Archive For The “பொது” Category
‘பேனா’ அப்புசாமி – பெ.நா.அப்புசுவாமி என்ற அறிவியல் எழுத்தாளர் தலைப்பாகையும், பஞ்சகச்சமும் கருப்புக் கோட்டுமாக சாரட் வண்டி ஏறிக் கோர்ட் கச்சேரி போய்த் துரைகள் முன்னால் ஆஜராகி வாதி, பிரதிவாதி சார்பில் வலுவான வாதங்களை வைத்து மயிலாப்பூர் வக்கீல்கள் கலக்கிக் கொண்டிருந்த 1920 களில் , லா பாயிண்ட்தேடாமல் அறிவியலைத் தேடிப் படித்து அதைத் தமிழில் தந்தவர் சட்டம்படித்த பெ.நா.அப்புசுவாமி. பாக்கியம் ராமஸ்வாமி சாஸ்வதமாக்கிய அப்புசாமித் தாத்தாவுக்கும் இந்த அறிவியல் தாத்தாவுக்கும் வயதும் துறுதுறுப்பும் தான் ஒற்றுமை….
மிளகு பெருநாவலில் இருந்து அமைதியான, பரந்த வெள்ளப்பெருக்காக நிலம் தொட்டு, பிரம்மாண்டமான ஜோகு அருவியாகப் பொங்கி, உயரம் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரை அணைத்துக் கீழே ஆவேசமாகப் பொழிந்து, குறுகிய நதிதீரங்களுக்கு இடையே சுழித்துச் சுருண்டு, உயர்ந்து, அலையடித்துக் கடந்து சென்று, கடல் தீரத்தில் நுழைந்து, சதா இரைந்து பாடும் அலைகளோடு கைகோர்த்து விளையாடி, கொஞ்சம் கொஞ்சமாக சமுத்திரத்தின் மகா இயக்கத்தில் கலந்து தனதான அடையாளம் இழந்து, ஆற்று மணலின் மெல்லிய இனிப்புச் சுவையும், தண்ணீர்த் தாவரங்கள்…
UNMESHA 2023 is the annual international literary festival organized by the Ministry of Culture and Sahitya Akademy Aug 3 – Aug 6 2023 in Bhopal. More than 550 writers and artists from various countries will be participating in the festival, taking part in panel discussions, presenting papers, book readings and cultural performances. I’m happy to…
என் ப்ளாக் வேம்பநாட்டுக் காயலில் எழுதியது – ———————————————————————– TUESDAY, JULY 26, 2005 க்ஷேத்ரபாலனு பாத்ரத்தோடெ —————————————- நேற்று கேரளத் தலைநகரான பள்ளிகொண்டபுரத்தில் (அதாவது அனந்தையில்) கேரளத்தை ஆளும் ஐக்கிய ஜனாதிபத்ய முன்னணியின் கூட்டத்திற்கு முதல்வர் உம்மன் சாண்டி கொஞ்சம் தாமதமாக வந்தார். அதாவது, மதியச் சாப்பாடு எல்லாம் முடிந்தபிறகு. “சாண்டி வந்திருக்கேன்” பசிக் குரல். “ஐயோ சேட்டா, உச்சய்க்கு ஊணு எல்லாம் தீர்ந்து போச்சே” “சரி, சாப்பாட்டுப் பாத்திரம் எங்கே? அதில் ஏதாவது மிச்ச…
50 வருடம் முந்திய ஒரு மார்கழி இப்போது தகிக்கும் கோடையின் போது நெம்பர் 40, ரெட்டைத் தெரு நாவலில் இருந்து ————————————————————————————— குளித்துப் பசியாறி, மார்கழி மாத விசேஷப் பொருட்களான சிவன்கோவில் வெண்பொங்கல் பிரசாதமும், பெருமாள் கோவில் புளியோதரை பிரசாதமும் ஒரு பிடி பிடித்துவிட்டு நாங்கள் கூடும் இடம் முருகேசன் படக்கடை. அழகான காலண்டராக சாமி படம் கைக்குக் கிடைத்தால் தேதி பார்க்க அதை மாட்டி வைப்பது இரண்டாம் பட்சமாக இருந்த காலம் அது. அந்த வண்ணப்…
துளுவ அரசி சென்னபைராதேவியின் வரலாற்றை அடிப்படையாக வைத்து ’மிளகு’ பெருநாவல் எழுதிய போது அடிக்கடி நினைவில் வந்தவர், சென்னா போல் நீண்ட காலம் இங்கிலாந்து மகாராணியாக இருந்த, அண்மையில் காலம் சென்ற இரண்டாம் எலிசபெத் மகாராணி. சென்னாவுக்கோ பொன்னியின் செல்வனுக்கோ கிடைக்காத, நிகழ்ந்ததுமே திரையில் நிகழ்த்தப்படும் நுட்பமும் விரிவும் கொண்ட, புனைவு கலந்த வாழ்க்கைச் சித்தரிப்பு எலிசபெத்துக்குக் கிடைத்தது. நெட்ஃப்ளிக்ஸில் எலிசபெத் மகாராணியின் வரலாறு இதுவரை ஐந்து பருவங்களாக, அவை ஒவ்வொன்றும் பத்து ஒருமணிநேர எபிசோட்கள் ஆக…