத்திருப்பர்; மடைப்பள்ளி நைவேத்யம் வெண்பொங்கல் பொங்கிவர அனுமன் காத்திருப்பார் இன்றைய காத்திருப்பு இத்துடன் முடிய மின்சார முரசு முழங்குது கேள்.