Archive For The “The Wagon Magazine” Category
”தீபாவளிக்கு துணி எடுக்க லோன் வாங்க, இருபதம்சத் திட்டத்திலே எந்த அம்சம் சரிப்படும்?” நிருபர் அக்கறையாக விசாரித்தார். “அது ஐந்தம்சத் திட்டத்திலே இல்லே வரும்? குடும்பக் கட்டுப்பாடு”. கேஷியர் கருப்பையா சீரியஸாகச் சொன்னார். “குடும்பத்தைக் கட்டுப்படுத்தினா, லோனே தேவை இல்லையே”, என்றார் மேனேஜர். எமர்ஜென்சி அறிவித்தபின் வரும் இரண்டாவது தீபாவளி இது. சின்னக் கரடி என்று பெயர் கொண்ட சிங்கம்புலி சைக்கிளில் வந்து பேங்க் எதிரே கால் ஊன்றி நின்றபடி மெகஃபோனில் கூவினார்: “வங்கிகள் வாங்கிகளாக இருக்கக்…
நான் எழுதிய அரசூர் நான்கு நாவல் வரிசையில் (அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே) இரண்டாம் நாவல் விஸ்வரூபம் பற்றி இணையத்தில் நண்பர் வித்யா ஆனந்த் எழுதியிருப்பதும், என் குறிப்புகளும். வித்யா ஆனந்த் ————— காலத்தை நேர்கோடாகவே பார்த்துப் பழகிய நமக்கு அதை சிதறிய துணுக்குகளாகக் காட்டி ஒரு வித்தியாசமான விருந்து படைக்கிறது இரா முருகன் EraMurukan Ramasami அவர்கள் எழுதியுள்ள விஸ்வரூபம். இந்தக் கதையின் prequel அரசூர் வம்சம் படித்துவிட்டு இதைப் படித்தால்…
18 அக்டோபர் 2018 வியாழக்கிழமை அரசூர் வம்சம் ஆங்கில மொழிபெயர்ப்பு 2008-ல் வெளியாகி, அந்த ஆண்டின் க்ராஸ்வேர்ட் விருதுக்கான குறும்பட்டியலில் இடம் பெற்றது. பத்தாண்டுகள் கழித்து, அரசூர் நாவல்களில் இரண்டாவதான ‘விஸ்வரூபம்’ ஆங்கில மொழியாக்கத்தை, சரஸ்வதி பூஜை தினமான இன்று தொடங்கி இருக்கிறேன். மற்ற எழுத்தாக்கங்களும் திட்டமிட்டபடி நடந்து கொண்டிருக்கின்றன. வாணியைச் சரண் புகுந்தேன் – அருள் வாக்களிப்பாள் எனத் திடமிகுந்தேன் பேணிய பெருந்தவத்தாள் நிலம் பெயரளவும் பெயர் பெயராதாள். சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்
பரோட்டாவும், சால்னாவும் வர வயிறு திகுதிகு என்று பற்றி எரிந்தது. வீட்டில் அசைவம் விலக்கு. பரோட்டா சைவ வேஷம் போட்டுக் கொண்டு சாத்வீகமான சிநேகிதமான குருமா, சாம்பார், சட்னியோடு நுழையக்கூட அனுமதி இல்லை. பிரியாணிக்கு பூணூல் போட்டு அடையாளமே இல்லாமல் சாத்வீகமாகப் போன விஜிடபிள் பிரியாணியும், காய்கறி குருமாவும் கூட விலக்கப் பட்ட பொருட்கள். எனவே இங்கே, மைதாமாவு பரோட்டாவை பக்கவாத்தியங்களோடு ஒரு பிடி பிடித்தேன். ஜெபர்சன் கொறித்தார். “நீங்க இடதுசாரி கம்யூனிஸ்ட், வெங்கு வலது சாரியா?”…
நயாகரா பற்றியே நல்லகவி செய்ய தயாரா முதலெதுகை வேணாம் –தயவுசெய் நண்பா புலர்காலை சிற்றின்பம் எண்ணாது வெண்பா இயற்றலாம் வா நயாகரா பற்றியே நல்லகவி செய்ய தயார்காண் தொடக்கம் வயாக்ரா –அயராதே நண்பாஎம் டைம்ஸோனில் நள்ளிரவு என்தோழி செண்பா அருகில் இருப்பு மண்ணரிப்பு ஆய்வாம் மடைமாற்றி நய்யாக்ரா தண்ணியின்றித் தான்தூர்த்துத் தக்கவழி – கண்டாரே திண்ணம் அருவி திரும்பப் பெருகிவரும் மண்கொள்ளை அங்கில்லை காண் https://www.dailymail.co.uk/news/article-1338793/Niagara-Falls-ran-dry-Photos-moment-iconic-waterfall-came-standstilll.html The day Niagara Falls ran dry: Newly-discovered photos…
ஓடியே பந்துவீசி ஓங்கி அதையடித்துத் தேடியே சிக்ஸராகத் தேவதையர் – ஆடிடுவர் ஆணாடப் பெண்நடனம் அஃதுபோல் தாமடித்துப் பெண்ணாட ஆண்நடனம் என்று? https://www.indy100.com/article/nfl-male-cheerleaders-women-new-orleans-saints-8534031 ஆடிப் பெருங்காற்றில் அம்மி பறப்பதுபோல் ஆடி அலைக்கழிந்து செய்திசொல்வோம் – தேடி புயல்தகவல் பார்த்து செயல்மறக்கப் பின்னால் பயல்நடப்பான் சும்மா அசைந்து https://www.indy100.com/article/hurricane-florence-latest-updates-path-weatherman-video-death-toll-8538841 இங்கேயும் தேசபக்தி என்றால் இதுவென்று சங்கூதக் கூட்டமுண்டு கண்பனித்து – பொங்கி குதிப்பார் கொடியசைப்பர் குப்பாயம் போடார் எதிர்கொள்வர் ஃப்ளாரன்ஸ் புயல் https://www.indy100.com/article/hurricane-florence-latest-shirtless-man-american-flag-myrtle-beach-south-carolina-8538871 பானாசோ நிக்கமைத்து வேணும்போல் பேரொலியை…