Archive For The “பொது” Category

வரலாற்றை எளிமையாக்க அதைப் பெரும்பாலும் இல்லாமல் செய்தல்

By |

வரலாற்றை எளிமையாக்க அதைப் பெரும்பாலும் இல்லாமல் செய்தல்

வாழ்ந்து போதீரே -அரசூர் நான்கு நாவல் வரிசையில் நாலாவது = அடுத்த சிறு பகுதி அதிலிருந்து ==================================================================================   மேல்சாந்தி மகாராஜா இங்கே வந்து ச்ரொதிகளை மரியாதை செஞ்சுட்டுப் போனதாக பெரியவங்க சொல்லி இருக்காங்க.   சிஷ்யன் தன்னை முக்கியமானவனாகக் காட்டிக் கொள்ளும் ஆவலில் கைகட்டிக் கம்பீரமாக நிற்க முயற்சி செய்தபடி சொல்ல, தியாகராஜன் எகிறினார் –   ஓய், மேல்சாந்தி ஒரு புரோகிதர். அம்புட்டுத்தான். மகாராஜா எல்லாம் இல்லை. அம்பலப்புழை ஒரு காலத்திலே செம்பகச்சேரி மகாராஜா…




Read more »

கும்பளங்காய் மகாத்மியம் நூலைத் தேடி எடுத்தவரே எழுதியவருமாவார்

By |

கும்பளங்காய் மகாத்மியம் நூலைத் தேடி எடுத்தவரே எழுதியவருமாவார்

வாழ்ந்து போதீரே = அரசூர் நாவல் வரிசை நான்கில் நான்காவது. அதிலிருந்து அடுத்த சிறு பகுதி   நாலைந்து பித்தளைத் தாம்பாளங்களை ஒருசேர உயர்த்திப் பிடித்து செப்புக் கரண்டிகளால் தட்டி ஒலி எழுப்ப, நாளைக்கு நேரத்துக்கு வரணும் என்று சொல்லி சிஷ்யர்கள் சும்மா வேடிக்கை பார்க்க வந்த வெளியூர் டூரிஸ்டுகளை வெளியே அனுப்பினார்கள். குண்டுராயர் ஓட்டலில் சாப்பாடு நன்றாக இருக்கும் என்ற தகவலும் அவர்களிடம் சொல்லப்பட்டது. ஓட்டல் உரிமையாளார் அதற்காக மாதாமாதம் தனியாக ஒரு தொகையை உபகாணிக்கையாக…




Read more »

நேபாள மகாராஜா ராஜ மரியாதை செய்தால் நமக்கென்ன நோப்பாளம்

By |

நேபாள மகாராஜா  ராஜ மரியாதை செய்தால் நமக்கென்ன நோப்பாளம்

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் நான்கில் நாலாவது -அடுத்த சிறு பகுதி   அவரும் தன்னால் இயன்ற வரைக்கும் நேருவைப் பற்றி தனக்கு உசிதமான தகவல்களைப் பேப்பரில் படித்ததாகவும், புத்தகத்தில் படித்ததாகவும் சொல்லிப் பரப்ப முயற்சி செய்து வருகிறார். அவர் படிக்கிற புத்தகங்கள் காந்தி, நேரு, அந்த மனுஷனுடைய தகப்பன் மோதிலால் நேரு, விபின் சந்த்ர பால், தாங்குதூரி பிரகாசம் என்று நிறையப் பேரைச் சகல கெட்ட குணங்களுக்கும் துர்நடவடிக்கைகளுக்கும் ஊற்றுக்கண்ணாகவும் உறைவிடமாக விவரித்தாலும், மற்ற…




Read more »

சொரிய முடியாத இடத்தில் அரிப்பு தோன்றுவது போல் சின்ன அசௌகர்யம்

By |

சொரிய முடியாத இடத்தில் அரிப்பு தோன்றுவது போல் சின்ன அசௌகர்யம்

வாழ்ந்து போதீரே = அரசூர் நாவல் வரிசையில் நான்காம் நாவல்-அடுத்த சிறு பகுதி கொச்சு தெரிசாவுக்கு மட்டும் கேட்கிற மாதிரி தமிழ் கலந்த ஓட்டை இங்கிலீஷில் மெதுவாகச் சொல்லியபடி அவர் பின்னால் உட்கார்ந்தார்.   இந்த ஊருக்கும் ஜவஹர்லால் நேருவுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்தாள் கொச்சு தெரிசா. ஒரு வேளை அந்தப் பெயரோடு இங்கே யாராவது மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்களோ என்னமோ. அப்புறம், கட்லே போவன் என்றால்? போர்ச்சுகீஸ்காரர்கள் இங்கே யாரும் அந்தப் பெயரோடு உண்டா?…




Read more »

காலண்டரைத் தொலைத்து விட்டுத் தினசரி பண்டிகை கொண்டாடும் வீடு

By |

காலண்டரைத் தொலைத்து விட்டுத் தினசரி பண்டிகை கொண்டாடும் வீடு

வாழ்ந்து போதீரே = அரசூர் நாவல்களில் நான்காவதில் இருந்து அடுத்த சிறு பகுதி [[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[ கும்பளங்காய் மகாத்மியம் என்ற அபூர்வமான ஹாஸ்ய கிரந்தம்.   அந்த கிரந்தம் பற்றிப் பிற்பாடு விசாரித்துக் கொள்ளலாம் என்று முசாபர் பின்னால் இருந்து துரைமார்களின் தோரணையோடு கூடிய ஆங்கிலத்தில் சொல்ல, சாஸ்திரிகள் ஒரு வினாடி திகைத்து நின்றார். தன் ஆங்கிலம் தன் ஆகிருதிக்கு ஒத்து வராமல் லுங்கி கட்டிய துரை பிம்பத்தை உருவாக்குவதை எப்போதும் ரசிக்கத் தவறாத முசாபர், கொச்சு தெரிசாவிடம்…




Read more »

தாந்தோன்றியாய் இயங்கும் சக்கரவண்டிகளும் கும்பளங்காய் மஹாத்யமும்

By |

தாந்தோன்றியாய் இயங்கும் சக்கரவண்டிகளும் கும்பளங்காய் மஹாத்யமும்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவதில் இருந்து அடுத்த சிறு பகுதி ==============================================================================   கொச்சு தெரிசா என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட, தூர தேசத்திலிருந்து வந்த பெண்ணோடு ரேடியோ லைசன்ஸ் உத்தியோகஸ்தர் பேசுவதற்கு முன் பெருஞ் சத்தம் எழுப்பி கப்பி ரோடில் ஒரு சைக்கிள் தாறுமாறாக விழுந்தது. உடுப்பில் படிந்த செம்மண்ணைத் தட்டி உதிர்த்தபடி தரையில் இருந்து எழுந்த சைக்கிளோட்டி, உலகைக் கனிவாகப் பார்த்துப் புன்னகை செய்தபடி வண்டியை நிலை…




Read more »