Archive For The “இது புதுசு” Category

காயலில் பறந்த ஒற்றைப் பட்சியோடு காதலும் சூழ்ந்த தருணம்

By |

வாழ்ந்து போதீரே -நான்கு நாவல் அரசூர் தொகுப்பில் நான்காம் நாவலிலிருந்து அடுத்த ஒன்று\           அவன் சொல்லிப் பதினைந்து நிமிடம் சென்று அழகான நெட்டி, மற்றும் சன்னமான மர வேலைப்பாட்டோடு ஒரு படகு வீடு கம்பீரமாக மிதந்து வந்து படகுத் துறைப் பலகைக்கு அடுத்து நின்றது.   ஏறிக் கொண்டார்கள். அடுத்த மழை ஆர்ப்பாட்டமாக நானும் வருகிறேன் என்று சேர்ந்து கொண்டது.   படகு புறப்பட்டபோது படகுக்காரன் சங்கரனையும் கொச்சு தெரிசாவையும்,…




Read more »

யந்திரம் என்ன ஆச்சு தெரியலியே என்றபடி ஜோசியர் காலத்துக்குள் ஓடினார்

By |

வாழ்ந்து போதீரே -அரசூர் நாவல் நான்கு – அடுத்த சிறு பகுதி கொச்சு தெரிசா மேல் இருந்து வந்த மெல்லிய யுதிகோலன் வாடை சங்கரனுக்குப் பிடித்திருந்தது. இங்கிலாந்தில் மீன் பஜ்ஜி விற்கிற பெண். அழகானவள். அவனுக்கு உறவு வேறு. அவனை ஈர்க்கிறவள். அவனால் ஈர்க்கப்படுகிறவள்.  தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட மோகம் அது. தானே வந்து கவிவது. பற்றிப் பிடிக்கக் காத்திருந்த மாதிரி மழை நாளில் மேலோங்கி எழுகிறது. அவனுக்கு வேண்டியிருக்கிறது. அவளுக்கும்.   இங்கே இருந்து, கடலோரமாகப் படகில்…




Read more »

சோபான சங்கீதம் கேட்கச் சகிக்காது -கிழ விமர்சகர் அபிப்பிராயம்

By |

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் 4 – அடுத்த சிறு பகுதி       சின்னச் சங்கரன் குளித்து, புட்டும் கடலையும் காலை ஆகாரமாகக் கழித்து பந்தலில் வந்து நின்று எடக்க தட்டி, மாரார் பாடிய சோபான சங்கீதத்தைக் கேட்டபடி கொஞ்ச நேரம் நின்றான்.   கேரளா பக்கத்தில் சோபான சங்கீதம் என்று பாடுவார்கள். சகிக்காது.   இப்படி தில்லி ப்ரஸ் கிளப் கேண்டீனில் மங்களூர் போண்டா சாப்பிட்டு விட்டு வெற்றிலைச் சீவலைக் குதப்பிக் கொண்டு, பல்…




Read more »

ஆட்டக் கலைஞர்களும் நிர்வாகிகளும் சதா விழா நினைவிலிருந்த விழாக்காலம்

By |

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவலின் சிறு பகுதி வாழ்ந்து போதீரே   அத்தியாயம் இருபத்தெட்டு                 நாட்டுப்புறக் கலை, கலாச்சார விழாவும் மாநாடும் எல்லோர் மீதும் பரிபூர்ணமாகக் கவிந்திருந்தது. ஆட்டக் கலைஞர்கள் மட்டுமில்லாமல் பிரதிநிதிகளும் கூட, நடக்கும் போதோ, இருந்து பேசும்போதோ அதே நினைவாக இருந்தார்கள். அவர்கள் கை கால் அசைவிலும், கண் அசைவிலும் அவ்வப்போது நளினம் தெறித்துக் காட்சி வைப்பது தன்னிச்சையாக நிகழ்ந்தது.   நாலு நாள் கொண்டாட்டம் இன்றைக்கு முடிவடைகிறது. மூன்று…

Read more »

உடுத்தியதில் ஒரு சிறகு உதிர்ந்தால் ஒரு அழகு, ஆடும்போது உ;டலில் ஒட்டி இருந்தால் வேறொரு அழகு

By |

வாழ்88ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியின் நான்காம் புதினம். அதிலிருந்து – , தோகை உதிர்ந்து விழுந்தால் கஷ்டம் தான். அதுதானா என்னமோ, பெண்கள் இந்த நடனத்தை ஆடுவதில்லை. உடுத்தி வந்தா ஒரு அழகு. உதிர்ந்து விழுந்தா இன்னொரு அழகு. எனக்கு ரெண்டும் பிடிக்கும். அனுபவிக்கத்தான் கொடுப்பினை இல்லை.   May 18 2024 அவன் முகத்தை நாலு கிலோ பனை நுங்கு மேலே அழுத்தும் நிதானத்தில் நிறுத்திச் சொன்னான். கண்கள் சிக்கென்று உடுப்பு…

Read more »

ஒருமித்து முழங்கும் முழவுகளின் பின்புலத்தில் காதல் சொன்னார்கள்

By |

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது-அடுத்த சிறு பகுதி   ஜாக்கிரதையாக பாதிரியாரின் நலம் விசாரிக்க, கன்னத்தில் குழி விழச் சிரித்த கொச்சு தெரிசா என்ற அழகுப் பெண் சொன்னாள் –   அமேயர் பாதிரியாருக்கு வாடிகன் மாநகரில் போப்பரசருடைய புனித  வசிப்பிடத்தில் தங்கி இருந்து தேவ ஊழியம் செய்ய வாய்ப்புக் கிடைத்து இத்தலி போக இருக்கார். இனி திரும்ப இங்கிலாந்தோ இங்கேயோ வருவாரான்னு தெரியலை. பிதாவுக்கு ஸ்தோத்திரம்.   அவசரமாகத் தன்…




Read more »