Archive For The “பொது” Category
வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது- அடுத்த சிறு பகுதி வாழ்ந்து போதீரே அத்தியாயம் முப்பத்தொன்று ராத்திரி ஏழரை மணிக்கு நகரம் உறங்கப் போயிருந்தது. எண் எழுதிய கதவுப் பலகைகளைச் சரியாக எடுத்து வைத்துக் கடைகளை அடைக்கும் வேலை தெருவெங்கும் மும்முரமாக நடக்க, வீதிக் கோடி நூலகத்தின் அறைகள் ஒவ்வொன்றாக இருள் அணிந்தன. தொடர்ந்து நூலகத்தின், மணிகள் அலங்கரிக்கும் பெரிய வாசல் கதவுகளும் அடைபட்டுக் கொண்டிருக்க, ஓரத்துப் படிகள் வழியே…
அரசூர் நாவல் வரிசையில் நான்காவது -வாழ்ந்து போதீரேயில் இருந்து அடுத்த சிறு பத்தி – என்ன யோசனை? அவன் சொல்லி முடிப்பதற்குள் சிரித்தபடி குளியலறைக் கதவு அடைத்துத் திரும்ப உள்ளே போனாள். அவனுக்கு வேண்டித்தான் இருந்தது. அவர்கள் அங்கிருந்து கிளம்பும்போது மழை சிறிதும் இல்லாத, சூரியன் மித வெப்பமாகப் படியும் காலை ஒன்பது மணி. நாலு வழி சந்திப்பில் பஸ்ஸும், லாரியும், ஒன்றிரண்டு கார்களும், ரிக்ஷா வண்டிகளும் இடத்தை அடைக்க, போக வழி தெரியாமல்…
வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் நான்கில் நான்காவது. அதிலிருந்து அடுத்த சிறுபகுதி சரியாக காலை எட்டு மணிக்கு வந்திடு திலீப் என்று கட்டளையிட்டிருந்தாள் நடாஷா. அவள் சொன்னபடி உடனுக்குடன்செயல்பட வேண்டும் என்பது பிஸ்கட் குத்தா மற்றும் பெரியம்மா ஆணை. டூமா என்ற சோவியத் நாடாளுமன்றத்தில் பரபரப்பாகச் செயல்படும் உறுப்பினரின் மகளாம் நடாஷா. கட்சியில் முக்கியமானவர் அவர். ஐரோப்பிய அரிவாளும் ரஷ்ய சுத்தியலும் சிகப்பில் எழுதிய சீனப்பட்டுத் துணிக்…
என் நாவல் 1975 -எமர்ஜென்சி காலம் பற்றிய நாவல் சிறு பகுதி சமர்ப்பணம் பெருந்தலைவர் காமராஜருக்கு சாற்றுகவி வெண்பா ”துயிலேறும் மாலும், மயிலேறும் வேலும் கயிலையின் சூலமும் காப்பு – ஒயிலான கற்பகமும் சேர்ந்துமை காத்திடுவார், உம்கதையை நற்பொருள் நாவல் சிறப்பு’’….! கிரேஸி மோகன் முன்னுரை தன் வரலாறும் புனைவும் கலந்த பயோபிக்ஷன்…
அரசூர் நாவல் நான்காவது – வாழ்ந்து போதீரே. அடுத்த சிறு பகுதி நாவலில் இருந்து ஜன்னலில் தட்டித் தட்டி மழை கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்ல அவர்கள் இருவருக்கும் நேரம் இல்லை. சரியாக காலை எட்டு மணிக்கு வந்திடு திலீப் என்று கட்டளையிட்டிருந்தாள் நடாஷா. அவள் சொன்னபடி உடனுக்குடன்செயல்பட வேண்டும் என்பது பிஸ்கட் குத்தா மற்றும் பெரியம்மா ஆணை. டூமா என்ற சோவியத் நாடாளுமன்றத்தில் பரபரப்பாகச் செயல்படும் உறுப்பினரின் மகளாம் நடாஷா. கட்சியில் முக்கியமானவர்…
வாழ்ந்து போதீரே = அரசூர் நாவல் நான்கு – அடுத்த சிறு பகுதி இங்கே போ வரேன். அவள் அலமாரிப் பக்கம் நடந்தாள். அங்கே பெட்டியில் இருந்து எடுத்ததை அவன் பார்க்க, வெட்கத்தோடு கண்களைத் தாழ்த்திக் கொண்டாள் கொச்சு தெரிசா. நல்லதாப் போச்சு என்று மட்டும் சொன்னான் சங்கரன். முசாபர் கொண்டு வந்திருந்த ஆணுறைகளில் மிச்சம் இருந்தவை அவை. மழை ஈரமும் இருட்டும் நிலையாகத் தங்கி இருந்த அறையில் கொச்சு தெரிசாவின் கண்ணுக்குள்…