Next  

Next  

  • நூதன் நூதன் என ஸ்மரிக்கும் ஜனக் கடல் பிளந்து வழிவிட அன்னம் போல் நூதன் மிதந்து வந்தபோது

    வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவல். அதிலிருந்து அடுத்த சிற்றஞ்சிறு மொழிச் சிதறல் – அவனைப் பாராட்டுகிற தொனியில், நல்லது நீ இப்போ தான் நல்ல பிள்ளை, காயத்ரி ஜபி என்றார் அவர்.   சார், எல்லா பெயரும் வாங்கிட்டேன். அகல்யா வயசு என்ன ?   பத்திரிகைக்காரன் குறுக்கே புகுந்து கேட்க, அப்புறம் என்று கை காட்டினார் புரோகிதர்.   இன்னும் அரை மணி நேரத்துலே எடுத்தாகணும்.  அவங்கவங்க குளிச்சுட்டு சாப்பிடணுமே, ஆபீஸ், ஸ்கூல்ன்னு...

  • டால்டாவோ வனஸ்பதியோ நெய்ப்பந்தமாக எரிந்து வழிகாட்ட ஷாலினிதாய்  சுவர்க்கத்துக்குப் புறப்பட்டாள்

    நேத்து பார்த்தேனே. நானும் சாகரிகாவும் கை காட்டினோம். அம்மா சாகரிகா கையைப் பிடிச்சுக்கிட்டு நர்சரி ரைம் பாடினாளே.   குழந்தை ஹம்ப்டி டம்ப்டி ஸாட் ஆன் த வால் என்று பாட ஆரம்பித்தது.   வேண்டாம் என்று அடக்கினாள் அதன் அம்மா.   குழந்தையை எல்லாம் ஏன் கூட்டி வரணும்? உடம்பு கிடக்கிற இடமாச்சே. குழந்தைகளுக்கு சட்டுனு பிடிச்சுடுமே ஏதாவது சரியில்லேன்னா.   மனதில் நினைத்ததை அகல்யாவிடம் சொல்லத் திரும்ப, அவளை அங்கே காணோம்.   அம்மாவை...

  • சந்தனம் அதிகம் மணக்காமல் சோப்பு போட்டுக் குளித்தவிட்டு   உடனே வரணும்

    அரசூர் நாவல் தொகுதியின் நான்காம் நாவல் – சிறு பகுதி – இது அவள் சொல்லும் போதே, கீழ் வீட்டுப் பெண், கத்தரி கலர் ஃப்ராக் போட்ட நாலு வயதுப் பெண் குழந்தையின் கையைப் பிடித்தபடி வந்தாள். நேத்து பார்த்தேனே. நானும் சாகரிகாவும் கை காட்டினோம். அம்மா சாகரிகா கையைப் பிடிச்சுக்கிட்டு நர்சரி ரைம் பாடினாளே.   குழந்தை ஹம்ப்டி டம்ப்டி ஸாட் ஆன் த வால் என்று பாட ஆரம்பித்தது.   வேண்டாம் என்று அடக்கினாள்...

  • நூதன் வந்து கொண்டிருக்கிறார் – ஆகாரச் செய்தியும் ஆதாரச் செய்தியும் முன்னால் வர

    ஒரு பழைய மோட்டார் சைக்கிள் ஓரமாக நின்றது. மினிஸ்டர் பெரியப்பாவின் காவலர்கள் ஓட்டி வந்தவனை நரகத்துக்கு உடனடியாகப் போகச் சொல்லிக் கழுத்தில் கை வைக்க, அவன் சட்டைப் பையில் இருந்து எடுத்த அட்டையைக் காட்டினான். அட்டியின்றி வழி கிடைத்தது. பிரஸ், பிரஸ் என்று ஜபித்தபடி அந்த மனுஷன் முன்னேறி வந்து கொண்டிருந்தான்.   பெரியப்பா, தனக்கு மூத்திரம் போக அழைப்பு விடுத்த ஆபீசரைக் கூப்பிட்டார்.   இவங்க கிட்டே ஒரு மனு வாங்கி எனக்கு நோட் போட்டு...

  • ஆடி ஓய்ந்த கால்கள் ஓரமாக நிற்க கைகள் வயிற்றைத் தொட்டுப் பசி என்று காட்டின

    வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவது நாவலில் இருந்து இது – புதுப் புடவை, புதுப் புடவை.   இன்னும் பாட்டுகள் தொடர வாசலுக்கு வந்த அகல்யா, யாரோ நீட்டிய புதுப் புடவையை வாங்கிக் கொண்டு உள்ளே ஓடினாள். பூம் பூம் பூம். சங்கு ஊதியவன் நிறுத்தி தொடர்ந்து இருமிக் கோழையைச் சுவரில் துப்பி நூதனை நனைத்து விட்டுத் திரும்பச் சங்கூத ஆரம்பித்தான்.   ஆர்டிஸ்ட் பென்ஷன் ரொம்ப குறைவா இருக்கு, மகாராஜ்....