• 25 ஏப் 2025

    உலகப் புத்தக வாரம் 2025

    என் நூல்களின் பதிப்பாளர் ஸீரோ டிக்ரி பப்ளிஷிங் நிறுனத்தினர் இந்த வாரம (ஏப்ரல்) 23-ஆம் தேதி முதல் ஏப்ரல் இறுதி வரை நீட்சி பெற்ற உலகப் புத்தக வாசிப்பு விழா எடுத்துக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் ...

  • 13 ஏப் 2025

    கமல்ஹாசன் என்ற Shape Shifter

    படிக்கத் தொடங்கிய புத்தகம் நண்பர் கே.ஹரிஹரன் எழுதிய ‘Kamal Hassan -A Cinematic Journey’ (கமல்ஹாசன் – ஒரு திரைவெளிப் பயணம்.). ஹரிஹரன் தேசீய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் மற்றும் ...

Next  

Next  

  • உலகப் புத்தக வாரம் 2025

    என் நூல்களின் பதிப்பாளர் ஸீரோ டிக்ரி பப்ளிஷிங் நிறுனத்தினர் இந்த வாரம (ஏப்ரல்) 23-ஆம் தேதி முதல் ஏப்ரல் இறுதி வரை நீட்சி பெற்ற உலகப் புத்தக வாசிப்பு விழா எடுத்துக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் வெளியிட்டிருக்கும் அனைத்துப் புத்தகங்களுக்கும் விழாக்கால தள்ளுபடி 25% அளிக்கப்படுகிறது ஸீரோ டிக்ரி பப்ளிஷிங் வெளியிட்டிருக்கும் என் நூல்கள் – நாவல்கள் 1) மூன்று விரல் 2) அரசூர் வம்சம் 3) விஸ்வரூபம் 4) அச்சுதம் கேசவம் 5) வாழ்ந்து போதீரே 6)...

  • கமல்ஹாசன் என்ற Shape Shifter

    படிக்கத் தொடங்கிய புத்தகம் நண்பர் கே.ஹரிஹரன் எழுதிய ‘Kamal Hassan -A Cinematic Journey’ (கமல்ஹாசன் – ஒரு திரைவெளிப் பயணம்.). ஹரிஹரன் தேசீய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் மற்றும் மேநாள் திரைப்படக் கல்லூரி முதல்வர். ஒரு பத்து வருடம் போல் இந்தப் புத்தகத்துக்காக உழைத்திருக்கிறார் ஹரிஹரன் என்பதை அறிவேன். கமல் என்ற Shape Shifter பன்முக ஆளுமை குறித்து எழுதும்போது தொடர்ந்து இற்றைப்படுத்திக் கொள்ள (update) வேண்டியது அவசியம். ஹரிஹரன் அதை சீராகக் கடைப்பிடித்திருக்கிறார்.விதந்தோதுதலோ...

  • பவானி தயானி பாடிய பர்வீன் சுல்தானா இந்தியர்க்குச் சொல்வது யாதும் ஊரே

    என் ஒன்பதாவது கட்டுரைத் தொகுதியாக வெளியாக இருக்கும் ’யாதும் ஊரே’ நூலிலிருந்து – ————————————————————————– Feb 27, 2009 வெள்ளி . நாரதகான சபா மூத்திர வாடை வழக்கப்படுத்திக் கொண்ட சமாசாரம். அதுவும் முதல் நாலைந்து வரிசை வி.ஐ.பி வரிசைகளில் உட்கார்ந்தால், கதவு திறக்கும் போது, மூடும் போது ‘கழிவறை உலகம் செய்தீர்’ என்று ஞானக்கூத்தனோடு சேர்ந்து மணம் கமழச் சொல்லலாம். சங்கீத சீசனில் சபா கேண்டீனில் கீரை வடை மேற்படி வாடையோடு சாப்பிட்டு சாப்பிட்டு கல்யாணி,...

  • ஓ ஹென்றியின் ‘முட்டைக்கோசும் அரசர்களும்’,  சுஜாதா, அசோகமித்திர்ன். நித்தியகீர்த்தியும்

    எட்டாவது கட்டுரைத் தொகுப்பு ‘வேம்பநாட்டுக் காயல்’ நூலில் இடம் பெறும் சிறு கட்டுரை – ’விடுபட்டவை’ (அக்டோபர் 2009-இல் எழுதியது) – விடுபட்டவை லேப்டாப் உபயோகிக்க ஆரம்பித்தவுடன் (ஆச்சு, அதுவும் நாலு வருஷமாக) வீட்டுக் கணினி எப்போதாவது பிரிண்ட் அவுட் எடுக்க, ஸ்கேன் செய்ய மட்டும் பயன்பட்டு வந்தது. இன்றைக்கு என்னமோ தோன்றியது. அந்தக் கணினியில் பழைய .pst கோப்பை அவுட்லுக்கில் திறந்து பார்ர்க, திறக்காமலே போன ஒரு கடிதம். சுஜாதா சார் எழுதிய இதை எப்படி...

  • வேம்ப நாட்டுக் காயல் -என் அடுத்த அல்புனைவு நூல்

    ic இதுவரை வெளிவந்த 7 கட்டுரைத் தொகுப்புகளோடு இன்னும் ஒன்று சேர்கிறது – வேம்பநாட்டுக் காயல். நூலில் இருந்து கொஞ்சம் – ராத்திரி அலுத்துக் களைத்து வந்து படுக்கையில் விழுந்து நிம்மதியாகத் தூங்கும் முன்னால் படித்தோம் ரசித்தோம் மூடிவைத்தோம் என்று பெயர் பண்ண ஒரு அரைமணி நேரம் கையில் எடுப்பது என்னவாக இருந்தாலும், வாழ்க்கை வரலாறாக இருக்கலாகாது. ஆனாலும் இப்படியான லேசான வாசிப்புக்கான கனமான புத்தகமாகத் தற்போது எனக்குக் கிட்டியது கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்கமின் ‘மை...