Archive For The “பொது” Category
நான்காவது அரசூர் நாவல் வாழ்ந்து போதீரே என் பதிப்பாளர்களான ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் அண்மையில் மறு பதிப்பு செய்யப் பட்டுள்ளது. நாவலில் இருந்து வேலைக்கு நிற்கிற பெண் கதவைத் தட்டி விட்டு எட்டிப் பார்த்தாள். உதடு அசையாமல் ஜாக்கிரதையாக வாயை இழுத்து மூடிக் கொண்டு நந்தினி அவளை நோக்கினாள். உள்ளே ஓடி வந்து, தரையில் உருண்டிருந்த ஆப்பிள் பழத்தை எடுத்து மேஜை மேல் வைத்துவிட்டுத் திருமப வெளியே ஓடி வாசல் கதவைத் தட்டினாள் அந்தப் பெண்….
நேற்று மாலை ஸ்நேகா பதிப்பக ஸ்டாலில் தயங்கித் தயங்கி அரசூர் வம்சம் நாவல் பற்றி வாசிப்பனுபவம் பகிர்ந்து கொண்ட இளைஞர்… ஸீரோ டிகிரி பப்ளிஷிங் ஸ்டாலில் [ அருண் கொலட்கர் கவிதை ஈர்ப்பு மூலம் நண்பரான சொல்வனம் நம்பி.. வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்ட விழாவில் நண்பரான மீனாட்சிசுந்தரம் முரளி… என் ஒவ்வொரு நூலும்ஒரு பிரதி வாங்கி கையெழுத்துப் போட வைத்த மதராஸ் யூத் காயர் – ஐ ஒ பி சக அதிகாரி நண்பர் ஸ்ரீவத்ஸா…
இன்று (ஜனவரி 5, வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி – இரவு 7:30 வரை சென்னை புத்தகக் காட்சியில் நானிருப்பேன். என் பதிப்பாளர்களான ஸீரோ டிகிரி பப்ளிஷிங் ஸ்டாலில் என்னைச் சந்திக்கலாம். ஒரு சொல், ஒரு புன்சிரிப்பு, நீங்கள் பேச நான் கேட்பது என்று ஒரு நிமிடத்தில் நேயம் பாராட்டிக் கடந்து போகலாம். ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியிட்டுள்ள / மறுவெளியீடு செய்துள்ள என் படைப்புகள் = 1) மயில் மார்க் குடைகள் – சிறுகதைத் தொகுப்பு…
வாழ்ந்து போதீரே, அரசூர் நாவல்களில் நான்காவது. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடாக வந்திருக்கிறது. நூலில் அத்தியாயம் 4இல் இருந்து மிகவும் சாதாரணமான விஷயங்களைப் பற்றிக் கரிசனம் மேலிடக் கேட்கப் போகிறீர்கள் என்று பகடியாக அவள் கோர்த்துச் சொன்னதை வானொலியில் ஒலிபரப்புவார்களாம். நல்ல கூத்து இது. வைத்தாஸ் இருக்கும் இடத்தில் அந்த ஒலிபரப்பு போய்ச் சேரலாம். மற்ற நாடுகளில் இது ஒற்றர்களாலும், அரசாங்கப் பிரதிநிதிகளாலும், அமைச்சர், நிர்வாக அதிகாரிகளாலும் மறைபொருள் தேடிக் கவனமாகக் கேட்கப் படலாம். இந்த நாட்டின்…
வாழ்ந்து போதீரே நான்காவது அரசூர் நாவலாகும். ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. நாவலின் மூன்றாம் அத்தியாயத்திலிருந்து = நீங்கள் உற்சாகமாக இருக்கிறீர்களா? நேற்று இரவு உணவுக்கு என்ன சாப்பிட்டீர்கள்? நல்ல முறையில் சீரணமானதா? இரவு நல்ல உறக்கம் கிடைத்ததா? விடியலில் பறவைகள் ஜன்னலில் வந்து பாடினவா? தேத்தண்ணீர் கலந்து கொடுக்கும் உதவியாளர் குறித்த நேரத்தில் வந்தாரா? புதியதாகக் கறந்த பசும்பாலை அரசு பண்ணையின் தலைவர், மூத்த ஊழியர்கள் மூலமாகக் கொடுத்து அனுப்பியிருந்தாரா? அது நேரத்துக்கு வந்ததா?…
அரசூர் நாவல் வரிசையில் 4வது புதினம் வாழ்ந்து போதீரே. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு. நூலில் இருந்து நிறுத்து நிறுத்து நிறுத்து. நடுரோட்டில் தூறல் வலுத்த ஈரத்துக்கு இடையே போய்க் கொண்டிருக்கும் பஸ்ஸின் உள்ளே இருந்து எட்டிப் பார்த்துக் கூச்சல் போட்டான் திலீப். எதேதோ யோசித்தபடி வழக்கம் போல் ஸ்டாப்பைத் தவற விட்டாச்சு. மதராஸிகள் அதிகம் குடியிருக்கும் பிரதேசங்களில் மராத்தி இளைஞர்கள் ஊரே எனக்கு சொந்தம் என்ற மமதையோடு போகிற மாதிரிப் பார்த்துக் கொண்டு திலீப் நிதானமாக…