Archive For The “பொது” Category
வேலைக்கு விடுப்பு வந்த தினம் என்று நிறைவேற்றிக் கதவு சார்த்திப் பூட்டுப் போட யாருக்கும் கஷ்டமில்லை. இன்று அப்படி கடைவீதி உறங்கும் பௌர்ணமி வாவுதினம். அழகான அதிகாலை. பௌர்ணமி வாவுதினமும், அமாவாசை வாவுதினமும் சிறுமிளகு பெருநாவல் சிறுபகுதிக்கு சொடுக்குகவன் மஞ்சுநாத்தின் அப்பா பரமன் பெரும்பாலும் ஜெருஸோப்பா வீட்டில் இருக்கும் நாட்கள் இல்லை. ஹொன்னாவருக்கு வந்து ரதவீதி மிட்டாய் அங்காடியில் ஏதாவது புது இனிப்புப் பலகாரம் செய்து பார்க்கும் முயற்சிகளில் இருப்பார் பரமன். வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்தால், ஊர்…
தேள்களும் அவற்றுக்கு ஆட்பட்ட மானுடரும் பங்கு பெறும் ஊர்வலம் ========================================================================================= ஊர்வலம் பிரம்மாண்டமானதாக இருந்தது. கலந்து கொண்ட ஜீவராசிகளில் தரையில் சுவாசிக்க முடியாதவை கூட பெரிய பாலிவினைல் தொட்டிகளில் நீர் நிரப்பி அதில் சுவாசித்து உலாவில் கலந்து கொண்டன. நெருப்பின்றி கந்தக உருண்டைகளை நீண்ட குழாய்களில் நிரப்பி அதிர்வெடிகள் நிலமதிர வெடித்த நூறுகால் பூரான்கள் இரண்டு வரிசையாக அகலவாட்டில் நடந்து வந்தன. இசைக்கருவி எதுவோ நாராசமாக ஒலித்தது. நடுவே இரு குழுக்களாக வெல்வெட் போல் மெத்தென வழுவழுத்த…
விழித்தெழுந்த பொழுதில் நகர வேண்டியவை பறக்கத் தொடங்கின. எங்கணும் பறவைக் கூச்சல். மருத்துவர் நீலனின் குடிலில் பரபரப்பான இயக்கம் நிகழ்ந்து கொண்டிருந்தது. குடில் என்று ஒரு பழக்கத்தால் தான் குறிப்பிடுவது என்று அந்தக் கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தாலே புரியும். இரண்டு தளங்கள் செங்கல் கூரை மூடியும் வானம் பார்த்த மச்சுமாக வீட்டுடமையாளரின் செழிப்பைச் சொல்வதாக அந்த இல்லம் திகழ்ந்தது. கீழ்த்தளத்தில் சஞ்சீவி மலையைச் சுமந்து கம்பீரமாகப் பறக்கும் அனுமனின் வண்ணப்படம் சுவரை நிறைத்திருந்தது. அந்த ஓவியத்துக்கு தினசரி…
An iron monster of a machine on four wheels, trumpeting like an elephant, the king thought the car and his neighbour’s gramophone must be one in spirit. It was the Banian Brothers who had first told the king the name of the music box—gramophone. The music box too came after the king’s time. The Banian…
செவிமடுத்த அனைவரும் மெய் மறந்து நிற்க, கணீர் என்று சுவரம் உயர்ந்து எங்கும் பரவ, கூட்டத்தில் மூத்த விடுதலை வீரர்களெல்லாம் கை கூப்பி கண் மூடி கண்ணீருகுத்து நின்றார்கள். கர்ப்பூரம் அருமையான பாட்டுடா என்று இன்னொரு இளைஞன் சொல்ல ஏதோ சந்தேகம் வந்தது போல் கர்ப்பூரமய்யன் மேடைக்கு ஓட அவன் நண்பர்கள் பின்னாலேயே நடந்தார்கள். மேடையில் இறைவணக்கம், சற்று வித்தியாசமாக பாரதமாதா வந்தனையான வந்தேமாதாரம் முடிந்து கொண்டிருந்தது. ஓராயிரம் பேரைக் குரலில் தேசபக்தி அளித்து இன்று ஒரு…
வைத்தியர் உள்ளே இருந்து வந்தார். ஆறடி உயரம், குச்சி போன்ற தேகம். நாற்பது வயது இருக்கலாம். முப்பத்தைந்தும் இருக்கக் கூடும். சந்தன முத்திரையும் கீழே குங்குமமுமாகக் கோவிலில் பூசை வைக்கிற சாயல் அவருக்கு. அவர் அசைவில் அவசரம் அகப்பட்டது. ஐயா என்று குயிலியும் வானம்பாடியும் அழைத்தபோது அவர்களுக்கே யாசகத் தன்மை குரலில் ஏறியிருந்தது தெளிவாகத் தெரிந்தது. யாரம்மா என்ன வேணும்? நடந்து கொண்டே கேட்டார். நாங்க வடக்கில் இருந்து வரோம் மூலிகை வைத்தியம் பார்க்கிற குடும்பம். நான்…