Archive For The “பொது” Category

நேற்றைய மனிதர்கள் – இன்றைய நிகழ்வுகள் -நாளைய எதிர்பார்ப்புகள்

By |

நேற்றைய மனிதர்கள் – இன்றைய நிகழ்வுகள் -நாளைய எதிர்பார்ப்புகள்

அரசூர் நாவல் வரிசையில் நான்காவது நாவல் வாழ்ந்து போதீரே (ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு). நாவலில் இருந்து இந்த வாசனைக்கும் இதமான பொழுதுக்கும் வசந்தி பக்கத்தில் இல்லையா உட்கார்ந்திருக்க வேண்டும்! ஆரம்பிக்கலாமா? ஆத்துக்காரியை கூப்புடுங்கோ. நீங்க பஞ்ச கச்சம், அவா மடிசார். அதான் நியதி சங்கரன் சற்றே சலிப்போடு வேஷ்டி மாற்ற உள்ளே போக, ஹோகித்தாரே, ஒன் மினிட் சாஸ்திரிகளே என்று ஜூனியர் சாஸ்திரியை அவனுக்கு பஞ்ச கஞ்சம் உடுத்தி விடக் கண் காட்டி உள்ளே அனுப்பியது…




Read more »

பிதார் ஜெயம்மாவும் நூருண்ணி மேட் ஹோம குண்டமும் ஃபில்டர் காபியும்

By |

பிதார் ஜெயம்மாவும் நூருண்ணி மேட் ஹோம குண்டமும் ஃபில்டர் காபியும்

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காவது- அத்தியாயம் 6 சில பகுதிகள். ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அச்சுப் பதிப்பு வெளியீடு ஹோம குண்டம் இப்படி கைக்கடக்கமா செஞ்சு விக்கறதா? நம்மாத்திலே எல்லாம் தரையிலே செங்கல் வச்சுன்னா அக்னி வளர்த்தது? இது எனக்கு ஒண்ணு வேணுமே. ஜெயம்மா புரோகிதர் கையில் இருந்து அஸ்பெஸ்டாசும் மரமும் இன்னும் ஏதோ உலோகமும் கலந்த ஹோம குண்டத்தை வாங்கிப் பார்த்து விட்டுக் கேட்டாள். ஆமா மாமி, புதுசுதான். இது நூர்ணி…




Read more »

கல்பனா தவிர வங்காளத்தில் வேறு பெண் குழந்தை பெயர் வைக்க மாட்டார்களா?

By |

கல்பனா தவிர வங்காளத்தில் வேறு பெண் குழந்தை பெயர் வைக்க மாட்டார்களா?

அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது நாவல் வாழ்ந்து போதீரே. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு. நாவலில் இருந்து சேர்ந்து மெதுவாக ஓட ஆரம்பித்தார்கள். பிரசவ ஆஸ்பத்திரி சேவை எல்லாம் சீராகக் கிடைக்கிறதா? மோஷய் அக்கறையாகக் கேட்டார். ஏதாவது குறை இருந்தால் அவரிடம் சொன்னால் உடனே சரி பண்ணித் தருவதாகவும் சொன்னார். அவரால் அது முடியும். ஒரு பிரச்சனையும் இல்லே. வீட்டுக்கு முந்தாநாளே வந்துட்டா. நார்மல் டெலிவரி தான். பெயர் என்ன வைக்கப் போறே? கனவு நினைவில்…




Read more »

ஜ்யோதிர்மய் தாஸ் மோஷாய் குழந்தைக்குப் பெயர் சூட்டுகிறார்

By |

ஜ்யோதிர்மய் தாஸ் மோஷாய் குழந்தைக்குப் பெயர் சூட்டுகிறார்

அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது பெருநூல் வாழ்ந்து போதீரே. அதிலிருந்து – அத்தியாயம் ஐந்தில் ஒரு காட்சி தோட்டத்தில் பெரிய கூட்டமாக ஓடிக் கொண்டிருந்தார்கள். கிடைத்த இடத்தில் ஓரமாக உட்கார்ந்து பத்மாசனம் போட்டு ஜமக்காளம் விரித்து இருந்தவர்களையும், சவாசனமாகப் படுத்து கால்களின் ஊர்வலத்தை ரசித்துக் கொண்டிருந்தவர்களையும் கடந்து மெதுவாக ஓட ஆரம்பித்தான் சின்னச் சங்கரன். அரே பாய் ஷங்கர், பெண் குழந்தையாமே. ஜீத்தே ரஹோ. நாற்பத்தேழாம் வருடம், முதல் மந்திரிசபையில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்த…




Read more »

குளிர்காலக் காலையில் லோதி கார்டனில் ஓடப் போன சோம்பேறி

By |

குளிர்காலக் காலையில் லோதி கார்டனில் ஓடப் போன சோம்பேறி

வாழ்ந்து போதீரே அரசூர் நாவல் வரிசையில் நான்காவது. முழுத் தொகுதி (4 நூல்கள்) என் பதிப்பாளர் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் வெளியிடப் பட்டிருக்கின்றது, வாழ்ந்து போதார் அத்தியாயம் ஐந்தில் இருந்து ஷங்கர் ஷார், சாஸ்திரிகள் எட்டு மணிக்கு ரெடியா இருக்கச் சொன்னார். புண்ணியாஜனனம் இன்னிக்கு. ஷார்ட்ஸும் கான்வாஸ் ஷூவுமாக வெளியே வந்தபோது சின்ன மடேடர் வேனை ஓட்டி வந்து காம்பவுண்டுக்குள் நிறுத்திய மைத்துனன் சொன்னான். குழந்தைக்கு என்ன பெயர் சூட்டப் போறாப்பல? இந்த போறாப்பல, வந்தாப்பல…




Read more »

தமிழில் வந்த ரஸ்கின் பாண்டும் ஜெயகாந்தனின் ஹென்றியும்

By |

தமிழில் வந்த ரஸ்கின் பாண்டும் ஜெயகாந்தனின் ஹென்றியும்

பொங்கல் நீள்விடுமுறை தொடங்கிய ஜனவரி 13, சனிக்கிழமை அன்று சென்னை புத்தகக் காட்சி 2024-இல் இரண்டு நூல்களை வெளியிட வாய்ப்புக் கிடைத்தது. அவற்றில் ஒன்று இந்தோ ஆங்கில எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் எழுதிய சிறுகதைகளின் முதல் தொகுப்பு. சரளமான மொழிபெயர்ப்பு. //தேவதாரு மரங்களுக்கு மறுபுறத்தில் வசித்த திருமணமாகாத ஆங்கிலோ இந்திய மூதாட்டிகளிடம் பூனைகள் மட்டும் இருந்தன. திருமணமாகாத பெண்கள் என்றால் அவர்கள் ஏன் பூனைகளை மட்டும் வளர்க்கிறார்கள் என்பது எனக்கு எப்போதுமே புரியாத புதிர்தான் // மொழிபெயர்ப்பாளர்…




Read more »