Author Archive

வீட்டுக் கடனைக் கட்டிப் பார்

By |

வீட்டுக் கடனைக் கட்டிப் பார்

இன்றைய (நவம்பர் 13, 2014) தி இந்து நாளிதழில் வெளியாகியுள்ள என் கட்டுரை வீட்டுக் கடனைக் கட்டிப் பார் வங்கிகள் பிறப்பதற்குக் கன காலம் முன்பே வசிப்பிடத்தின் பேரில் வழங்கப்படும் வீட்டு அடமானக் கடன் (Mortgage Loan) புழக்கத்துக்கு வந்துவிட்டது. வீட்டு உடமைக்கான ஆவணத்தைக் கடன் வழங்கும் வங்கியிடம் கொடுத்து வைத்திருந்து, வாங்கிய தொகையை வட்டியோடு கட்டி முடித்தவுடன் அந்தப் பத்திரத்தைத் திரும்ப வாங்குவது அடமானக் கடனுக்கான நடைமுறை. பெரும்பாலும் புது வீடு கட்டவோ, கட்டிக் குடியிருக்…




Read more »

நண்பர் திரு.கமல் ஹாசன் அவர்களுக்கு இதயம் நிறைந்த 60-ம் பிறந்த நாள் வாழ்த்துகள்

By |

நண்பர் திரு.கமல் ஹாசன் அவர்களுக்கு இதயம் நிறைந்த 60-ம் பிறந்த நாள் வாழ்த்துகள்

குமுதம் கமல் 60 சிறப்பு மலரில் என் கட்டுரை மூன்று அழைப்புகள் மொபைல் கூப்பிட்டது. ’பிரைவேட் நம்பர் அழைக்கிறது. நண்பர் கமல் தான். இன்னும் பத்து நிமிடத்தில் கார் சாவியைத் தேட வேண்டும்.. அல்லது கம்ப்யூட்டரைத் திறக்க வேண்டும். ‘என்ன சார், வரணுமா?’ ‘ஆமா’ கார் சாவி.. ‘காரில் வர வேணாம், திருவனந்தபுரம் போகறோம்’. முக்கியமான தமிழ் எழுத்தாளரான நீல.பத்மநாபனைச் சந்திக்க திருவனந்தபுரத்தில் அவர் வீட்டில் நாங்கள் மறுநாள் காலையில் இருந்தோம். எங்களை அன்போடு வரவேற்றார் அந்த…




Read more »

அருண் கொலட்கர் கவிதை – மொழியாக்கம் இரா.முருகன் (ஜெஜூரி கவிதைத் தொகுப்பில் இருந்து)

By |

அருண் கொலட்கர் கவிதை – மொழியாக்கம் இரா.முருகன் (ஜெஜூரி கவிதைத் தொகுப்பில் இருந்து) கதவு சிலுவையிலிருந்து பாதி இறக்கப் பட்ட தீர்க்கதரிசி போல, ஆடியபடி தொங்கும் தியாகி போல, இரும்புப் பட்டை ஒன்று உடைந்துபோய் மற்றதின் பிடிமானத்தில் பழைய கதவு நிற்கும். ஒருமுனை தெருப் புழுதியைத் தொட மற்றது உயர்ந்த நிலைப்படியில் தட்டும். நாள்பட நாள்படக் கூர்மையாகும் பழைய நினைவுகள் போல் சிலும்புகள் மேலெங்கும் துருத்தி இருக்கும். உயிரியல் புத்தகத்திற்குள் திரும்பப் போக வழிதெரியாத தோல்சிதைந்த தசைமனிதப்…




Read more »

அருண் கொலட்கர் கவிதை – மொழியாக்கம் இரா.முருகன் Kala Goda Poems – கவிதைத் தொகுப்பில் இருந்து

By |

எலி மருந்துக்காரனின் பகல் சாப்பாட்டு நேரம் 1 எலிமருந்து விளம்பரம் எழுதிய ஒற்றைக்கால் பலகையை ஓட்டல் சுவரில் சார்த்திவிட்டு எலி நஞ்சு விற்பவன் நடைபாதையில் மதியச் சாப்பாட்டுக்கு உட்கார்ந்து விட்டான். விளம்பரப் பலகைக்கு முதுகைக் காட்டிக்கொண்டு, சத்தம் கூடி எழும் அரசமர நிழலில் அவன். விரக்தியடைந்த பலகை சுவரை வெறித்துக்கொண்டு தண்டிக்கப் பட்டதுபோல நிற்கிறது. மனதில் உள்ளதை மறைத்துவிட்டு வடிவமில்லாத எதையும் அறிவிக்காத வெறுமையான பின்புறத்தைப் போகிறவன் வருகிறவனுக்குக் காட்டியபடி. மரச் சட்டகத்தில் பரந்து கிடக்கும் சலனமில்லாத…




Read more »

தாவோ கோவிலுக்கு எப்படிப் போவது ?

By |

தாவோ கோவிலுக்கு எப்படிப் போவது ?

வீட்டைப் பூட்டாதே. விடியலின் பள்ளத்தாக்கில் இளங்காற்றில் இலைபோல் கனமில்லாமல் போ. வெளுத்த மேனியென்றால் சாம்பல் பூசி மறைத்துப்போ. அதிகம் அறிவுண்டென்றால் அரைத் தூக்கத்தில் போ. வேகம் மிகுந்தது வேகம் தளரும். மெல்லப் போ. நிலைத்தது போல் மெல்ல. நீர்போல் வடிவமற்று இரு. அடங்கி இரு. உச்சிக்கு உயர முயலவே வேண்டாம். பிரதட்சிணம் செய்யவேண்டாம். வெறுமைக்கு இடம்வலமில்லை முன்னும் பின்னுமில்லை. பெயர்சொல்லி அழைக்க வேண்டாம். இவன் பெயருக்குப் பெயரில்லை. வழிபாடுகள் வேண்டாம். வெறுங்குடத்தோடு போ. நிறைகுடத்தைவிட சுமக்க எளிது….




Read more »

அமுதசுரபி தீபாவளி மலர் 2014

By |

அமுதசுரபி தீபாவளி மலர் 2014 வெள்ளிக்கிழமைகளின் கதை சிறுகதை இரா.முருகன் ——————————————– எங்கள் தலைக்கு மேல் ஒரு வாடிக்கையாளர் உண்டு.. கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் கம்பெனிக்கு வாய்க்கும் எல்லா வாடிக்கையாளர்களும் தலைக்கு மேல் ஏறி உட்கார்ந்து அதிகாரம் செய்யறவங்க தானேன்னு கேட்கறீங்களா? உண்மைதான். ஆனாலும் இந்த வாடிக்கையாளர கொஞ்சம் விசேஷம். கோடிக் கணக்கில் பிசினஸ் நடத்தும் இண்டர்நெட் மளிகைக்கடையான இஞ்சி டாட் காம். கைப்பிடியில் கஸ்டமர் வாய்க்க, நாங்களே கூப்பிட்டுத் தலையில் ஏற்றிக் கொண்ட தலையாய குடைச்சல். எங்கள்…




Read more »