Archive For The “இது புதுசு” Category

வேதத்தில் ஏறிய ஃப்ரான்சிஸ் தாணுவுக்குக் கிடைத்த புதையல்

By |

வேதத்தில் ஏறிய ஃப்ரான்சிஸ் தாணுவுக்குக் கிடைத்த புதையல்

பிரான்சிலிருந்து அந்தக் காலத்தை அடுத்து வந்த யாரோ நூல் நிலையத்துக்குக் கொடுத்திருக்கலாம் என்று கருத்துச் சொன்னாள் நடாஷா.  கதவு திறந்து சாயாவும் பரிப்பு வடைகளும் இன்னொரு முறை அன்போடு பரிமாறப்பட்டன.   அவர்களைக் கனிவுடன் பார்த்தபடி, முதலிரவுக்குப் புதுமணத் தம்பதியரை அனுப்பி வைத்து வெளியே கதவு அடைக்கும் அன்பான சுற்றமும் நட்பும் போல நூலக ஊழியர்கள் சாந்தமும் புன்சிரிப்புமாக வெளியேறினார்கள்.   திலீப் எழுந்து ஏதோ தேடினான். என்ன வேணும் என்றாள் நடாஷா. டாய்லெட் போகணும்.  …




Read more »

வாடர்லூ போன நெப்போலியன் – போனி வெண்ட்டூ வாடர்லூ வெ அய் யாஆ

By |

அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவதான வாழ்ந்து போதிரேயில் இருந்து அடுத்த  ஈடு   அப்பாவித்தனத்தை வெளிச்சம் போடும் அவனுடைய முகபாவத்தை நடாஷா ரொம்பவும் ரசித்துப் புன்னகை செய்தபடி இருந்தாள்.   நூலகரும், அலமாரிகளும் இல்லாவிட்டால் அவள் வேறு விதமாகச் செயல்பட்டிருப்பாள் என்று திலீப் செய்ய முற்பட்ட  கற்பனை அகல்யாவை பாந்த்ராவில் சகலரும் பார்க்க அவன் நிதானமாக முத்தமிடுவதில் நீட்சி பெற, பிஸ்கட் சாஸ்திரியைப் புட்டத்தில் உதைத்துத் தள்ளி முடித்து வைத்தான் அவன்.   வெறுப்பும் வேட்கையுமாக…




Read more »

ஆரோமல் உண்ணி தன் சொந்தம் கொட்டாரத்தில் காகிதத்தில் எழுதி ராஜ்ஜியம் பரித்தபோது

By |

ஆரோமல் உண்ணி தன் சொந்தம் கொட்டாரத்தில்  காகிதத்தில்  எழுதி  ராஜ்ஜியம் பரித்தபோது

பரிப்பு வடையா, பருப்பு வடையா?   திலீப் குழப்பமாகக் கேட்டான்.   ஹெ, இந்தத் தரங்கெட்ட பாண்டிகள், என்றால் மதராஸ் மாகாணத் தமிழர்கள், ஒரு வார்த்தையையும் சரியாகப் பேசுவதில்லை. பருப்பு என்று பிழையாகச் சொல்வது அவர்களின் பரம்பரைக் கெட்ட பழக்கம் என்று புன்னகையோடு திலீப்பின் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய முனைந்தார் ஞானம் ஒளிர்ந்த நூலகர்.   புத்தறிவுத் தெளிவோடு அவனும் நடாஷாவும் இன்னொரு தடவை இன்னும் புராதனமான புத்தகங்கள் பற்றிக் கேட்க, அவருக்கு நினைவு வந்திருந்தது. பரிப்பு…




Read more »

பரிப்பு வட-யா பருப்பு வடையா? வெள்ளிமீன் பூச்சிகள் ஊரும் அலமாரி முன் விவாதம்

By |

பரிப்பு வட-யா பருப்பு வடையா? வெள்ளிமீன் பூச்சிகள் ஊரும் அலமாரி முன் விவாதம்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது- அடுத்த சிறு பகுதி வாழ்ந்து போதீரே   அத்தியாயம்   முப்பத்தொன்று                 ராத்திரி ஏழரை மணிக்கு நகரம் உறங்கப் போயிருந்தது. எண் எழுதிய கதவுப் பலகைகளைச் சரியாக எடுத்து வைத்துக் கடைகளை அடைக்கும் வேலை தெருவெங்கும் மும்முரமாக நடக்க, வீதிக் கோடி நூலகத்தின் அறைகள் ஒவ்வொன்றாக இருள் அணிந்தன.  தொடர்ந்து நூலகத்தின், மணிகள் அலங்கரிக்கும் பெரிய வாசல் கதவுகளும் அடைபட்டுக் கொண்டிருக்க, ஓரத்துப் படிகள் வழியே…




Read more »

தோட்ட வீட்டில் நீத்தார் நினவஞ்சலி அச்சடிக்கும் மத்தாயு மாப்பிள்ள

By |

அரசூர் நாவல் வரிசையில் நான்காவது -வாழ்ந்து போதீரேயில் இருந்து அடுத்த சிறு பத்தி – என்ன யோசனை?   அவன் சொல்லி முடிப்பதற்குள் சிரித்தபடி குளியலறைக் கதவு அடைத்துத் திரும்ப உள்ளே போனாள். அவனுக்கு வேண்டித்தான் இருந்தது.   அவர்கள் அங்கிருந்து கிளம்பும்போது மழை சிறிதும் இல்லாத, சூரியன் மித வெப்பமாகப் படியும் காலை ஒன்பது மணி. நாலு வழி சந்திப்பில் பஸ்ஸும், லாரியும், ஒன்றிரண்டு கார்களும், ரிக்‌ஷா வண்டிகளும் இடத்தை அடைக்க, போக வழி தெரியாமல்…




Read more »

உள்ளிப்பூண்டு மணக்கும் ஓர் ஊர்

By |

உள்ளிப்பூண்டு மணக்கும் ஓர் ஊர்

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் நான்கில் நான்காவது. அதிலிருந்து அடுத்த  சிறுபகுதி             சரியாக காலை எட்டு மணிக்கு வந்திடு திலீப் என்று கட்டளையிட்டிருந்தாள் நடாஷா. அவள் சொன்னபடி உடனுக்குடன்செயல்பட வேண்டும் என்பது பிஸ்கட் குத்தா மற்றும் பெரியம்மா ஆணை.  டூமா என்ற சோவியத் நாடாளுமன்றத்தில் பரபரப்பாகச் செயல்படும் உறுப்பினரின் மகளாம் நடாஷா. கட்சியில் முக்கியமானவர் அவர். ஐரோப்பிய அரிவாளும்  ரஷ்ய சுத்தியலும் சிகப்பில் எழுதிய சீனப்பட்டுத் துணிக்…




Read more »