Author Archive

KB and I

By |

  1996 – a few weeks before Deepavali. Mr.K.Balachander phoned me up and asked for a couple of my short stories (fresh ones) for Kumudam special issue he was preparing. During that period, Kumudham had a guest editor for each week’s issue – ranging from Nalini Ramarajan to KB-sir(mostly movie personalities). Since it was a…




Read more »

மீனாட்சி திருக்கல்யாணம்

By |

     நண்பர்களோடு பேசுவது சுகம். குறுஞ்செய்தி அனுப்பிப் பதில் பெறுவது அதைவிட ஆனந்தம். நண்பர் கிரேசி மோகனுக்கு இரண்டு நாள் முன் காலைப்பொழுதில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் -‘ இன்னிக்கு மீனாட்சி திருக்கல்யாணம் தெரியுமில்லியா?’. பத்து நிமிஷத்தில் ஒரு குறுஞ்செய்தி -வெண்பா. இரண்டு நாள் நகைச்சுவையும் தமிழ்ச் சுவையும் கலந்த வெண்பா மழையில் நனைந்தேன். அவருடைய இணையத் தளத்தில் – http://www.crazymohan.com/ -வரும்வரை இங்கேயும் இருக்கட்டும். யாம் பெற்ற இன்பம்…




Read more »

ஹிட்லரின் கேமரா-லெனி

By |

  லெனி ரைபென்ஸ்தால் 2003 செப்டம்பர் உதிர்த்துப் போனது சார்புநிலை எதையும் கைக்கொள்ளாத, நிறுவனங்களின் அதிகாரத்தை எதிர்ப்பதையே வாழ்க்கை லட்சியமாகக் கொண்டு செயல்பட்ட எட்வர்ட் சையத் என்ற அறுபத்திரெண்டு வயதுக் கலை இலக்கிய விமர்சகரை மட்டும் இல்லை. சதமடித்துக் கொசுறாக இன்னொரு ரன்னும் போட்டு, ஆனாலும் சமூக வாழ்க்கையின் இருண்ட விளிம்புகளிலேயே கடந்த அறுபது ஆண்டுகளைக் கழிக்க வேண்டி வந்த லெனி ரைபென்ஸ்தாலையும் தான்.




Read more »

எஸ்.பொ? நோ போ

By |

  Paa.Jayaprakasam sir sent me an invite for a function to felicitate the Australian based Eelam Tamil writer EssPo this Saturday. This is the mail i sent to Paa.Je அன்புள்ள ப.ஜெயபிரகாசம் சார் நலமாக இருக்கிறீர்களா? நான் நல்ம். எஸ்.பொ என்ற முழுக்க முழுக்க சுயநலவாதியை, சுரண்டல்காரரை நீங்கள் அறிய மாட்டீர்கள். அவர் சிட்னியில் இருந்து மறுபடி மறுபடி தொலைபேசி தன் கடைசியாக வெளிவந்த முன்னீடுகள்…




Read more »

இன்னொரு குதிரை

By |

  இன்னொரு குதிரை இரா.முருகன் குப்பன் நகரசபைத் தேர்தலில் நாலாம் வார்ட் வேட்பாளராக நிற்பதாக அறிவிப்பான். அஸ்து தேவதைகள் ஆமோதிப்பதாக ராமாமிர்த பாட்டி சொல்வாள். வாஸ்து தேவதைகளைத் தெரிந்தவர்களுக்குக்கூட அஸ்து தேவதைகளை அவ்வளவாகத் தெரியாது. இதுகள் சதா வானத்தில் சஞ்சரித்தபடி, யாராவது ‘எழவு விழ’, ‘நாசமாகப் போக’, ‘சனியன் பிடிக்க’ போன்ற அசுபமான பிரயோகங்களை உதிர்த்தால் உடனடியாக ஆமோதிப்பு தீர்மானம் நிறைவேற்றி அந்தப்படிக்கு காரியங்கள் நடக்க வைப்பதையே முழுநேரம் வேலையாகக் கொண்டவை.




Read more »

தியூப்ளே வீதி – 4

By |

     தியூப்ளே வீதி – 4 இரா.முருகன் வேகுவேகுவென்று சைக்கிள் மிதித்துக் கொண்டு போனோம். மண்டையைப் பிளக்கும் வெய்யில் நெற்றியில் வியர்வையைப் படர்த்தியது. அது கண்ணை மறைத்து வழிய காலேஜுக்குப் பறக்கும்போதுதான் தங்கு ரிக்ஷாவைப் பார்த்தோம். தங்கு என்ற தங்கசாமியை எல்லோருக்கும் தெரியும். வேலிக்காத்தான் செடிகளுக்கு ஊடாக தனித்துத் தெரியும் தரிசு பீடபூமியான ஆவாரங்காடு பகுதியில் பிறந்து வளர்ந்தவன். ஆனால் அவன் சைக்கிள் ரிக்ஷா ஊருக்கே புதுசு.




Read more »