Archive For The “இது புதுசு” Category

ஆவி போனாலும் ஆசை போகாத காலப் பயணி ஒருவர் அலைந்த கதை

By |

ஆவி  போனாலும் ஆசை போகாத காலப் பயணி  ஒருவர் அலைந்த கதை

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவது அதிலிருந்து அடுத்த சிறு பகுதி ]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]] ராஜா முந்திக் கொண்டு தான் ஏன் அங்கே இருக்கிறேன் என்பதற்கு யாரும் கேட்காமலேயே காரணம் சொன்னார். கிழவன் எதுக்கு வந்திருப்பான் என்று அவருக்குத் தெரியும். கூட்டத்தில் கலந்து இருக்கப்பட்ட நடுவாந்திர வயசுப் பெண்டுகளிடம் சில்மிஷம் செய்ய இல்லாமல் வேறே எதுக்கு? அவன் உயிரோடு இருந்த காலத்தில் ரெண்டு பேரும் அபூர்வமாக உட்கார்ந்து சீமைச் சாராயம் மாந்திக் கொண்டிருந்த ஒரு…




Read more »

யந்திரம் நிறுத்த வந்ததாக சோசியக்காரர் சொன்ன படிக்கு

By |

யந்திரம் நிறுத்த வந்ததாக சோசியக்காரர் சொன்ன படிக்கு

வாழ்ந்து போதீரே = அரசூர் வம்ச நான்கு நாவல் தொகுதியில் நான்காவது – அதிலிருந்து அடுத்த சிறு பகுதி அங்கே, நம்ம ஊரில், ஜோசியக்கார அய்யர் யந்திரம் நிறுத்தறேன், தேவதையை பிரதிஷ்டை செய்யறேன் என்று ஊர் சௌக்கியப்பட ஏதோ செய்கிறதாக வராகன் தட்சிணை வாங்கினால், இங்கே அதே தரத்தில் இருக்கப்பட்ட மனுஷர்கள் பாயசம் விற்றுக் காசு பார்க்கிறார்கள் போல. அதை வசூலிக்கிற வகையில் இந்த குட்டையனும் நெட்டையனுமான பனியன் சகோதரர்களும் கூடுதல் வருமானம் தேடுகிறார்களோ. நடக்கட்டும்.  …




Read more »

எலுமிச்சம்பழத்தை கொடுத்துத் திருப்பி வாங்கும் அரசூர் மரியாதை

By |

எலுமிச்சம்பழத்தை கொடுத்துத் திருப்பி வாங்கும் அரசூர் மரியாதை

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுப்பில் நான்காம் நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி சின்ன சரிகை தலைப்பாக வழியும் வெள்ளைச் சேலையில் சகலமான வயதுப் பெண்களும். பெண் குழந்தைகள் கூட வெள்ளைப் பாவாடையோடு தான் வளைய வருகிறார்கள். ஆண்களோ, தழையத் தழைய வேட்டி உடுத்தி, ஒண்ணு, இடது பக்கம் கணுக்காலில் இருந்து வேட்டி நுனியைத் தூக்கிப் பிடித்தோ, அல்லது சரி பாதியாக மடித்து முழங்காலுக்கு மேலே பட்டையாகக் கட்டியோ எந்தப் பரபரப்பும் இல்லாமல்…




Read more »

வயசாக வயசாக யாராவது காலில் விழுந்து கும்பிட்டால் நல்லாத்தான் இருக்கு

By |

வயசாக வயசாக யாராவது காலில் விழுந்து கும்பிட்டால் நல்லாத்தான் இருக்கு

வாழ்ந்து போதீரே ] அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவதிலிருந்து அடுத்த பகுதி ஊரோடு வெள்ளை உடுத்தியிருக்கிறார்கள். ஒண்ணு, இங்கே சாயக்காரன் எல்லாரும் அஸ்தமித்துப் போயிருக்கணும். இல்லையோ, சாயம் துணியில் ஏறாமல் போய் அவன்களை ஊருக்கு வெளியே வேலிக்காத்தான் மண்டிய தரிசு பூமி நெடுக, உடுப்பைப் பிடுங்கிக் கொண்டு முண்டக் கட்டையாக ஓட ஓட விரட்டியிருக்கணும். அப்புறம், சாயமுமாச்சு, சாராயமுமாச்சு, இருக்கவே இருக்கு  வெளுப்பு என்று வைராக்கியமாக உடுத்த ஆரம்பித்து இப்போது வெள்ளைப் பட்டியாகிப் போயிருக்கலாமோ இங்கே…




Read more »

ஆடத் தெரியாத தேவதைக்கு இங்கே இடம் இல்லை

By |

ஆடத் தெரியாத தேவதைக்கு இங்கே இடம் இல்லை

வாழ்ந்து போதீரே = அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவதிலிருந்து அடுத்த சிறு பகுதி ============================================================================= வைத்தாஸ் திருமேனி என்று யாரோ விளிக்கிற சத்தம். குடைக்கார சாமு.   ஒரு மழைக் காலத்தில் வைத்தாஸ் ஊருக்கு முதலில் வந்தது முதல் தனக்கு சிநேகிதமான சரித்திரத்தை வாய் நிறைய புட்டையும் கடலையும் அடைத்து மென்றபடி சாமு சொன்னபோது சுவரில் சார்த்தி வைத்திருந்த அவனுடைய குடையும் சுவாரசியமாகக் கேட்டது.   வைத்தாஸ் அடுத்த பெஞ்சில் உட்கார்ந்து பொதுவாகப் பார்த்துச் சிரித்தான்….




Read more »

வழக்கு முத்தச்சி வர்த்தமானங்கள்

By |

வழக்கு முத்தச்சி வர்த்தமானங்கள்

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவலில் அடுத்த சிறு பகுதி இங்கே   வருகிறாள்.   நந்தினி வருகிறாள்   அது போதும். வைத்தாஸ் மனம் முழுக்க நிம்மதி நிறைந்திருக்க, டாக்சி வந்து விட்டது என்று யாரோ வந்து சொன்னார்கள். ஆலப்புழையில் போய் ஒரு முழுக்கை ஜிப்பாவும் வேஷ்டியும் எடுக்க வேண்டும். இன்னும் இரண்டு நாள் இங்கே நிகழ்கலை மாநாட்டுக்காக இருக்க வேண்டி இருக்கிறது. கால் சராய் போக முடியாத இடங்களிலும் மடித்துக் கட்டிய வேட்டி…




Read more »