Author Archive
லண்டன் ஒலிம்பிக்ஸ் துவக்க விழா நிகழ்ச்சி இரண்டு பேருக்காக நினைவில் தங்கி விடும். வழக்கமான இரண்டாம் உலகப் போர் நோஸ்டால்ஜியாவைத் தவிர்த்து, பிரிட்டிஷ் நகைச்சுவை தூக்கலாகத் தெரிய ஒரு பிரம்மாண்டமான நாடகம் போல் வடிவமைத்த டேனி பாயில் முதலாமவர்.
இரவு 10:30-க்கு தொலைபேசி அழைப்பு. ‘தெரியாத எண்’ என்று அழைத்த எண் மின்னுகிறது. அது மிகவும் தெரிந்த நண்பரின் அழைப்பு. திரு கமல். ஒரு சிறு குழந்தை போல் உற்சாகத்துடன் மறுமுனையில் குரல் – ‘அமெரிக்கா போறேன்’. அமெரிக்கா போவதில் அவருக்கு பெரிய மகிழ்ச்சி ஏதும் இல்லை. அடிக்கடி போய் வருகிறவர் தான். ஆனாலும் இந்தப் பயணம் தனியானது. ‘ஏர்போர்ட்லே இருந்தா பேசறீங்க சார்??’
சில நேரம் சிரிப்புத்தான் வ்ருகிறது. அயர்லாந்தோடு நல்லுறவு வளர்க்க பிரிட்டன் மெனக்கெடுவதை வரவேற்கிறோம். எலிசபெத் ராணியம்மா கையை அயர்லாந்த் மாஜி தீவிர வாதி மக்கின்னஸ் குலுக்கினால் நட்பு வளர்ந்து விடும், ஆமா அப்படித்தான். என்ன இருந்தாலும் ராணி மகாராணிதான். எலிசபெத் மகாராணி போனால் தான் தெரியும் பிரிட்டனின் இழப்பு என்ன என்று. விக்டோரியா சகாப்தம் போல் நிச்சயம் எலிசபெத் சகாப்தமும் வரலாற்றில் நிலைக்கும். ஒரு constitutional monarch எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு எலிசபெத்…
நடேசன் பூங்காவில் வேகு வேகென்று சுற்றி விட்டு மெரினா காந்தி சிலைப்பக்கம் கையில் ஒரு புத்தகத்தோடு போய்ச் சேர்ந்தால், அங்கே புத்தக தினம் தொடர்பான- நடை – ஓட்டம் – கூடியிருந்து குளிர்தல் வகையறா நடவடிக்கைகளே கண்ணில் படவில்லை. சேட்டுகள், சேட்டாணிகள், உலக மெனிஞ்சிடிஸ் தின நடைஞர்கள், வியர்த்த ஜப்பானியர்கள் இத்யாதி. உழைப்பாளர் சிலையில் இருந்து காந்தி சிலை வரை காலை ஏழு மணிக்கு நடை. புத்தகப் பரிமாற்றம் இப்படியான பரிபாடி. இன்றைக்கு என்று தானே…
நான் வேக நடைக்காகப் போகிற பூங்காவில் ஒரு பெரிய மேடை உண்டு. முப்பது பேர் இருக்கலாம். ஐம்பது பேர் நிற்கலாம். மேடை யோகாசனப் பயிற்சிக்காகப் பயன்படுகிறது. மேடைக்குத் தெற்கே நடைபாதைக்கு அப்பால் சிறு குழந்தைகள் விளையாட சறுக்கு மரம், ஊஞ்சல் மற்றும் உடற்பயிற்சி செய்ய நிலப்பரப்பு. அதிகாலையில் குழந்தைகள் வருவதில்லையாதலால் அந்த இடத்தில் இளைஞர்கள் சிலம்பப் பயிற்சி செய்வார்கள். கறுத்து மெலிந்த இளைஞர்கள். தற்காப்புக்கலையும் கற்பார்கள்.
1997-ம் ஆண்டு கணையாழி பொங்கல் மலரை அப்போதைய கணையாழி ஆசிரியருமான திரு ராம்ஜி தயாரித்தார். நண்பர். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் சங்கச் செயலர். சக வங்கி அதிகாரி. தயாரிப்புப் பணியில் நானும் பின்னணியில் இருந்து செயல்பட்டேன். யாரிடம் இருந்தெல்லாம் படைப்பு கேட்க வேண்டும் என்று பட்டியல் தயாரான போது முதல் பெயர் அம்பை. அப்புறம் ஒரு இருபத்தைந்து முப்பது பேர். கதை கேட்டுக் கடிதம் எழுதி வைத்து விட்டுத்தான் முகவரிகளைத் தேட ஆரம்பித்தோம். அம்பை…