Archive For The “பொது” Category

நான் இங்கிலாந்திலிருந்து வரும் கொச்சுதெரிசா. கதாப்ரசங்கம் நடப்பது இங்கேதானா?

By |

நான் இங்கிலாந்திலிருந்து வரும் கொச்சுதெரிசா. கதாப்ரசங்கம் நடப்பது இங்கேதானா?

  கனமான குரலில் சிஷ்யகோடிகள் முன்னோடியாக வழக்கமாகப் பாடப்படும் தோத்திரப் பாடல்களைப் பாடி முடித்து ஒரு நிமிடம் இடைவெளி விட்டு பஞ்சாபகேச சிரௌதிகள் குரல் கொரகொரவென்று மெதுவாக ஒலிக்க ஆரம்பித்தது. இரண்டு நிமிடம் பேசி அது ஓய, பின்னால் பட்டுத் துணி விரிப்பில் பத்மாசனம் இட்டு அமர்ந்திருந்த சிஷ்யை தொண்டையைக்  கனைத்துக் கொண்டு கம்பீரமாக அவர் விட்ட இடத்தில் தொடங்கினாள்.   ரேடியோக் காரரின் முகம் பொறுப்பையும் உத்தியோகத்தையும் பிரதிபலிக்க அவர் நிமிர்ந்து படை வீரன் போல…




Read more »

கிடாரங்காயைப் பணிவாக ஏந்திப் புண்ணியாத்மாக்களின் மன நிறைவை உடல்மொழியாகப் பிரதிபலித்து நின்றவர்

By |

கிடாரங்காயைப் பணிவாக ஏந்திப் புண்ணியாத்மாக்களின் மன நிறைவை உடல்மொழியாகப் பிரதிபலித்து நின்றவர்

மலையாளக் கரையில் போன மாசம் வரை சர்க்காருக்காக இதே உத்தியோக கைங்கரியம்  தான் செய்து வந்ததைக் குறிப்பிட்டு விளக்கினார்.   அங்கே சமுத்திரக் கரையில் ஒரு அம்பலம். அவங்க மொழியிலே கோவில். கோவில்லே பூசை வைக்கிற குருக்கள் வீடெல்லாம் கோவில் பக்கம். பெரிய குருக்களை மேல் சாந்தின்னு சொல்வாங்க. அவரோட வீட்டம்மா காலேஜ் வாத்திச்சியா இருந்து ரிடையர் ஆனவங்க. வீட்டுலே டெல்லி டிரான்சிஸ்டர் ரேடியோ உண்டு. அவங்க பாடுன்னு சொன்னா பாடும். பேசுன்னா பேசும். சும்மா இருன்னா…




Read more »

லைசன்ஸ் எடுக்காத ரேடியோக்களை உடைத்தெறியும் பணியும் கரை படியா கரங்களும்

By |

லைசன்ஸ் எடுக்காத ரேடியோக்களை உடைத்தெறியும் பணியும் கரை படியா கரங்களும்

வாழ்ந்து போதீரே –  அரசூர் நான்காம் நாவல் அடுத்த சிறு பகுதி இது இப்படி இருக்க, ராமாயணக் கதை மெல்ல முன்னேறுவதற்குக் காரணம் என்ன என்று ஓய்வு பெற்ற முன்சீப் கோர்ட் நீதிபதி நீலமேகம் பிள்ளை தலைமையில் தாங்களாவே ஏற்படுத்திக் கொண்ட ஏழு நபர் குழு ஆராய்ந்தது. கதை நேரத்தை ஆருடம் கேட்கப் பயன்படுத்துவதே காரணம் என்று அந்தக் குழு தீர்மானத்துக்கு வந்தாலும் அதை முழுக்க எடுத்துச் சொல்ல அவர்களுக்குச் சந்தர்ப்பம் தரப்படவில்லை. இவர்கள் குறிப்பிட்ட ஆரூடம்…




Read more »

இறக்கை முளைத்த பசுக்கள் பறக்கும் பத்திரிகையில் வரும் நேற்றைய செய்தி

By |

இறக்கை முளைத்த பசுக்கள் பறக்கும் பத்திரிகையில் வரும் நேற்றைய செய்தி

வாழ்ந்து போதீரே = அரசூர் நாவல் வரிசையில் நான்காம் நாவலிலிருந்து அடுத்த சிறு பகுதி [[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[ கீழ்ப்பாத்திக் கண்மாய் வக்கீல்களுக்கு இல்லை என்பது எழுதாத விதி. அங்கே குமாஸ்தாக்களும், வேலை வெட்டி இல்லாத ஊர்ப் பெரிசுகளும் மட்டுமே சுருட்டோடும் புது வம்போடும் போய்க் குந்துவது வழக்கம்.   வக்கீல்கள் காலையில் வீட்டு வாசலில் வந்து விழும் ஆங்கிலப் பத்திரிகைகளில் விளையாட்டு பற்றிய பக்கத்தைத் திறந்தது, அதன் கீழ்ப் பகுதியில், யாரெல்லாம் செத்துப் போனார்கள் என்று புகைப்படங்களோடு அச்சடித்து…




Read more »

லைசன்ஸ் இல்லாத ரேடியோக்களை உடைக்க,சாமிவேலுக்கு அதிகாரம் பற்றி

By |

லைசன்ஸ் இல்லாத ரேடியோக்களை உடைக்க,சாமிவேலுக்கு அதிகாரம் பற்றி

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவது நாவலில் இருந்து அடுத்த பகுதி சிரிப்பு அவர்கள் வீடு போகும் வரை கூட வர வைத்த ரேடியோ இன்ஸ்பெக்டருக்கு அவர்கள் மனசார நன்றி சொல்லிக் கலைந்தார்கள்.   சாமுவேலோ சாமிவேலோ, அவர்களை வயசேறிய விடலைகள் ஆக்கியதில் அந்த மனுஷர் முழு வெற்றி பெற்றிருந்தார். அவர்கள் மட்டும் என்று இல்லை, ஒரு வாரமாக எல்லாப் பேச்சும் இதில் தான் போய் நிற்கிறது.   செட்டியூரணியில் இருந்து குடிதண்ணீர்…




Read more »

ரேடியோ லைசன்ஸ் இல்லாமல் கச்சேரி பாட்டு கேட்டால் உடைபடும் ரேடியோ

By |

ரேடியோ லைசன்ஸ் இல்லாமல் கச்சேரி பாட்டு கேட்டால் உடைபடும் ரேடியோ

வாழ்ந்து போதீரே [] அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது – அடுத்த சிறு பகுதி சாமுவேல் என்று பெயர் சொன்னார். போன வாரம் வந்த போது சாமிவேல் என்று சொல்லியிருந்தார். அவருடைய பெயர் இந்த இரண்டில் எது என்று அரசூரில் ஒரு வாரமாகப் பலமான சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது.   எந்தப் பெயரோ, கருத்து மெலிந்த ஒட்டடைக் குச்சி போல ஓங்குதாங்காக வளர்ந்த ஒரு நடு வயசு மனுஷர் அரசூரில் வீடு வீடாக அத்து மீறிப்…




Read more »