Archive For The “இது புதுசு” Category
வாழ்ந்து போதீரே = அரசூர் நான்கு நாவல் தொகுதியின் நான்காம் நாவலில் இருந்து அவள் ஈர்க்குச்சி போலிருந்த கைகளால் அகல்யாவின் கன்னத்தில் வருடியபடி பாட ஆரம்பித்தாள் – அப்ஸரா ஆளி இந்த்ரபுரி துன் காலி அகல்யா ஷாலினியை மெதுவாக அணைத்துக் கொண்டாள். ஷாலினி பாட்டிலேயே மூழ்கி,சட்டென்று விலகி நின்றாள். லாவணி தொடர, ஒரு கால் இழுத்திருக்க மற்றதை மட்டும் ஊன்றி திரும்பத் திரும்ப இந்திரபுரி விட்டு அப்சரஸ் வந்த அதிசயத்தைப் பாடிக் கொண்டிருந்தாள். …
வாழ்ந்து போதீரே -அரசூர் நாவல் நான்காவது= சிறு பகுதி வரிசையாக வருவது தினம் ஐயோ, கஷ்டம். ஆத்துக்குக் கூட்டிண்டு வர பொண்டாட்டி கையை எடுத்து ரொம்பக் காரியமா யாராவது கஷ்கத்திலே திணிச்சுப்பாளா? எட்டு ஊருக்கு திவ்விய வாசனையா இருக்கு. குளிச்சேளோ இன்னிக்கு? அவள் சிரித்ததைப் பார்த்து அவனுக்கும் சிரிப்பு குமிழிட்டு வந்தது. திலீப்புக்கு இரண்டு விஷயங்கள் மனசிலானது. முதலாவதாக, இன்று காலை எந்தத் தடங்கலும் இல்லாமல் நடந்த கல்யாணமோ, அது முடிந்த நிச்சயத்தால் அவன் மேல்…
வாழ்ந்து போதீரே நாவல் = அரசூர் நாவல் வரிசை 4 = அடுத்த அத்தியாயத்தில் இருந்து கொட்டும் மழையில் டாக்சியை விட்டு இறங்கி பாண்டுப் சர்வமங்கள் சால் இருக்கும் குறுகலான தெருவில் அகல்யா நுழைந்தாள். தேங்கி இருந்த மழைத் தண்ணீரையும் பின்னால் ஒடுங்கிக் கிடந்த தெருவையும் பார்த்து, உள்ளே வந்தால் திருப்பிப் போக சிரமம் என்று தெரு முனையிலேயே நிறுத்தி விட்டார் டாக்சி டிரைவர். ஆனாலும் ரெக்சின் பை, லெதர் பேக், பூ மாலை,…
வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் நான்கு= தொகுதி ஸீரோ டிகிரி பப்ளிஷிங்க்ஸ் வெளியீடு – அடுத்த சிறுபகுதி மாதம் ஐநூறு ரூபாய் சம்பளம் வாங்கும், வட்ட டிபன் பாக்ஸில் அவல் உப்புமா எடுத்துப் போய் மத்தியான சாப்பாடு முடிக்கும் டைப்பிஸ்டுப் பெண்கள் மழைக் காலத்துக்குச் சற்றே முந்திய தூறல் சாயங்காலங்களில் அப்சரஸ் ஆவார்கள் என்று திலீப் நினைத்தான். அவன் கரம் பிடித்து வருகிற இவள் அவர்களில் கிரேட் ஒன் நிலை அப்சரஸ். நிமிஷத்துக்கு இருபது…
வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காம் நாவலில் இருந்து = ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு ============================================================================= அரசூர் தெரியுமா? அகிலா கேட்டாள். சிறிய சமோசாவைக் கடித்துக் கொண்டு தலையை இல்லை என்று ஆட்டினான் திலீப். இரானி ஹோட்டலில் மழைக்காக ஒதுங்க வருகிறவர்களின் கூட்டம் மெல்ல அதிகரித்துக் கொண்டிருந்தது. மழை தொடங்கப் போகிறது என்று பூஜை செய்த பிள்ளையாரைச் சதுர்த்தி முடிந்து விசர்ஜன் நேரத்தில் கடலில் இடும்போதே எல்லோருக்கும் தெரியும். கணபதியைக்…
வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி நூல் வெளியீடு – ஸீரோ டிகிரி பப்ளிஷிங் ============================================================== அகல்யா தாய் அகல்யா எழுந்து நின்று கை கூப்பினாள். சிரிப்பு குமிழிட்டு வரச் சொன்னாள் – சார், நான் உங்க பெண்ணு வயசு. தாய்ன்னு கூப்பிட்டா எங்க அம்மாவைக் கூப்பிடற மாதிரி இருக்கு. அவர் வாஞ்சையோடு அவளை நோக்கினார். நீ என் அம்மாவுக்கே அம்மா என்…