Author Archive

நாக்கு மூக்கு

By |

  குங்குமம் பத்தி – அற்ப விஷயம் -11 காப்பி சாப்பாட்டு ரசனை இன்னும் பிடி கிட்டாத ஒரு சங்கதி. காலை காப்பியில் ஆரம்பிக்கலாம். சில பல பேருக்கு வீட்டில் ரதியாக பெண்டாட்டி இருக்கக் கூடும். அந்தம்மா பின் தூங்கி முன் எழுந்து வாசலில் பத்திரிகையோடு வந்து விழும் ஆவின் பால் பாக்கெட்டை எடுப்பார். கள்ளிச் சொட்டாக காப்பி கலந்து கொண்டு வந்து ஐயாவை எழுப்புவார். இவர் அதைக் கடனே என்று குடித்து விட்டு செருப்பில் காலை…




Read more »

பயணிகள் கவனத்திற்கு

By |

  அற்ப விஷயம் -12 ஆலப்புழை எக்ஸ்பிரஸ் முக்கி முனகியபடி ஊடல் கொண்ட புதுப் பெண்டாட்டி மாதிரி ஊர்கிறது. மேற்கே சூலம், தென்மேற்கில் ஈட்டி, வடக்கே பிச்சுவா என்று ஜோசியர்கள் காலை நேர பண்பலை ஒலிபரப்பில் சொன்னதாலோ என்னமோ ரயில்பெட்டியில் கூட்டமே இல்லை. நடுராத்திரியில் கம்பளிப் போர்வையை பிடித்திழுத்து உலுக்கி எழுப்பி என்னை யாரோ விசாரிக்கிறார்கள் – ‘சேட்டா ஆலப்புழைக்கா?’ இல்லே, அமெரிக்கா போறேன் என்று சொல்லலாமா? வேணாம். இந்த ஆள் அதை ‘ஆ மரிக்கப் போறேன்’…




Read more »

பூச்சிகளின் சொர்க்கம்

By |

  Kungumam column – அற்ப விஷயம் -15 பண்டிகை காலத்தில் வெளிப்பட்ட பட்டணத்தின் முகம் நிச்சயமாக அழகாக இல்லை. தினசரி ஒரு மணி நேரம் மின்சார வெட்டு வந்தபோது ‘என்னய்யா பெரிய தொந்தரவாகப் போச்சு’ என்று அலுத்துக் கொண்ட அந்த முகம் மின்சாரத்தைப் பயன்படுத்த வரம்பு என்று பேச்சு எழுந்தபோது உருட்டி விழிக்க ஆரம்பித்தது. இதோடு கூட சில கோர லட்சணங்களும் அங்கங்கே தட்டுப்படத் தொடங்கின. ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் ஒரு நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்…




Read more »

எஸ்.பொ – முன்னுரைகளின் முகவுரை

By |

  Era.Murukan’s foreword for EssPO’s forthcoming book எஸ்.பொ அளவுக்கு விமர்சனத்தை எதிர் கொள்ள வேண்டிய நிலைமை ஒரு படைப்பாளிக்கு வந்தால் கூறாமல் எழுத்து சந்நியாசம் போயிருப்பான். போயிருப்பாள். தமிழ் என்றில்லை, எந்த மொழி என்றாலும் இதே படிக்குத்தான். இவ்வளவு நீண்ட காலம், அதாவது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு இப்படி யாரையும் துரத்தித் துரத்தி அடிக்க விமர்சகர்களும் சக எழுத்தாளர்களும் எங்கேயும் முனைந்ததாகத் தெரியவில்லை. சளைக்காமல், புறமுதுகு காட்டாமால் இந்த மாட்டடி, காட்டடியை எல்லாம் சமாளித்து…




Read more »

கச்சேரிக்குப் போனவன் கதை

By |

  குங்குமம் ‘அற்ப விஷயம்’ பத்தி திரும்பிப் பார்த்தால் தீபாவளி முடிந்து, ஓசைப்படாமல் கார்த்திகையும் கடந்து போகும். அப்புறம் குளிரக் குளிர இன்னொரு மார்கழி பிறந்துவிடும். பொதுவாக மார்கழி-டிசம்பரில் நம்ம சென்னை ரெண்டு விதமான குழுக்களாகப் பிரிவு செய்யப்படுகிறது. ஒரு கோஷ்டி கருப்பு வேட்டி, சட்டை, கழுத்தில் துளசிமாலையோடு ‘சரணம் அய்யப்பா’ என்று உரக்க விளித்து ஆலப்புழை எக்ஸ்பிரஸ் அல்லது யாத்ரா டிராவல்ஸ் பஸ்ஸில் மலையாள பூமிக்கு விசிட் அடிக்கக் காத்திருப்பது. இது கிட்டத்தட்ட ஆம்பளைங்க சமாசாரம்….




Read more »

ஆப்பிரிக்கத் தமிழ்க் கிராமக் கதைகள்

By |

  ‘ஏதோ ஒரு பக்கம்’ பத்தி எழுத்தாளனாக இருப்பதில் ஒரு சௌகரியம். இலக்கியம் சம்பந்தமாக எந்த நிகழ்ச்சி எங்கே நடந்தாலும் அநேகமாக சம்மன் இல்லாமல் ஆஜராகி விடலாம். அதுவும் வேற்று நாட்டில், குறிப்பாக ஸ்காட்லாந்து என்றால் கேட்கவே வேண்டாம். ஸ்காட்லாந்தில் வெய்யில் காலம் ஆரம்பிக்கும்போது அந்தப் பிரதேசமே விழாக் கோலம் பூண்டுவிடும். ஒரே நாளில் பத்து இடத்தில் நாடக விழா, இன்னொரு நாலு தியேட்டரில் கலைப் படங்கள், நாலைந்து மேடைகளில் சாஸ்திரிய, பாப் இசை நிகழ்ச்சிகள். போதாக்குறைக்கு,…




Read more »