Archive For The “பொது” Category

தருணாதித்தன் எழுப்பிய ’மாயக் குரல்’ ரசமுள்ளது

By |

தருணாதித்தன் எழுப்பிய ’மாயக் குரல்’ ரசமுள்ளது

போகிக்கு முந்திய சனிக்கிழமை சென்னை புத்தகக் காட்சியில் நான் பங்கு பெற்ற இன்னொரு நூல் வெளியீடு, நண்பர் தருணாதித்தனின் ’மாயக்குரல்’ சிறுகதைத் தொகுப்புக்கானது. மேநாள் ISRO விஞ்ஞானியான தருணாதித்தன் பன்னாட்டு எலக்ட்ரானிக் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக அடுத்துப் பணிபுரிந்தவர். ஸ்ரீகிருஷ்ணன் என்று அசல் பெயர் – ஸ்ரீக்கும் கிருஷ்ணனுக்கும் இடையே ஸ்பேஸ் விடாமல் ஸ்ரீகிருஷ்ணன் என்று சேர்த்துப் பெயரைச் சொன்னதால் பிணரயி விஜயன் நிர்வகிக்கும் பூமியைச் சேர்ந்தவராக இருக்கும் என்று நினைத்தேன். நற்றமிழராம். சொல்வனம் டிஜிட்டல் இலக்கிய…




Read more »

இப்போதைக்கு பகவதி என்று பெயர் போடலாம். ராசியான பெயர் அது ..

By |

இப்போதைக்கு பகவதி என்று பெயர் போடலாம்.  ராசியான பெயர் அது ..

அரசூர் நாவல்கள் நான்கு. நான்காவது நாவல் வாழ்ந்து போதீரே. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு. நூலில் இருந்து சின்னச் சங்கரன் குழந்தை அழுகை சத்தம் கேட்டு உள்ளே போகிறான். பெற்ற உடம்பு அதியுன்னதமாக உலகத்து தாய்மை எல்லாம் சேர்ந்து கவிந்து மின்ன வசந்தி மெல்ல அவனை ஒரு வினாடி பார்த்து விட்டு, தொட்டிலில் உறங்கும் பெண் குழந்தையை பிரியமாக நோக்குகிறாள். பொண்ணு. பரவாயில்லையா? குழந்தை பிறந்த தினத்தில் அவன் ஆஸ்பத்திரிக்கு முதலில் வந்தபோது வசந்தி கேட்டது இது….




Read more »

நேரு போல் ஷெர்வானி தரித்து விடிகாலை துயிலுணர்த்தும் தூத்வாலா -பால்காரர்

By |

நேரு போல் ஷெர்வானி தரித்து விடிகாலை துயிலுணர்த்தும் தூத்வாலா -பால்காரர்

அரசூர் நாவல் வரிசையில் நான்காம் புதினம் வாழ்ந்து போதீரே. இதன் அச்சுப்பதிப்பு -மறுபதிப்பு- அண்மையில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடாக வந்திருக்கிறது. அரசூர் நான்கு நாவல் வரிசையில் மற்ற மூன்றோடு நிறைய வேறுபடும் நூல் இது. புத்தகத்தில் இருந்து – அதானே. நீங்க கப்பல்லே வெள்ளைக்காரிகளோடு ஓஹோன்னு ராக்கூத்து அடிச்ச மனுஷராச்சே. எதெது எங்கேன்னு தெரியாமத்தானே கூட்டமா இருந்து ரமிச்சதெல்லாம்? பகவதி மிதந்து பெரிய சங்கரனின் தோளில் செல்லமாகக் கடித்து அவன் கையை இறுகப் பற்றிக் கொள்கிறாள்….




Read more »

விருச்சிக மாதப் புலரியில் திலீபன் வந்திறங்கிய அம்பலப்புழையும் பகவதி இருந்த அம்பலப்புழையும் வேறுவேறு

By |

விருச்சிக மாதப் புலரியில் திலீபன் வந்திறங்கிய அம்பலப்புழையும் பகவதி இருந்த அம்பலப்புழையும் வேறுவேறு

அரசூர் நாவல்கள் நான்கில் நாலாவது வாழ்ந்து போதீரே. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அச்சுப்பதிப்பாக அண்மையில் வெளியீடு கண்டது. அதிலிருந்து- விருச்சிக மாதப் பிறப்பு தினத்தில் பகவதி தில்லியில் சின்னச் சங்கரன் வீட்டுக்கு வந்தாள். மென்மையாகத் தில்லி குளிர்காலம் தொடங்கி இருந்த விடிகாலை நேரம் அது. உன் பேரன் சின்னச் சங்கரன் உறங்கிண்டிருப்பான் என் பொன்னு பகவதி. பெத்துப் பொழச்ச குட்டிப் பொண்ணு, சின்னச் சங்கரன் பாரியாள் வசந்தியும் தான். அவளுக்கு பிறந்த சிசுவும் நல்ல உறக்கத்திலே இருக்கும்….




Read more »

சிகஸ்ததுவும் துரஸ்துவும் வந்த பத்திரிகைச் செய்தி

By |

சிகஸ்ததுவும் துரஸ்துவும் வந்த பத்திரிகைச் செய்தி

புரவி கலை இலக்கிய இதழில் இடம் பெற்ற என் பத்தி வாதவூரான் பரிகள் பகுதி இந்தக் கட்டடம் அதிக சிகஸ்ததாய்விட்டபடியால் துரஸ்து செய்துகொண்டு வருகிறார்கள் 1903-ஆம் ஆண்டு சுதேசமித்திரன் தினப் பத்திரிகைக் கட்டுரையில் வந்துள்ள வாக்கியம் இது. காசு கொடுத்து வாங்கிய பத்திரிகையை நேரம் செலவழித்துப் படித்து அது என்ன சொல்கிறது என்று புரிய பல மொழி அகராதியும் அந்தக் காலத்தில் தேவையாக இருந்திருக்கும். வேறே ஒண்ணுமில்லை, கட்டுரை ஆசிரியர் சொல்ல உத்தேசித்தது இதுதான் – இந்தக்…




Read more »

ரானடே ரோட் நடைபாதைக் கடை அடுக்கு ஜாடிகளும் ஆவக்காயும்

By |

ரானடே ரோட் நடைபாதைக் கடை அடுக்கு ஜாடிகளும் ஆவக்காயும்

அரசூர் நாவல்களில் நான்காவது, வாழ்ந்து போதீரே = ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு. நாவலில் இருந்து – கவலையே படாதே. நாளைக்கு சாயந்திரம் மடுங்காவிலே மாங்கா வாங்கி அரிஞ்சு எடுத்துண்டு வந்துடறேன். உப்பு, மொளகா, எண்ணெய் எல்லாம் கூடவே வந்துடும். யூ ஸ்டார்ட் தி மியூசிக் யங் லேடி. திலீப் அபயம் அளித்தான். இன்றைக்கு இந்த விஷயம் நினைவு வராமல் போய்விட்டது. வந்திருந்தால், அகல்யாவை வைத்து இந்த ஊறுகாய்க் கொள்முதலை முடித்திருக்கலாம். அட சே, நேசம் வைத்த…




Read more »