Next  

Next  

  • கணையாழியும் கி.கஸ்தூரிரங்கனும் நானும் சுஜாதாவும் (நிறைவு)

    பதிப்பிக்கப்பட இருக்கும் என் அல்புனைவு நூல் இதுவும் அதுவும் உதுவும்-இல் இருந்து ———————————————————————— — — தொண்ணூறுகளின் மத்தியில் கி.கஸ்தூரிரங்கன் கணையாழி ஆசிரியர் பொறுப்பில் இருந்து விடுபட்டு ஒரு வருடம் ராம்ஜி கணையாழி ஆசிரியராக இருந்தபோது பின்னணியில் நானும் தீவிரமாகச் செயல்பட நேர்ந்தது. ராம்ஜி என் நெருங்கிய குடும்ப நண்பர். நானும் அவரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலமை அலுவலகத்தில் அதிகாரிகளாக இருந்தோம். பாரதி மேல் தீவிர ஈடுபாடு கொண்டவர். (நான்கு ஆண்டுகளுக்கு முன் இயற்கை எய்தினார்.)....

  • சுஜாதாவும் கி.கஸ்தூரிரங்கனும் நானும்

    என் அல்புனைவுக் கட்டுரைத் தொகுதிகள், ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் ஏழு புத்தகங்களாக வெளியிடப்பட்டு வருகின்றன். அவற்றில் ஒன்று ‘இதுவும் அதுவும் உதுவும்’. நூலில் இருந்து கொஞ்சம்போல் இங்கே தருகிறேன். இது ஆபீசுவரி இல்லை. நாளது தேதிவரை மொத்தமே ரெண்டு ஆபிசுவரி தான் எழுதியிருக்கிறேன். முதலாவது, தோழர் ஈ.கே.நாயனாருக்கு. கண்ணூர் பய்யாம்பலம் மாயானத்திலிருந்து பெங்களூர் வந்து இறங்கியதும் மிச்சக் கண்ணீர் பார்வையை மறைக்க மாத்ருபூமி ஸ்டைல் இரங்கல் நடையில் எழுதியது. திண்ணைக்கு அனுப்பும் முன்பு ஒரு தடவை...

  • ஏதோ ஒரு பக்கம்

    ‘ஏதோ ஒரு ’. என் அல்-புனைவு கட்டுரைகளின் தொகுப்பு. என் மற்ற அல்-புனைவுகளோடு இதுவும் நூலாகிறது. புத்தகத்திலிருந்து ஒரு பகுதி இங்கே – ————————————————————————————————— ஏதோ ஒரு பக்கம் இரா.முருகன் (சீரங்கத்துச் சிக்கலார் பாரி நாயனத்தை ஊதி முடித்துக் கிளம்பிப் போய்விட்டார். அந்த மேடை வெறுமையாகவே இருக்கும். ஜில்ஜில் ரமாமணி ஓரமாக ஆடலாம்) . பயண இலக்கியம் எழுத சென்ஸ் ஆப் ஹ்யூமர், கொஞ்சம் பேங்க் பாலன்ஸ், விக்ஸ் இன்ஹேலர், எலாஸ்டிக் போகாத ஜட்டி, எழுதியதை பிரசுரம்...

  • எச்சமிடும் பறவைகளும் பூப்பந்தும்

    ”பூப்பந்து (பாட்மிண்டன்) போட்டி நடத்த தில்லியில் சூழல் உகந்ததாக இல்லை. புகைமூட்டம் கவிந்த மைதானத்தில் பறவைகள் எச்சமிடுகின்றன.” – டென்மார்க் நாட்டு பூப்பந்து வீராங்கனை மியா ப்ளிச்பெல்ட் நான் தில்லியில் முப்பது வருடம் முன் வசித்தபோது குளிர் காலத்தை வருடாவருடம் ஆவலோடு எதிர்பார்த்திருந்தோம். கிட்டத்தட்ட சுத்தமான காற்றும், பின்கழுத்திலும் செவிமடலிலும் இதமாகப் படிந்து குறுகுறுக்க வைத்து சதா கூட வரும் மெல்லிய மூடுபனியுமாக தில்லி சுவர்க்கமாகத் தெரிந்தது அப்போது. புகைமூட்டம் இல்லாத சூழல் அது. Smog பெரும்...

  • தில்லிக்குக் குளிர் அழகு

    தில்லிக் குளிர்காலம் வாடைகளின் காலம் மூக்குச் செத்தால் சொர்க்கம் புலப்படாது முன்பே சொன்னேன் பின்னே வையாதீர். நவம்பர் தொடக்கம் முன்னிரவதனில் காற்று அடர்ந்து காதுகள் குறுகுறுக்க வரலாமா என்று குளிரொன்று கேட்கும். இந்த வருடம் பனிவிழும் என்பார் பண்டு எப்போதோ பார்க்கக் கிடைத்தவர் நினைவும் கனவும் இட்டுக் கலக்கிய பழைய காலம் பங்கு வைத்து தேநீர் பருகிக் கம்பளி தேடுவர். மூடுபனியாய் மெல்லப் பரவி ஆளில்லாத தெருக்களில் கவிந்து பார்வை மறைத்து காலை புலரும். பச்சுப் பச்சென்று...