Archive For The “பொது” Category

ஆடி ஆடித் துக்கம் கரைக்க புறநகர் கடந்து பறந்த மயில்கள்

By |

ஆடி ஆடித் துக்கம் கரைக்க புறநகர் கடந்து பறந்த மயில்கள்

’வாழ்ந்து போதீரே’ அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவது. அதிலிருந்து அடுத்த சிறு பகுதி கார் வந்து நிற்கிற சத்தம். இல்லை. அது ஒரு ஜீப். உள்ளே இருந்து குதித்த முதல் பாதுகாப்புக் காவலர் தரை வழுக்கிச் சரிந்தார்.  காந்தி குல்லாய் எடுபிடிகள், கெட்ட வார்த்தை வசவோ, வலியால் கத்துவதோ, கடவுளை அழைப்பதோ எதையோ மெல்லிய, தீனமான குரலில் சொல்லிய அவரைப் பத்திரமாகத் தூக்கி நிறுத்தினார்கள். உயரமான, கிளிமூக்கு கொண்ட நபர். மலைப் பிரதேசத்தில் இருந்து வந்தவராக…




Read more »

மத்தியதர மேல்தட்டுக் குடும்பத்தைத் தன்னந்தனியாகத் தாங்கி நிறுத்திய மனுஷி, பாம்பே அழுக்கு சாலில் ஊழியம் செய்து தேய்ந்து போன தளர்ச்சி

By |

அகல்யா  மறுபடி ஓடி வந்தாள்.   பாட்டி ஒண்ணும் சாப்பிட மாட்டேங்கறா. ரேகா கிட்டே சொல்லி ஒரு ஈடு இட்லி வார்த்து வச்சிருக்கு. ஒண்ணாவது கழிச்சு சிராங்காய் காப்பி குடிங்கோன்னா மாட்டேன்னு அடம்.  அவ தான் போயிருக்க வேண்டியவளாம். உங்கம்மா பாவம், தானே போய்ச் சேர்த்துட்டாளாம். நீங்க ஒரு வார்த்தை சொல்லி சாப்பிடச் சொல்லுங்கோ.   போனான். பழைய பட்டுப் புடவை வாடையடிக்க கற்பகம் பாட்டி சமையல்கட்டுக் கதவில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். தளர்ந்து தான் போயிருந்தாள். ஒரு…




Read more »

லாவணிப் பாட்டுகள் பாடி ஆடி ஷாலினிதாய் என்ற மகத்தான லாவணிக் கலைஞரை வழியனுப்பியவர்கள்

By |

லாவணிப் பாட்டுகள் பாடி ஆடி ஷாலினிதாய் என்ற மகத்தான லாவணிக் கலைஞரை வழியனுப்பியவர்கள்

வாழ்ந்து போதீரே -அரசூர் நாவல் வரிசையில் நான்காவது -நாவலின் அடுத்த சிறு பகுதி   ஓடி, வாசலில் போய் நின்றான். எடுபிடிகள் காந்தி குல்லாவை நேராக்கிக் கொண்டு அவனுக்கு முன்னால் நகர்ந்தார்கள்.   வேனிலிருந்து மெல்ல இறங்கி  வந்து கொண்டிருப்பவர்கள் நகரத்துக்கு வெகு தூரம் வெளியில் இருக்கும் புறநகரப் பிரதேசங்களில் இருந்து வரும் பழைய லாவணி கலைஞர்கள். அம்மா செயலாக இருந்தபோது அவர்களில் பலரும் வீட்டுக்கு வந்து போனதை திலீப் மறக்க மாட்டான்.   கிராமத்துக் கலைகள் எல்லாம்…




Read more »

சாவு வீட்டில் வடா பாவ்வை வாயில் திணித்தபடி துக்கம் கொண்டாடுகிறவன்

By |

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவது -சிறு பகுதி வார்ட் பிரமுகர் மிட்டாய்க்கடை கதம் இந்தத் துக்கச் செய்தியைக் கேட்டு ஓடி வர வேணாமா?   ஓரமாகச் சுவரில் சாய்ந்து நின்று சிகரெட்டை ஊதிக் கொண்டிருந்த பிரக்ருதியை ஓடச் சொன்னான். அவனும் மகாராஜா உத்தரவு கொண்ட சிப்பாய் போல் சிட்டாகப் பறிந்தான்.   இந்தப் பயல்கள் எல்லோருக்கும் கணிசமாக, எல்லாம் முடிந்து போகும்போது கொடுக்க வேண்டும் என்று தெரியும். சகலத்துக்கும் செலவாகப் போகிற…

Read more »

ஷாமியானா பணிய வேண்டாமா வாசல்லே?துக்கம் ’ஜாரிச்சு நூதன்,திலீப் குமார்னு படா படா ஸ்டார்ஸ் வில் கம்

By |

ஷாமியானா பணிய வேண்டாமா வாசல்லே?துக்கம் ’ஜாரிச்சு நூதன்,திலீப் குமார்னு படா படா ஸ்டார்ஸ் வில் கம்

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காம் நாவல் இது. நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி அவள் சொல்லி விட்டுப் போனவள் திரும்பி வந்தாள்.   வாசல்லே ஒரு ஷாமியானா பணிய வேண்டாமா? அகல்யா கேட்டாள்.   ஷாமியானா? புரியாமல் பார்த்தான் திலீப்.   பந்தல்.   எதுக்கு?   எதுக்கா? நாலு அண்டை அயல் பிராமணா குளிக்கறதுக்கு முந்தி வந்து எட்டிப் பார்த்துட்டு ஓடற கதையா என்ன?   வேறே என்னவாம்?  …




Read more »

இறப்பு நிகழ்ந்த வீட்டில் பகடி செய்து கொண்டிருந்தவன்

By |

இறப்பு நிகழ்ந்த வீட்டில் பகடி செய்து கொண்டிருந்தவன்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவது நாவல். சிறு பகுதி அதிலிருந்து: திலீப் அவனை விழித்துப் பார்த்தான். எல்லோரும் அவனிடம் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். சினிமாவில் பார்த்தபடி, தொடர்கதையில் படித்தபடி, மேடை போட்டு நீட்டி முழக்கித் தலைவர்கள் பேசுவதைக் கேட்டபடி, எல்லாரும் எதிர்பார்க்கிற படி அவன் இப்போது அழுது புரண்டு கொண்டிருக்க வேண்டும். கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வடிந்து சட்டையை நனைக்க, விம்மி விம்மி அழ வேண்டும். பக்கத்தில் இருப்பவர்கள் தேற்றத் தேற்ற,…




Read more »