Archive For The “பொது” Category

இரானி ஹோட்டல் சிறு சமோசாவும் குடையுமாக வந்த மும்பாய் மழைக்காலம்

By |

இரானி ஹோட்டல் சிறு சமோசாவும் குடையுமாக வந்த மும்பாய் மழைக்காலம்

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காம் நாவலில் இருந்து = ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு ============================================================================= அரசூர் தெரியுமா? அகிலா கேட்டாள்.   சிறிய சமோசாவைக் கடித்துக் கொண்டு தலையை இல்லை என்று ஆட்டினான் திலீப். இரானி ஹோட்டலில் மழைக்காக ஒதுங்க வருகிறவர்களின் கூட்டம் மெல்ல அதிகரித்துக் கொண்டிருந்தது.   மழை தொடங்கப் போகிறது என்று பூஜை செய்த பிள்ளையாரைச் சதுர்த்தி முடிந்து விசர்ஜன் நேரத்தில் கடலில் இடும்போதே எல்லோருக்கும் தெரியும்.  கணபதியைக்…




Read more »

அகல்யா தாய் என வாஞ்சையோடு அழைத்தவரும் சென்னைப் பெண்ணும்

By |

அகல்யா தாய் என வாஞ்சையோடு அழைத்தவரும் சென்னைப் பெண்ணும்

  வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி நூல் வெளியீடு – ஸீரோ டிகிரி பப்ளிஷிங் ============================================================== அகல்யா தாய்   அகல்யா எழுந்து நின்று கை கூப்பினாள். சிரிப்பு குமிழிட்டு வரச் சொன்னாள் –   சார், நான் உங்க பெண்ணு வயசு. தாய்ன்னு கூப்பிட்டா எங்க அம்மாவைக் கூப்பிடற மாதிரி இருக்கு.   அவர் வாஞ்சையோடு அவளை நோக்கினார்.   நீ என் அம்மாவுக்கே அம்மா என்…




Read more »

மாலை கொண்டுவர மறந்து பெரிய சிரிப்பை முகத்தில் ஒட்டி வந்தவன்

By |

மாலை கொண்டுவர மறந்து பெரிய சிரிப்பை முகத்தில் ஒட்டி வந்தவன்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்குநாவல் தொகுதியில் நான்காவதில் இருந்து ஒரு சிறு பகுதி ]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]   மாலை கொண்டு வராததற்காகத் தன்னையே சபித்துக் கொண்டாலும் கதவில் முட்டுகிறது போல் உள்ளே போனபோது திலீப் முகத்தில் மிகப் பெரிய சிரிப்பு ஒன்று ஒட்டி இருந்தது.   கதவு பக்கம் போட்டு வைத்திருந்த ஸ்டீல் மேஜையில் காகிதங்களைப் பரத்திக் கொண்டு அகல்யா உட்கார்ந்திருந்தாள். இவனைப் பார்த்ததும் மராத்தியில் கேட்டாள்   என்ன தேவ் ஆனந்த், லோக்சபா எலக்‌ஷனுக்கு சீட்டா?…




Read more »

பிடிப் பிடியா புஜியாவைத் தின்னு ரெண்டே நாள்லே நாலு கிலோ காயப் – காணாமல் போச்சு

By |

பிடிப் பிடியா புஜியாவைத் தின்னு ரெண்டே நாள்லே நாலு கிலோ காயப் – காணாமல் போச்சு

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்குநாவல் தொகுதியில் நான்காவது நாவலில் இருந்து ======================================================================= முதல் அறையைக் கடக்கும் போதே அவனைப் பெயர் சொல்லி யாரோ அழைக்கிற சத்தம். உள்ளே இருந்து வேகமாக வந்து அவன் கையை அன்போடு பற்றிக் கொண்டார் மிட்டாய் ஸ்டால் பாலகிருஷ்ண கதம்.   பெங்களூர் போனா திரும்பி வரவே முடியாதும்பா என் மகள். நீ அங்கே போய் ஒரேயடியா செட்டில் ஆயிட்டே போலே. உடம்பெல்லாம் தகதகன்னு சிவாஜி மகாராஜ் மாதிரி மின்னுது. நல்லா…




Read more »

ஓங்கி அடித்ததும் நடுநடுங்கி வால் பதுக்கிய நாயானவன்

By |

ஓங்கி அடித்ததும் நடுநடுங்கி வால் பதுக்கிய நாயானவன்

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசை 4 – சிறிய பகுதி ————————————————————————————– மூன்று மாதத்தில் பம்பாய் மாறியதோ என்னமோ, கட்சியின் தலைமைக் காரியாலயம் ஏகத்துக்கு மாறி இருந்தது. வரப் போகும் மாநகராட்சித் தேர்தலில் கட்சி பெரும் வெற்றி அடையும் என்று பரவலாக, எதிர்ப்பாளர்கள் மத்தியிலும் கூட எதிர்பார்க்கப் படுவதாலோ என்னமோ அங்கே தாதர் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம் போலப் பரப்ரப்பான சூழ்நிலை.   திலீப் உள்ளே நுழைந்த போது காக்கிச் சட்டைக் காவலன் குறுக்கே…




Read more »

சிஞ்ச்போக்லியில் சின்னதாக ஒரு பேக்கரி ஆரம்பிக்க உத்தேசம்

By |

சிஞ்ச்போக்லியில் சின்னதாக ஒரு பேக்கரி ஆரம்பிக்க உத்தேசம்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது- நூலில் இருந்து எதிரே மோத வந்த மோட்டார் சைக்கிளைத் தவிர்த்து பிளாட்பாரத்தில் ஏறி நடந்தான் திலீப். வீட்டுக் கதவு திறந்து தலையில் சீப்போடு வந்த பெண் தெருவில் எறிந்த முடிக் கற்றை அவன் காலைச் சுற்றி விலகிப் போனது.  அவள் கதவில் ஒயிலாகச் சாய்ந்து, நான் குளிச்சுட்டு ஃப்ரஷ்ஷா வரேன் உள்ளே வந்து இரு என்றாள் திலீப்பிடம் ரொம்ப நாள் பழகியது போல் அந்நியோன்யமாக. புத்த…




Read more »