Archive For The “இது புதுசு” Category
என் நாவல் 1975 -எமர்ஜென்சி காலம் பற்றிய நாவல் சிறு பகுதி சமர்ப்பணம் பெருந்தலைவர் காமராஜருக்கு சாற்றுகவி வெண்பா ”துயிலேறும் மாலும், மயிலேறும் வேலும் கயிலையின் சூலமும் காப்பு – ஒயிலான கற்பகமும் சேர்ந்துமை காத்திடுவார், உம்கதையை நற்பொருள் நாவல் சிறப்பு’’….! கிரேஸி மோகன் முன்னுரை தன் வரலாறும் புனைவும் கலந்த பயோபிக்ஷன்…
அரசூர் நாவல் நான்காவது – வாழ்ந்து போதீரே. அடுத்த சிறு பகுதி நாவலில் இருந்து ஜன்னலில் தட்டித் தட்டி மழை கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்ல அவர்கள் இருவருக்கும் நேரம் இல்லை. சரியாக காலை எட்டு மணிக்கு வந்திடு திலீப் என்று கட்டளையிட்டிருந்தாள் நடாஷா. அவள் சொன்னபடி உடனுக்குடன்செயல்பட வேண்டும் என்பது பிஸ்கட் குத்தா மற்றும் பெரியம்மா ஆணை. டூமா என்ற சோவியத் நாடாளுமன்றத்தில் பரபரப்பாகச் செயல்படும் உறுப்பினரின் மகளாம் நடாஷா. கட்சியில் முக்கியமானவர்…
வாழ்ந்து போதீரே = அரசூர் நாவல் நான்கு – அடுத்த சிறு பகுதி இங்கே போ வரேன். அவள் அலமாரிப் பக்கம் நடந்தாள். அங்கே பெட்டியில் இருந்து எடுத்ததை அவன் பார்க்க, வெட்கத்தோடு கண்களைத் தாழ்த்திக் கொண்டாள் கொச்சு தெரிசா. நல்லதாப் போச்சு என்று மட்டும் சொன்னான் சங்கரன். முசாபர் கொண்டு வந்திருந்த ஆணுறைகளில் மிச்சம் இருந்தவை அவை. மழை ஈரமும் இருட்டும் நிலையாகத் தங்கி இருந்த அறையில் கொச்சு தெரிசாவின் கண்ணுக்குள்…
நான் எழுதியிருக்கும் புனைவிலக்கியம் கிட்டத்தட்ட முழுமையாகத் தற்போது மறுபதிப்பு கண்டுள்ளது. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடுகள் இவை. 1) மூன்று விரல் – நாவல் 2) அரசூர் வம்சம் – நாவல் 3) விஸ்வரூபம் – நாவல் 4) அச்சுதம் கேசவம் – நாவல் 5) வாழ்ந்து போதிரே – நாவல் 6) 40, ரெட்டைத் தெரு 7) தியூப்ளே நாவல் 8) 1975] நாவல் 9)பீரங்கிப் பாடல்கள் ( மலையாளத்தில் இருந்து கல்ட் க்ளாசிக் மொழிபெயர்ப்பு-லந்தன்…
வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது. அதிலிருந்து அடுத்த சிறு பகுதி இங்கிலாந்தில் இருந்து வந்திருப்பதால் தூதரகம் அனுமதிக்காமல் எங்கும் கையெழுத்திடத் தனக்கு இயலாது என்று கொச்சு தெரிசா சொன்னதும் உடனே சரியென்று பின்வாங்கி அவர்கள் போனார்கள். ஏனோதானோ என்று ஆக்கி வைத்த ஊண் அது. பரிமாறவும் மிகச் சாவதானமாகவே வந்தார்கள். கடனே என்று இலையில் வட்டித்த சோறு சரியாக வேகாததால் காய்கறிகளை புளிக்காடியில் அமிழ்த்தி மெல்ல வேண்டிய கட்டாயம்….
வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவல் – அடுத்த சிறு பகுதி இதெல்லாம் சரிதானா? இல்லாவிட்டால் தான் என்ன? வசந்தி அவன் நினைப்பில் ஒரு வினாடி எழுந்து, அடர்ந்து நெய்த மழைத் திரிகளில் கரைந்து போனாள். சங்கரன் கொச்சு தெரிசாவை அணைத்துக் கொண்டான். காயலும் வானமும் நீர்த் திரையால் இணைய அடர்ந்த மேகங்கள் நின்று சுரக்க, மழை சீராகப் பெய்த வண்ணம் இருந்தது. வாழ்ந்து போதீரே அத்தியாயம் இருபத்தொன்பது …