Archive For The “இது புதுசு” Category
வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் நான்கு – அடுத்த சிறு பகுதி இங்கே அரசூர் நாவல்கள் 1.அரசூர் வம்சம் 2. விஸ்வரூபம் 3. அச்சுதம் கேசவம் 4.வாழ்ந்து போதீரே = ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு ========================================================================= ஒன்பது மணிக்கு வந்தவர் இரண்டாம் கட்ட ராணுவத் தலைவர். ஓங்கு தாங்காக வளர்ந்த கெச்சலான இளையவர். இன்னும் விடலைப் பருவம் நீங்காமல் முகம் முழுக்கப் பருக்களாக வெடித்து வாரிக் கிடந்தது. இந்த வயதில் ராணுவத்தில் தொடக்க…
வாழ்ந்து போதீரே = அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காம் நாவல் பகிரப்படுகிறது, வாசித்து மகிழ்க குனிந்து வளைந்து காப்பி ப்ளாஸ்கை சிறிய மேஜையில் வைத்துப் போனாள் பணிப்பெண். இந்தப் பானம் பரிசோதிக்கப்பட்டது என்று அறிவித்தபடி பின்னோக்கி நடந்து வணங்கிப் போன பரிசோதனை அதிகாரியைத் தொடர்ந்து வந்த ஊழியர் பானம் அருந்த நல்ல நேரம் என்று அறிவித்துப் போனார். நந்தினி காப்பியைக் குவளையில் சரித்து அருந்த ஆரம்பித்தாள். அறை வாசலில் மரியாதையோடு நின்ற வீட்டு…
வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காம் நாவல் அடுத்த பகுதி இங்கே வாழ்ந்து போதீரே அத்தியாயம் இருபத்தொன்று – வாசலில் ஒருமித்து இசைக்கப்பட்ட வாத்திய இசை நந்தினியை எழுப்பியது. நாலு வயலின்கள் கூட்டாக மெல்ல உயர்ந்து சஞ்சரிக்க, ஓபோவும் குழல்களும், தரையில் நிறுத்தி வைத்து வாசிக்கும் ஒரு பிரம்மாண்டமான செல்லோவும் இசைப் பூத்தூவியபடி தொடர, முரசு ஒன்று ஓங்கி ஒலித்து அதிர்ந்து காலை ஏழு மணி என்றது. மேல் தளத்தின்…
வாழ்ந்து போதீரே – அரசூர் நான்காம் நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி – சடாரியும் நோட்ஸும் ]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]] யாரோ எதையோ பாடமாக எழுதினாலும் அதையெல்லாம் படித்து மாணவர்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். நான் எழுதும் கையேடுகளைப் படித்தாலே போதும் மூலத்தையும் அதன் மூத்த தலைமுறை ஆதிமூலத்தையும் பொருளோடு அறிந்த ஞானம் கிட்டும் என்றார். ஜப்பானிய மொழியில் அதற்கு சடாரி என்று ஒரு சொல் இருப்பதாகக் குறிப்பிட்டார். ஞான அனுபவம் என்றும் அதற்கு மேலும் பொருள் தரும்…
வாழ்ந்து போதீரே = அரசூர் நான்காம் நாவல் — அடுத்த சிறு பகுதி குதிரை வண்டியைக் கூப்பிடுங்க. மாரட் தெருவுக்குப் போயிடலாம். வழியிலே பத்து நிமிஷம் நிறுத்தினா காலைச் சாப்பாடும் முடிச்சுக்கலாம். கொச்சு தெரிசா விருப்பப்படி, வரிசையாக நின்ற வண்டிகளில் முதலாவது இவர்கள் ஏற நகர்ந்தது. வண்டிக் கூலியும், பேசிப் பழக மொழியும் இசைந்து வந்ததில் குதிரை வண்டிக்காரனுக்கு சந்தோஷமோ என்னமோ, வண்டியில் பூட்டியிருந்த கருப்புத் தோல் போர்த்த குதிரை துள்ளி ஓடியது. …
வாழ்ந்து போதீரே = அரசூர் நாவல் தொகுதியின் நான்காம் நாவல் அத்தியாயத்திலிருந்து ஒன்றும் இரண்டுமாக வாழைத் தாரும் இலையும் வாழைப் பூவும் ஏற்றி வருகிற டெம்போ வேன்களும், கருவாடு ஏற்றிப் போகும் காளைமாட்டு வண்டிகளும் கப்பி ரோடுகளில் தட்டுப்பட ஆரம்பித்த நேரம். பூவந்தி பூவந்தி என்று சொல்லியபடி பஸ் ஏஜண்டுகள் இடுப்பில் அழுந்தச் சொறிந்து கொண்டு சுற்றி வர, கசங்கிய காக்கி உடுப்பு அணிந்த க்ரூ கட் தலைமுடி டிரைவர்கள் டீக்கடைகளில் அரைச் செம்பு தண்ணீரில் வாய்…