Archive For The “பொது” Category
பரிசோதகர் டிக்கட்டைப் பரிசோதிக்காமலே இறங்கி விட்டதில் அவருக்கு மகா ஏமாற்றம். ஒரு குளிர் பானமும் ஒரு தகரக் குவளை லாகர் பியரும் என்று முசாபர் கேட்டு வாங்கிக் கொண்டிருக்க, அமேயர் பாதிரியார் கழிப்பறைக்கு நடந்தார். அங்கே தாழ்ப்பாள் போட்டிருக்கக் கூடாது. உள்ளே எப்படி இருந்தாலும் சரிதான். பாதிரியார் உடுப்பு நனையாமல் ஜாக்கிரதையாக நிற்க வேண்டும். அவர் வேண்டுதல் எல்லாம் செவிசாய்க்கப்பட, வெளியே வந்தபோது அவரை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்த முசாபர் குளிர் பானத்தை அவரிடம் நீட்டினான்….
வாழ்ந்து போதீரே -அரசூர் வம்சம் நாவல் வரிசையில் நான்காவது- அந்தப் புதினத்தில் இருந்து அடுத்த சிறிய பகுதி இங்கே இதோ- அழகான உச்சரிப்பில் பிபிசி செய்தி வாசிக்கிற அல்லது அரசியல்வாதியைக் கழுத்தில் வார்த்தைக் கத்தி வைத்து நேர்காணல் நடத்தும் ஒளிபரப்பாளன் போன்ற வசீகரமான தோரணைகளோடு முசாபர் கேட்க, அமேயர் பாதிரியார் யோசிக்காமல், அவனிடம் சொன்னார் – சொல்லு. அவருக்கு ஏதாவது பேச வேண்டும். அல்லது கேட்க வேண்டும். அல்லது அந்த புராட்டஸ்டண்ட் கிறிஸ்துவப் பெண்மணி இறங்கிப்…
ஹதிம் தாய்னா என்ன அச்சன்? முசாபர் கேட்டபடியே எதிர் இருக்கையில் உட்கார்ந்து, மேலே போட்டிருந்த ஓவர்கோட்டைக் கழற்றி அடுத்த இருக்கையில் வீசினான். சின்ன வயசிலே நான் பார்த்த சினிமா. இதை மட்டும் சொல்லி விஷயத்தைக் கடந்து போவதில் அவசரம் காட்டினார் அமேயர் பாதிரியார். பேச்சை மாற்றவோ என்னமோ, முசாபர் கால்டர்டேல் தாண்டி இந்த ரயிலில், அதுவும் அவர் இருக்கும் ரயில் பெட்டியில் ஏறி நொடியில் தலை காட்டிய மாய வினோதத்தைப் பற்றி ஆர்வத்தோடு…
வாழ்ந்து போதீரே அத்தியாயம் முப்பத்திநாலு கால்டர்டேலில் இருந்து லீட்ஸ் ஒரு மணி நேரப் பயணம். அங்கே இருந்து லண்டன். அது இன்னொரு மூணு மணி நேரம். ரெண்டும் ரெண்டு கம்பெனி ரயில்களில். கால்டர்டேலில் ஏறி உட்காரும் ரயில் ரொம்பப் பழையது. பிரிட்டீஷ் சாம்ராஜ்யம் போன நூற்றாண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தி அறுபது வருடம் அங்கே சகலமான பிரஜைகளும் நெருங்கி அடித்து உட்கார்ந்து மரப் பலகை ஆசனங்களைத் தேய்த்து, அப்புறம் திரும்ப இங்கிலாந்துக்கு மறு ஏற்றுமதி…
வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுப்பில் நான்காவது நாவல் -அடுத்த சிறு பகுதி நந்தினி அவன் தோளை ஆதரவாகத் தழுவி அவனையும் கட்டிலுக்கு இழுத்தாள். டெலிபோன் டைரக்டரியில் கடைசியாகப் படித்த பெயரை நினைவுக்குக் கொண்டு வர முயன்றபடி வைத்தாஸ் அவளோடு சரிந்தான். எமிலி நாலு நாளாக பழைய காலத்தைக் கனவாகக் காண்கின்றாளாம். அவள் இருந்திராத காலம். அவளுக்கு ஏற்பட்டிருக்காத அனுபவங்கள் அதெல்லாம். அவன் அணைப்பில் இருந்தபடி நந்தினி சொன்னாள். அணைக்காத ஒற்றை…
வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுப்பில் நான்காவது நாவல். அதிலிருந்து அடுத்த சிறு பகுதி —————————————————————————————————————————————— பக்கத்தில் அடிக்கடி கதவு திறந்து மூட மேலும் கீழும் போய்வர இயங்கும் லிப்டின் கதவுகள் மூடிய நுழைவு வாசல் இருந்தாலும், எந்த லிப்டும் நந்தினி இருக்கும் தளத்துக்கு வராததால் இங்கே இவர்களைத் தவிர யாரும் இல்லை. நட்பு நாட்டு அதிபருக்கும் தூதுவருக்கும் இந்த நாட்டரசு அளிக்கும் அதிக பட்ச மரியாதையும் பாதுகாப்பும் அழுத்தமாகத் தெரியும் சூழல்….